Wednesday 14 October 2020

 ஏழைகள் என்று சொல்லி சில மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவர்கள் போல் சிலாகித்து விடுகின்றனர்.

அடிப்படை சுகாதாரத்தை பேணி, சரியான படி உறங்கி, கிடைக்கும் காசில் உணவை தயாரித்து உண்டால் பாரதத்தில் ஏழைகள் இல்லை என்பதே உண்மை.

ஆனால், ஏழைகள் என்று சொல்லிக் கொண்டே வீட்டில் டிவி வைத்துள்ளார்கள். 

ஏழைகள் என்று சொல்லிக் கொண்டே மொபைல் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

ஏழைகள் என்று சொல்லிக் கொண்டே டாஸ்மாக், பீடி, பான் என சகிதமாக வாழுகிறார்கள்.

இன்னும் உச்சம் என்னவென்றால் ஏழைகள் என்று சொல்லிக் கொண்டே நிறைய பிள்ளைகளும் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஏழைகள் என்று சொல்லிக் கொள்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை பார்த்ததன் அடிப்படையில் தான் எழுதுகிறேன்.


ஆனால், இங்கே பலர் அரசை குற்றம் சாட்டவும், 

நாட்டின் மதிப்பை குறைத்து பேசவும் 

ஏழைகள் நலம் அது இதுவென்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

ஏழைகள் நலம் என்பதெல்லாம் ஓட்டு பொறுக்கவே......


நீங்கள் ஏழைகள் என்று கருதும் நபர்களை கூர்ந்து கவனியுங்கள். 

கெட்ட பழக்க வழக்கத்துக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று பாருங்கள். உண்மை புரியும்.

இதுதான் யதார்த்தம்......

No comments: