Showing posts with label Somnath temple. Show all posts
Showing posts with label Somnath temple. Show all posts

Wednesday 14 October 2020

சோமநாதர் ஆலயம்

 சோமநாதர் ஆலயம். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய உண்மை சரித்திரம்,

கி.பி. 1001ல் முஹம்மது கஜ்னி என்ற கொள்ளையன் செழிப்பாக இருந்த பாரத தேசத்தை நோக்கி தன் கவனத்தை திருப்பியதுதான் நம் நாட்டின் கொடூர சரித்திரத்திற்கு தொடக்கம். அச்சமயத்தில் பெரும் சக்ரவர்திகள் இல்லாமல் இருந்ததும் ஒரு பெரும் பின்னடைவு. சிற்றரசர்களால் ஆளப்பட்டிருந்த இன்றைய ஆப்கான் பகுதிகள், துருக்கிய கொள்ளைக்காரனுக்கு எளிதான விருந்தாகப் பட்டது. பல தடவை படையெடுத்து அவன் ஜெயபாலா என்ற அரசர் ஆண்டுவந்த இன்றைய பெஷாவர் என்ற பகுதியை பிடித்தான். பின்னர் அருமையான விளைநிலங்களை கொண்ட பஞ்சாப் பகுதிகளை அவன் பிடித்தான்.
அவன் பெரும்பாலும் ஹிந்துக்களின் கோவில்களை குறி வைத்தான். அக்காலங்களில் ஹிந்துக்கள் தனிப்பட்ட முறையில் சொத்துக்களை அதிகமாய் வைத்திருப்பதில்லை. மாறாக கோவில்களுக்கு அவற்றை வழங்கி விடுவார்கள். கோவில்களில் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருந்தன. அரசர்களுக்குள் போர் வந்தாலும் கோவில்களை யாரும் தாக்கும் வழக்கம் இல்லை. ஆனால் முஹம்மது கஜ்னியோ கொள்ளைக்காரன் ஆயிற்றே, அவனுக்கு ஏது தர்ம நெறிகள் ?
வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளை அவன் ஊடுறுவி, அழித்து பின் திரும்ப சென்று விடுவான். அவ்வாறு திரும்ப திரும்ப செய்து அவன் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் பயத்தை உண்டாக்கி இருந்தான். நாகர்கோட், தனேசர், மதுரா, கனௌஜ், கலிஞ்ஜர் மற்றும் சோமநாதபுரியில் அவன் இவ்வாறாக ஊடுறுவி, பேரழிவை உண்டாக்கி விட்டு திரும்பி சென்று விடுவான். செல்லும் போது பலரை அடிமைகளாக பிடித்துக் கொண்டு போய் மதமாற்றி விடுவான். இவ்வாறு முஹம்மதின் ஊடுறுவலால "சிந்தி ஸ்வாரங்கர் சபையை" சேர்ந்த மக்களும் பிற ஹிந்துக்களும் அவனின் மதமாற்றலில் இருந்து தப்பிக்க சிந்து பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
முஹம்மது கஜ்னி, ஆயிரக்கணக்கான ஹிந்து ஆலயங்களை அழித்தான். அதில் குஜராத்தில், சௌராஷ்ட்ரா பகுதியில் இருந்த‌ சோமநாதர் ஆலயமும் அடக்க‌ம். அந்த கோவில் மிக அற்புதமாய் இருந்த‌து. அதில் 300 இசைக் கலைஞர்கள், 500 நடன மங்கைகள், 300 பக்தர்களுக்கு முடியெடுக்கும் பணியாளர்கள் என பலர் பணி புரிந்தார்கள். அருமையான 56 தேக்கு தூண்களால் அந்த கோவில் நிறுவப்பட்டிருந்தது என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கி பி 1025ம் ஆண்டு கஜ்னி அதை காத்து நின்ற 50000 மக்களை கொன்றழித்து அதனை அழித்தான். அதை காத்து நின்றவர்களில் 90 வயதான கோக்னா ரானாவும் அடக்கம். முஹம்மது சோமநாதர் ஆலயத்தில் இருந்த லிங்கத்தை உடைத்து அதன் துண்டுகளை மெக்காவிலும் மெதினாவிலும், தன் தர்பாரிலும், க‌ஜ்னி என்ற மசூதி ஆகியவற்றின் வாயில் படிக்கட்டுகளில் பதித்தான். அந்த பேரழிவை நடத்திவிட்டு 61/2 டன் தங்கத்தோடு அவன் நாடு திரும்பினான். இன்றைய வாங்கும் சக்தியோடு ஒப்பிட்டு பார்த்தால் அதன் தற்போதைய மதிப்பு 13 லட்சம் கோடி என்கிறார்கள் பொருளாதார் நிபுண‌ர்கள். அதாவது பத்மநாபர் கோவிலில் கிடைத்த கருவூலத்தை போல் 13 மடங்கு.
ஜகாரியா-அல்-கஜ்வானி எனும் அரேபிய புவி இயல் அறிஞர் சோமநாத ஆலயத்தின் அழிவை பற்றி கூறுகிறார்.
"சோம்நாத நகரம் கடற்கரை ஒரத்தில் அமைந்த நகரம். அந்த கோவிலில் உள்ள அற்புதங்களில் அதன் பிரதான மூர்த்தியான லிங்கம் மிகவும் முக்கியமானது. அந்த லிங்கம் மேலும் கீழும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் இருந்தது. கோவிலின் மைய பகுதியில் அது இருக்கும். அது காற்றில் அவ்வாறு மிதந்து இருப்பது பார்ப்பவரை அதிசயப்பட வைக்கும். அவர்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் கூட!! ஹிந்துக்கள் அந்த கோவிலுக்கு அம்மாவாசை நாட்களில் தீர்த்த யாத்திரை செல்வார்கள். ஆயிரமாயிரமாய் அங்கு சேர்வார்கள். முஹம்மது அங்கு போர் புரிந்து செல்கையில் அவன் அந்த கோவிலை பிடிப்பதற்கும், அதை அழிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டான். எதற்கென்றால் அதை அழிக்கும் பொருட்டு பல ஹிந்துக்களை முஹம்மதியர்களாய் மாற்றக் கூடும் என்பதால். கடைசியில் அவன் ஒருவழியாய் அதை பிடித்து பல ஆயிரம் ஹிந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றினான். சோமநாதர் ஆலயத்தை அவன் கி.பி. 1025 ஆம் ஆண்டு பிடித்ததும் அந்த லிங்கத்தை வியந்து பார்த்தான். பின்னர் அதை அவனே உடைத்தெறிந்து பின் அதனை எடுத்து வர உத்தரவிட்டான்"
பின்னர் புனரமைக்கப்பட்ட அக்கோவிலை கி.பி. 1296 ஆம் ஆண்டு, சுல்தான் அல்லாவுதின் கில்ஜி அழித்தான். ஆயுதம் இல்லாமல் அதை தடுக்க வந்த 50000 பேர்கள் வாளுக்கு இறையானார்கள். 20 ஆயிரம் பேர் அடிமைகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
மீண்டும் அக்கோவிலை மஹிபாலா தேவா என்கிற சுதாசம அரசர் கி.பி. 1308ம் ஆண்டு கட்டினார். அதை 1375ம் ஆண்டு மீண்டும் முதலாம் முஜாஃபர் ஷா என்பவன் அழித்தான்.
மிண்டும் அது புனரமைக்கப்பட்டது. கி.பி 1451 ஆம் ஆண்டு மஹ்முத் பெக்தா என்பவனால் மீண்டும் அழிக்கப்பட்டது.
பின்னரும் உயிர்பெற்ற அக்கோவிலை, கடைசியாக கி.பி. 1701 ஆம் ஆண்டு ஔரங்கசீப் என்ற கொடுங்கோலனால் மீண்டும் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் அக்கோவிலின் தூண்களை உபயோகப்படுத்தி, ஒரு மசூதி எழுப்பப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிறகு ஹிந்துக்களின் பெரு முயற்சியால் அக்கோவில்
மீண்டும் எழுந்து நிற்கிறது. ஆனால் அது நமக்கு ஆயிரம் பாடங்களை சொல்லித் தரும் ஒரு பொக்கிஷமாய் உள்ளது. இன்றைக்கு அதன் கோபுரங்கள் உயர்ந்து இருந்தாலும், "எல்லா மதமும் ஒன்றுதான்" என்று கூறும் மூடர்களை கண்டு அது வெட்கத்தால் தலை குனிந்து நின்றுகொண்டிருக்கிறது. சரித்திரத்தின் மிக மோசமான தன்மையே அது மீண்டும் மீண்டும் திரும்புகிறது என்பதுதான் என்று அது நமக்கு ஞாபக படுத்துகிறது. ஒற்றுமையும், அதர்மத்தை தட்டி கேட்கும் தன்மையும் நம்மில் அழிந்துவிட்டதை அது உலகிற்கு பரைசாற்றுகிறது.