Thursday 16 December 2021

நல்ல தேனை எப்படிக் கண்டுப்பிடிப்பது?

நல்ல தேனை எப்படிக் கண்டுப்பிடிப்பது போன்ற விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். * ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும். தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. கரைந்து போகாமல் நேராக பாத்திரத்தின் கீழே சென்று தங்கினால், அது சுத்தமான தேன். சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பித்தால், நன்றாக சுடர்விட்டு பற்றி எரியும். அப்படி எரிந்தால் அது சுத்தமானது. * சிறிதளவு தேனை எடுத்து வாணலியில் சூடு செய்தால், அதன் அடர்த்தி குறைந்து, உருகிவிடும். பின்னர் அடுப்பை அணைத்து விடவேண்டும். சுத்தமானதாக இருந்தால், சில மணி நேரங்களானதும், பழைய அடர்த்தியை அடைந்துவிடும். கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், இழந்த அடர்த்தியைத் திரும்பப் பெறாது.நல்ல தேனை எப்படிக் கண்டுப்பிடிப்பது போன்ற விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். * ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும். தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. கரைந்து போகாமல் நேராக பாத்திரத்தின் கீழே சென்று தங்கினால், அது சுத்தமான தேன். தேனை கண்ணாடி ஜாரில் ஊற்றி, சில மணிநேரம் வைத்திருக்க வேண்டும். சுத்தமான தேனாக இருந்தால், அடர்த்தி ஒரே சீராக இருப்பதுடன், நிழல் போன்ற அடுக்குப் படலம் ஏற்படாது. தேனின் நிறம் ஒரே சீராக இருக்கும். கலப்படம் செய்த தேனின் அடர்த்தி மாறுபடும். * சுத்தமான தேனுக்கு அடர்த்தி அதிகம். அதை ஸ்பூனில் எடுத்து கிண்ணத்தில் விட்டால், மெல்லிய நூல் இழை போல் இறங்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன், சொட்டு சொட்டாக வடியும். * சுத்தமான தேனை ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றினால், அதன் அடர்த்தி காரணமாக உடனே ஒட்டாமல் குமிழ் போல பரவி, பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப தேன் சம நிலை பெற சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். கலப்படம் மிகுந்த தேனை பாத்திரத்தில் ஊற்றினால், உடனேயே தண்ணீர் போல பாத்திரத்தில் சமநிலையில் இருக்கும்.❤👍

Saturday 4 December 2021

காசிக்குச் செல்பவர்கள்

காசிக்கு செல்லும் தமிழர்களா நீங்கள் ?... இதோ உங்களுக்காக... காசிக்குச் செல்பவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது? இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்:- காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்! அதன் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் என்ன? கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் தங்கலாமா? இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம். சிபாரிசுக் கடிதம் வேண்டுமா? அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது. முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:- Sri Kasi Nattukkottai Nagara Satram Godowlia, Varanasi - 221 001 (U.P) Telephone Nos: 0542 - 2451804, Fax No: 0542 - 2452404 (ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்) Naat Koat Satram Location Godowlia, Tanga Stanad Behind Sushil Cinema Varanasi கட்டணம் உண்டா? உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது. உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை. ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள் அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது. மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள். எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள். இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம் டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம் குளியல் அறைகளில் Water Heater உண்டு குடிப்பதற்கு Purified Water உண்டு மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு சரி உணவு? விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும். 1 காலைச் சிற்றுண்டி:- நேரம் 8 மணி முதல் 10 மணி வரை. இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு. கட்டணம் ரூ.35:00 மட்டுமே 2. மதிய உணவு: - நேரம் 12:30 மணி 2:30 மணி வரை சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40.00 கட்டணம் ரூ.4,000.00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும். 3. மாலை 4 மணி டீ உண்டு 4. இரவு 7:30 முதல் 9 மணிவரை இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள் கட்டணம் ரூ.35:00 மட்டுமே உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு. - நண்பரின் முகநூல் பதிவு.

Monday 29 November 2021

இந்தியாவின் வரலாறு

இந்தியாவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடங்களில் பிழை இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? விரிவாக கூறவும். சுருக்கமாகவே கூறுகிறேன். இந்தியாவின் வரலாறு காங்கிரஸ் அரசால் உண்மைகள் மறைக்கப்பட்டு போலியாக எழுதப்பட்டது . 1.அலெக்சாண்டரை புருஷோத்தமன் போரில் வென்றதையும் பஞ்சாப் தாண்டி இந்தியாவினுள் நுழைய முடியாமல் திருப்பி அனுப்பியதையும் வரலாறு எழுதவில்லை. புருஷோத்தமன் போரில் தோற்றாலும் அலெக்சாண்டர் நாட்டை திருப்பி கொடுத்தாராம் . அப்படி எத்தனை நாட்டை அலெக்சாண்டர் அந்த அரசர்களுக்கே திருப்பி கொடுத்தார்? போகும் வழியில் கொல்லப்பட்ட அலக்சாண்டரை நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வரலாறில் எழுதியுள்ளனர். 2. பிரித்திவி ராஜ் சவுகான் தரெய்ன் போரில் முகமது கோரியால் கொல்லப்பட்டதாக தான் பள்ளி வரலாற்றுப் புத்தகத்தில் படித்தேன். உண்மையில் பிரித்வி ராஜ் சவுகானை குருடாக்கி கோரி சிறைப்பிடித்து ஆப்கன் அழைத்து சென்றான். குருடானாலும் தன்னால் அம்பு விட முடியும் என்ற பிருத்வியை சோதனை செய்ய கோரி வில்லைக் கொடுத்ததான். உடனே கோரியை அம்பெய்தி கொன்றார் பிரித்வி ராஜ். அதன் பின்னரே ஆப்கான் வெறியர்களால் கொல்லப்பட்டார்.போன வருடம் பத்திரிக்கை செய்தியை படித்த பின் தான் எனக்கு உண்மை தெரிந்தது. 3.முகமது கஜினி 17முறை படையெடுத்து தோற்றான் என்றும் 18வது முறை தான் வென்று இந்தியாவை கொள்ளையடித்தான் என்றும் வரலாறு புத்தகம் சொல்கிறது. உண்மையில் 17 முறையும் போரில் வென்ற கஜினி ஒவ்வொரு .முறையும் நாட்டை கொள்ளையடித்தான். 18வது முறை சோமநாதர் ஆலயத்தில் பணிபுரிந்த 5000 பிராமணர்களை வெட்டிக் கொன்று விட்டு , கோவிலையும் இடித்துவிட்டு கோவிலில் இருந்த பல டன் தங்க நகைகளை நூற்றுக்கணக்கான யானைகளில் ஏற்றி திருடிச் சென்றான். 4.அக்பர் தி கிரேட் என்கிறது வரலாறு. அக்பர் தி வொர்ஸ்ட் தான் உண்மை வரலாறு. ராணி துர்காவதியிடம் தோற்ற அக்பர் வரலாற்றை மறைத்தது பள்ளி வரலாறு. 5. திப்பு சுல்தான் விடுதலை வீரர் என்கிறது வரலாறு . மதம் மாற மறுத்த ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை அவன் படுகொலை செய்ததை மறைத்துவிட்டது. 6.முகலாயர்களை பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டு வீர சிவாஜியைப் பற்றி ஒரு பாராவும் , விஜய நகர பேரரசை தோற்றுவித்தவர் ஹரிஹரர் , புக்கர் என்ற இரு சகோதரர்கள் என்ற ஒற்றை வரியில் விஜய நகர வரலாற்றை முடித்து விட்டது. 7. நத்தம் கணவாய் போரில் 500 பிரிட்டிஷ் படைவீரர்களை கொன்று குவித்து அவர்கள் கொள்ளையடித்த அழகர் சிலைய மீட்ட தன்னரசு நாட்டு கள்ளர்கள் பற்றி ஒரு வரியும் இல்லை. ஆனால் பிரிட்டிஷ்காரன் எழுதிய வரலாற்றில் இச்சம்பவம் உள்ளது. 8.உப்பு பிரிட்டிஷ்காரன் தவிர மற்றவர்கள் விற்க தடை விதித்து பாரம்பரியமாக உப்பு விற்ற உப்புக் குறவர்கள் , லம்பாடிகள் , எருகுலர் ,பஞ்ஞாராக்கள் ஆகியோர்களை திருடர்கள் என்று பொய் குற்றம் சாட்டி குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்த்து அவர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் கொன்று குவித்ததை புத்தகத்தில் மறைத்தனர் . தக்கீ , லம்பாடி உள்ளிட்ட பல பழங்குடியினர்களை கொன்று முற்றிலும் அழித்துவிட்டனர் பிரிட்டிஷ் கொலைகாரர்கள். 10.பிரிட்டிஷ் காரனின் வருகையால் இந்தியா வளர்ந்தாக புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது . அவன் 200 ஆண்டுகள் இந்தியாவில் கொள்ளையடித்த பொருட்களை திருப்பி கொடுத்தால் ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் 50 கோடி வரை இந்திய அரசு வழங்கலாம். அந்தளவு திருடியுள்ளது. இவர்கள் திருட்டின் ஆதாரம் இங்கிலாந்து ராணி கிரிடத்தில் இருக்கும் கோஹினூர் வைரம் தான் சாட்சி 11.மதமாற்றம் செய்ய வந்த கான்ஸ்டாண்டி ஜோசப் பெஸ்கி , கால்டுவெல் போன்றவர்களை தமிழுக்கு தொண்டு செய்ய வந்தவர்கள் என போலியாக எழுதியது வரலாறு. 12.கொலைக்காரன் டயரை சுட்ட உத்தம் சிங் வரலாற்றை பாடப்புத்தகத்தில் இருந்து மறைத்தது. 13.காந்தி தான் இந்தியாவிற்கு அஹிம்சை முறையில் விடுதலை வாங்கி தந்தார் என்று பொய் வரலாறை எழுதியது. 14.நேதாஜியின் தாக்குதலும் பம்பாய் கலகமும் விடுதலை போருக்கு இந்தியர்களை ஆயுதமேந்த வைத்ததையும் , பிரிட்டிஷ் தளபதிகளை அவர்கள் கீழ் பணிபுரிந்த இந்தியப் படையினர் அடித்து கொன்றதும் வெள்ளையர்களை காண்டாலே நாடு முழுக்க இந்தியர்கள் தாக்குதல் செய்ய தொடஙகிய பின்னரே விடுதலை கிடைத்தது என்பதை முற்றிலும் மறைத்தது. 15.பூலித்தேவர் , அம்மங்கா , கிட்டூர் ராணி , ராணி வேலு நாச்சியார் எல்லாம் வெள்ளையனை தோற்கடித்த வரலாற்றை மறைத்தது.மருதுபாண்டியர்கள் குடும்பத்தில் ஒருவரைக் கூட விடாமல் மொத்த குடும்பத்தையும் அவர்களுடன் 300 பேருக்கும் மேற்பட்டவர்களை ஒரே நாளில் தூக்கிலிட்டு கொன்றதையும் மறைத்துவிட்டனர். 16.ஒரு நாள் கூட விடுதலைக்கு போராடாத பெரியாரை விடுதலை வீரர் பட்டியலில் சேர்த்தது. 17.சோழரும் பாண்டியரும் கம்போடியாவை தாண்டி இந்தோனேசியா வரை ஆட்சி செய்ததை மறைத்தது. பெரும் கொலைகாரன் அசோகனை புத்தர் போன்று சித்தரித்தது. 18.சேரனின் வரலாற்றை எழுதாமலே விட்டது. 19.முழு காஷ்மீரும் இந்தியா மீட்டதைப் போல் எழுதியது. இன்னும் நிறைய பொய் வரலாறுகள் தான் நாம் பள்ளியில் படித்தது. Courtesy: Saravanaprasad Balasubramanian.

Wednesday 27 October 2021

அபிராமி பட்டர் கதை

*அபிராமி பட்டர் கதையில் இப்படி ஒரு கதை நான் அறிந்ததில்லை கீழே வரும் கதையை நான் முழுவதும் படித்து முடிக்கும்போது எனது கண்களுக்கு பின்னால் இந்த மண்டைக்குள் இவ்வளவு நீர் எப்படி வந்தது என்று அறிய முடியவில்லை*...... படித்து முடித்த பின்பு என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நீண்ட நேரம் ஆனது...... *தயவுசெய்து முழுவதும் படிக்காமல் தயவுசெய்து கமண்ட் வேண்டாம்* அபிராம பட்டர் அந்த நள்ளிரவில் தூங்காமல் ஒரு மனிதனுக்காகக் காத்திருந்தார். அவர் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை. அவன் யார், எங்கிருந்து வருகிறான், எப்படி இருப்பான் என்று அவருக்குத் தெரியாது. ஆனால் வருவான் என்பதில் மட்டும் அவருக்குத் துளியும் சந்தேகமில்லை. அந்த முதிய கேரள நம்பூதிரி சொன்னது அவருக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. "வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான்....". அபிராம பட்டரின் வீடு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்தது. வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு விக்கிரகம் இன்னும் பிரதிஷ்டையாகாத கோயில் ஒன்று இருந்தது. அந்தப் பகுதியில் தொலை தூரத்திற்கு வேறு எந்த வீடும் கிடையாது. காலையில் பால்காரன் வந்து விட்டுப் போனால் வேறு யாரும் அவர் வீட்டுக்கு வருவது கிடையாது. உறவினர்களோ நண்பர்களோ இல்லாமல் தனிமையாக அவர் அந்த வீட்டில் வசித்து வந்தது செந்திலின் திட்டத்திற்குக் கன கச்சிதமாகப் பொருந்தியது. ஒரு புராதன அம்மன் கோயிலில் நகைகளைக் கொள்ளை அடிக்க அவன் மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டான். அதை வாங்குவதற்கு வட நாட்டு மனிதர் ஒருவர் தயாராக இருந்தார். கொள்ளை அடித்தவுடன் அன்றைய தினமே நகைகளை அவர் வந்து வாங்கிக் கொண்டு போவதாக இருந்தது. ஆனால் கொள்ளையடிக்கப் போகும் கோயிலின் அருகே உள்ள பெரிய மைதானத்தில் அவனது திட்ட நாளன்றே முதலமைச்சரின் பொதுக்கூட்டம் நடக்க திடீரென்று ஏற்பாடு ஆனது. போலீஸ் நடமாட்டம் அதிகமாக அந்தப் பகுதியில் ஆரம்பிக்கும் என்பதால் அவன் தனது திட்டத்தை மூன்று நாட்கள் முன்னதாக செயல்படுத்த வேண்டியதாயிற்று. ஆனால் அந்த வட நாட்டு மனிதரோ முன்பு சொன்ன தேதிக்கு முன்னால் வர முடியாது என்று சொல்ல கொள்ளை அடித்த நகைகளுடன் மூன்று நாள் மறைந்திருக்க ஒரு இடத்தைத் தேடித் தேடிக் கடைசியாக அவன் தேர்ந்தெடுத்தது தான் அவர் வீடு. நகைகளை வெற்றிகரமாக அவன் கொள்ளையடித்து விட்டான். லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை ஒரு பழந்துணியில் கட்டிக் கொண்டு அவன் அவரது வீட்டை அடைந்த போது இரவு மணி பன்னிரண்டு. அந்த நேரத்தில் வாசற் கதவு திறந்திருந்ததும் உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்ததும் அவனை திடுக்கிட வைத்தன. 'யாராவது வந்திருக்கிறார்களா?' வெளியே சிறிது நேரம் நின்று காதுகளைக் கூர்மையாக்கினான். காற்றும், வண்டுகளும் தான் சத்தமிட்டன. வீட்டுக்குள் இருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. தன் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு மெள்ள உள்ளே நுழைந்தான். "வாங்கோ..வாங்கோ" அபிராம பட்டர் மிகுந்த சந்தோஷத்துடன் எழுந்து நின்று அவனை வரவேற்றார். கிட்டத்தட்ட எழுபது வயதைத் தாண்டிய அவர் தன் வயதில் பாதியைக் கூடத் தாண்டாத அவனது திடகாத்திரமான முரட்டு உருவத்தையோ கத்தியையோ பார்த்து பயக்காதது மட்டுமல்ல அவனை எதிர்பார்த்தது போலக் காத்திருந்ததும், வரவேற்றதும் அவனுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது. இது வரை இது போன்ற சந்தர்ப்பங்களில் அவன் எதிர்கொண்டதெல்லாம் பயம், அதிர்ச்சி, மயக்கம், உளறல், கூக்குரலிடுதல் வகையறாக்களைத் தான். "உட்காருங்கோ" என்று தான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு எதிர் நாற்காலியைக் கை காட்டினார். செந்தில் என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாத நிலையில் இருந்தான். இங்கு நடந்து கொண்டிருப்பவை எதையும் அவனால் நம்ப முடியவில்லை. அபிராம பட்டரைக் கூர்ந்து பார்த்தான். அவர் அவிழ்ந்திருந்த தன் குடுமியை நிதானமாக முடிந்து கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். அது ஒரு சந்தோஷமான, மனம் நிறைந்த புன்னகை. "பெருசு நீ என்னை வேற யாரோன்னு நினைச்சுட்டே போல இருக்கு" செந்தில் கரகரத்த குரலில் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான். அபிராம பட்டருக்கு அந்தக் கேரள நம்பூதிரிகள் சொன்னது நன்றாக நினைவில் இருக்கிறது. "வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான்....". அவன் வந்த நேரமும் சரி, கத்தியோடு வந்த விதமும் சரி அவர்கள் சொன்னது போலத் தான் இருக்கிறது. "அப்படியெல்லாம் இல்லை" என்று அமைதியாக சொன்னார். 'கிழத்திற்குப் பைத்தியம் முற்றி விட்டது போலிருக்கிறது' என்று எண்ணிய செந்திலுக்குச் சிறிது உதறல் எடுத்தது. போலீஸைக் கூட சமாளிக்க அவன் தயார். ஆனால் பைத்தியம் என்றால் அது அடுத்து என்ன செய்யுமோ என்று அனுமானிக்க முடியாததால் ஏற்ப்படுகிற உதறல் அது. அதை வெளிக் காட்டாமல் யோசித்தான். எதிராளியை என்றுமே பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது அவனது தொழில் சூத்திரம். பயம் மட்டுமே என்றுமே மனிதனை செயல் இழக்க வைக்கிறது என்பதும் அது தனக்குப் பாதுகாப்பு என்பதும் அனுபவம் அவனுக்குக் கற்றுத் தந்த பாடம். கத்தியை அவர் முன்னுக்கு நீட்டினான். "பெருசு இது பொம்மைக் கத்தியில்ல. நான் நினைச்சா ஒரு நிமிஷத்தில உன்னைக் கொன்னுடலாம் தெரியுமா?" அபிராம பட்டர் அதற்கும் அசரவில்லை. "நான் எப்ப சாகணும்னு பராசக்தி நான் பிறந்தப்பவே நாள் குறிச்சுருக்கா. அதுக்கு முன்னாடி நீங்க நினைச்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அந்தக் கத்தியை உள்ளே வைங்கோ. நான் என்ன உங்க கிட்ட சண்டையா போட்டேன்". மனிதர் ஒடிசலாக இருந்தாலும் அவர் பேச்சு உறுதியாக இருந்தது. அவரை என்ன செய்வது என்றே அவனால் தீர்மானிக்க முடியவில்லை. "பெருசு உன் கிட்ட நானும் சண்டை போட வரல. நான் இங்க மூணு நாள் தங்கப் போறேன். நான் இங்க இருக்கறது வெளிய ஒருத்தனுக்கும் தெரியக் கூடாது. அது உன்னால வெளிய தெரியப்போகுதுன்னு தெரிஞ்சாலோ, நீ என் கிட்ட எடக்கு முடக்கா நடந்துகிட்டாலோ நான் உனக்கு நாள் குறிச்சுடுவேன். பராசக்தி குறிச்ச நாள் வரை நீ உசிரோட இருக்க முடியாது. புரிஞ்சுதா" "புரிஞ்சுது. என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. பயப்படாதீங்கோ. எவ்வளவு நாள் வேணும்னாலும் இருங்கோ. உங்களாலும் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு. அதுக்காகத் தான் பெளர்ணமி எப்போ வரும், நீங்க எப்போ வருவீங்கன்னு நான் ஆவலாய் காத்துகிட்டு இருந்தேன்". அந்தக் கடைசி இரண்டு வாக்கியங்களும் அவனை திடுக்கிட வைத்தன. எரிச்சலோடு சொன்னான். "புதிர் போடாம எனக்கும் பைத்தியம் பிடிக்கறதுக்கு முன்னாடி விவரமா சொல்லுய்யா" அபிராம பட்டர் சொல்ல ஆரம்பித்தார். பம்பாயில் கோடிக் கணக்கில் சொத்துள்ள வைர வியாபாரம் செய்யும் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தின் பூர்வீக இடமும் அந்த இடத்தில் ஒரு பராசக்தி கோயிலும் இங்கிருந்தன. தங்களது சுபிட்சத்திற்கு அந்தப் பராசக்தியின் அருள் தான் காரணம் என்று பெரிதும் நம்பிய அந்தக் குடும்பம், தடைப்படாமல் பூஜை அந்தக் கோயிலில் நடக்க அபிராம பட்டரை நியமித்திருந்தது. தனது பதினெட்டாம் வயதிலிருந்து அபிராம பட்டர் கோயிலில் பூஜை செய்து கொண்டு அருகில் இருந்த அந்த வீட்டில் வசித்து வந்தார். வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தினர் அனைவரும் வந்து பராசக்தியை தொழுது விட்டுப் போவார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பராசக்தி சிலை சேதப்பட்டுப் போனது. அதே சமயம் அந்தக் குடும்பத்தின் மூத்த தலைவருக்கு மாரடைப்பும் வரவே உடனடியாக பல லட்சம் செலவு செய்து கோயிலைப் புதிதாகக் கட்டவும் சாஸ்திரப்படி ஒரு பராசக்தி சிலை செய்யவும் ஏற்பாடு செய்தார்கள். கோயில் கட்டப்பட்டு முடிந்த போது பராசக்தி சிலையில் கண்களைத் தவிர சிற்ப வேலை எல்லாமே முடிந்திருந்தது. அந்த நிலையில் சிற்பி ஒரு சாலை விபத்தில் இறந்து போனான். இது ஒரு பெரிய அபசகுனமாகத் தோன்றவே அந்தக் குடும்பத் தலைவர் அபிராம பட்டரையும் அழைத்துக் கொண்டு கேரளா சென்று சில வேத விற்பன்னர்களான நம்பூதிரிகளையும் ஜோதிடர்களையும் கலந்தாலோசித்தார். அவர்கள் அஷ்ட மங்கலப் ப்ரஸ்னம் வைத்து ஆருடம் சொன்னார்கள். பெளர்ணமி இரவு அன்று ஒருவன் தானாகவே அபிராம பட்டரைத் தேடி வருவான் என்றும் அவனைக் கொண்டு அந்தக் கண்களைச் செதுக்கும் படியும் சொன்ன அவர்கள் சிலையைப் பிரதிஷ்டை செய்ய நாளையும் குறித்துக் கொடுத்திருந்தார்கள். அப்படிச் செய்தால் அந்தக் குடும்பத்தார்களுக்கு எல்லா தோஷங்களும் நீங்குவதோடு அந்தக் கோயிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து தரிசிக்கும் பிரசித்தியும், சக்தியும் வாய்ந்த ஸ்தலமாக மாறும் என்றும் சொன்னார்கள். "இந்த வீட்டுக்கு வெளியாட்கள் வந்து பல காலம் ஆயிடுச்சு. ஆனா அவங்க சொன்னது போல இந்த பெளர்ணமி ராத்திரியாப் பார்த்து நீங்க வந்திருக்கீங்கோ. அவங்க சொன்னபடியே நீங்க இங்கே இருந்து அந்தக் கண்களையும் செதுக்கித் தரணும். அந்தக் குடும்பத்துப் பெரியவர் நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் தரச் சொல்லி என் கிட்டே அவர் கையெழுத்து போட்ட ப்ளாங்க் செக் கொடுத்துட்டுப் போயிருக்கார். அதில் நீங்க என்ன தொகை வேணும்னாலும் எழுதிப் பணம் எடுத்துக்கலாம். அவங்களுக்குப் பணம் ஒரு பிரச்னையே இல்லை" கேட்டு விட்டு செந்திலே ஒரு சிலையாகத் தான் நின்றிருந்தான். கடைசியில் அரை மனதோடு சொன்னான். "நான் ஒரு திருடன். சிற்பியல்ல" "அஷ்ட மங்கல ப்ரஸ்னம் வைத்தவர்கள் மஹா தவசிகள். சாதாரணமானவங்க அல்ல. அவங்க சொன்னது பொய்க்காது. உங்களுக்கு சிற்பக்கலை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை" அபிராம பட்டர் ஆணித்தரமாகச் சொன்னார். அந்த ப்ளாங்க் செக் நிறையவே ஈர்த்தாலும் செந்திலுக்கு அந்த இடமே மாந்திரிகம் நிறைந்ததாகத் தோன்றியது. எல்லாம் முன்னமே தெரிந்து வைத்திருந்த அந்தக் கேரள நம்பூதிரிகளும், அபிராம பட்டரும் அவனை அசத்தினார்கள். இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இப்படியும் நடக்குமா என்கிற பிரமிப்பு தீரவில்லை. கூடவே அங்கிருந்து ஓடி விடலாம் என்ற எண்ணமும் வந்தது. ஆனால் அந்தத் திருட்டு நகைகளோடு இனி எங்கே போய் ஒளிவது? இன்னமும் மூன்று நாள் ஒளிந்திருக்க இது தான் பாதுகாப்பான இடம். "பெருசு நான் இப்ப எங்கேயிருந்து வர்றேன் தெரியுமா? ஒரு அம்மன் கோயில்ல இருந்து நகைகளைக் கொள்ளை அடிச்சுட்டு வர்றேன். என்னைப் போய் ஒரு அம்மன் சிலைக்குக் கண் வடிக்கச் சொல்றிச்ங்க. இத்தன உசந்த வேலையை எங்கிட்டத் தர்றீங்களே தமாஷா இல்ல" "உங்களை மாதிரிக் கொள்ளை அடிச்ச ஒருத்தர் தான் ராமாயணம் எழுதினார். எல்லாம் தெய்வ சங்கல்பம். சரி சரி மணி ரெண்டாகப் போகுது. பேசாமத் தூங்குங்கோ. மீதி எல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்" என்று அவர் அவனுக்குப் படுக்கையை விரித்துத் தானும் போய் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அவரது குறட்டை சத்தம் லேசாகக் கேட்டது. அவனுக்கு உறக்கம் வரவில்லை. 'இனி இந்த வேலையைச் செய்ய மாட்டேன்' என்று சுமார் இருபது வருடங்களுக்கு முன் அப்பாவின் எதிரில் உளியைத் தூக்கி எறிந்த நாள் அவனுக்கு நினைவுக்கு வந்தது. அப்பா அன்று சொன்னார் "இது ஒரு நல்ல கலைடா". "நீங்க கலையைப் பார்க்கிறீங்க. நான் இந்தக் கலை இத்தனை வருஷமா உங்களுக்குக் கொடுத்த பட்டினியைப் பார்க்கறேன்" அதற்குப் பின் அவன் உளியை எடுத்தது பூட்டுகளை உடைக்கத் தான். இத்தனை வருடம் கழித்து இப்படியொரு சூழ்நிச்லையில் மறுபடி அவனுக்கு ப்ளாங்க் செக்குடன் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அபிராம பட்டரின் குறட்டை சத்தம் அதிகமாகியது. ஒரு கொள்ளைக்காரன் வீட்டில் இருக்கும் போது எந்த பயமும் இன்றித் தூங்கும் பட்டரைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவனையும் அறியாமல் அவனுக்கு ஏனோ அந்தப் பட்டரை மிகவும் பிடித்துப் போய் விட்டது. மறு நாள் காலை அவன் சொன்னான் "எனக்கு நேத்துத் தூக்கமே வரல பெருசு" "கையில கொள்ளையடிச்ச நகை அவ்வளவு இருக்கிறப்ப எப்படித் தூக்கம் வரும்" "என்ன கிண்டலா. அது சரி. என்னை இங்க வச்சிகிட்டு எப்படிப் பெருசு நீ நிம்மதியாத் தூங்கினே" "உண்மையைச் சொன்னா நான் ஆறு மாசம் கழிச்சு நேத்து தான் நிம்மதியாத் தூங்கினேன்" அபிராம பட்டரின் கண்களில் நீர் தழும்பியது "அந்தப் பணக்காரங்களைப் பொறுத்த வரை இந்த பராசக்தி அவங்களைச் சுபிட்சமாய் வச்சிருக்கும் ஒரு தெய்வம். ஆனா எனக்கு எல்லாமே அவள் தான். பதினெட்டு வயசுல பூஜை செய்ய ஆரம்பிச்ச எனக்கு அப்புறம் ஒரு குடும்பமோ, பணமோ, வேற சினேகிதர்களோ வேணும்னு தோணலை. தாயாய், சினேகிதியாய், குழந்தையாய்,சொத்தாய்,எல்லாமாய் எனக்கு அவள் இருந்தாள். பூஜை செய்துகிட்டு இருக்கிறப்பவே ஒரு நாள் அவள் காலடியில் உயிர் போயிடணும். அது தான் என் ஒரே ஆசை. விக்கிரகம் சேதப்பட்டப்ப என்னையே ரெண்டாப் பிளந்த மாதிரி துடிச்சேன். நேத்து உங்களைப் பார்த்த பிறகு தான் நிம்மதி.சந்தோஷம்.எல்லாம் சரியாகி நான் பழைய படி பூஜை செய்ய ஆரம்பிச்சுடலாம்னு நம்பிக்கை வந்துடுச்சு" "ஏன் பெருசு எனக்கே அவங்க இவ்வளவு பணம் தர்றாங்களே. உனக்கு எவ்வளவு தருவாங்க" "எவ்வளவு வேணுனாலும் தருவாங்க. பசிக்குச் சோறு, உடுக்கத் துணி, தங்க இடம் இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்கோ. அதுக்கு மேல கிடைக்கிறதெல்லாம் அதிகம் தான். அவங்க தந்தாலும் நான் வாங்கறதில்லை" அந்தக் கிழவரின் கள்ளங்கபடமில்லாத பேச்சும் வெகுளித்தனமும் அவன் தந்தையை அவனுக்கு நினைவுபடுத்தின. அவரும் இப்படித்தான் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதராகவே கடைசி வரை இருந்தார். ஆனால் பிழைக்கத் தெரியாதவர் என்று தான் நினைக்கும் இந்தக் கிழவரின் நேற்றைய நிம்மதியான உறக்கமும் பிழைக்கத் தெரிந்த தனது உறக்கம் வராத நிலையும் ஒரு கணம் அவனுக்கு உறைத்தது. இது பற்றி நினைக்க அவன் விரும்பவில்லை. பேச்சை மாற்றினான். "ஏன் பெருசு இவ்வளவு சின்னவனான என்னைப் போய் எதுக்கு நீங்க, வாங்க, போங்கன்னு சொல்றே" "என் தெய்வத்திற்கு கண்கள் தரப்போறவர் நீங்க. நீங்க எவ்வளவு சின்னவராக இருந்தாலும், எப்படிப் பட்டவரா இருந்தாலும் சரி எனக்கு கடவுள் மாதிரி தான்" அவரது வார்த்தைகள் அவனை என்னவோ செய்தன. "நான் சிற்ப வேலை செஞ்சு இருபது வருஷம் ஆயிடுச்சு. இப்ப எனக்கு எப்படி வரும்னு தெரியல" "நல்லாவே வரும்.எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றவர் அருகில் கோயிலில் இருந்த அந்த சிற்பத்தைக் காண்பித்தார். பழைய சிற்பி உபயோகித்த உபகரணங்களும் அங்கிருந்தன. சிலைக் கல்லையும் அந்த உபகரணங்களையும் அவன் நன்றாக ஆராய்ந்தான். "பெருசு, நீங்க போங்க. எனக்குக் கொஞ்சம் தனியா இருக்கணும்" அவர் போய் விட்டார். அந்த சிலையையே பார்த்தபடி நிறைய நேரம் செந்தில் உட்கார்ந்தான். திருடன் திரும்பவும் கலைஞனாக மாற சிறிது நேரம் தேவைப் பட்டது. தன் குருவான தந்தையை நினைத்துக் கொண்டான். "சிலை கல்லில் வர்றதுக்கு முன்னால் மனசில் துல்லியமாய் வரணும். அதுக்கு முன்னால் உளியைத் தொடக்கூடாது" என்று அப்பா என்றும் சொல்வார். சிலையை நிறைய நேரம் பார்த்து கண்ணை மூடினான். மனதில் பல விதமான கண்கள் வந்து வந்துப் பொருத்தமில்லாமல் மறைந்தன. கடைசியில் பேரழகுடன் இரு விழிகள் வந்து மனதில் உள்ள சிலையில் நிலைத்தன. அவனுக்குள் ஏதோ ஒரு சக்தி ஒரு துளியாக ஆரம்பித்து வெள்ளமாகப் பெருக ஆரம்பித்தது. உளியைக் கையில் எடுத்தான். சிலை கண்கள் திறக்க ஆரம்பித்தது. அவனுக்கே எப்படி செதுக்கி முடித்தான் என்று தெரியவில்லை. ஆனால் முடித்த பின் அவனே சொக்கிப் போனான். பராசக்தியின் கண்கள் மெள்ள மெள்ளப் பெரிதாகிக் கொண்டே போவது போலத் தோன்றியது. கடைசியில் அந்தக் கண்களைத் தவிர வேறெதையும் அவனால் காண முடியவில்லை. அண்ட சராசரங்களையே அவன் அந்தக் கண்களில் கண்டான். அந்தக் கண்களில் இருந்து கவனத்தைத் திருப்ப அவனால் முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றியது. பார்த்தான். பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான். காலம் அவனைப் பொருத்த வரை நின்று போய் விட்டது. அபிராம பட்டர் மதியம், மாலை, இரவு என மூன்று நேரங்களில் வந்து பார்த்தது அவனுக்குத் தெரியாது. இரவில் அவர் வந்து பார்க்கும் போது இரண்டு சிலைகளைப் பார்த்தார். அந்தத் தெய்வச் சிலையும் மனிதச் சிலையும் ஒன்றை ஒன்று நேராகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. அந்த முரட்டு முகம் சிறிது சிறிதாகக் கனிய ஆரம்பித்து பேரமைதியுடன் பளிச்சிட்டது. பட்டர் பராசக்தியைப் பார்த்தார். அவரது பராசக்தி இப்போது முன்பை விட அதிகப் பேரழகுடன் ஜொலித்தாள். எல்லை இல்லாத சந்தோஷத்தில் அவர் கண்கள் அருவியாயின. அவர் சாஷ்டாங்கமாய் அவனது கால்களில் விழுந்தார். இந்த உலகிற்கு மறுபடியும் திரும்பிய அவன் தீயை மிதித்தவன் போலப் பின் வாங்கினான். "பெரியவரே, என்ன இது..." அவனது பேச்சும் தோரணையும் முற்றிலும் மாறி இருந்தது. அபிராம பட்டருக்கு வார்த்தைகள் வரவில்லை. மெளனமாக அந்தச் சிலையைக் காண்பித்துக் கை கூப்பினார். பின்பு அந்தப் ப்ளாங்க் செக்கை நீட்டினார். அவன் வாங்கவில்லை. "நான் கண்களைச் செதுக்குனதுக்கு அவள் என் கண்களைத் திறந்துட்டா பெரியவரே. எங்களுக்குள்ள கணக்கு சரியாயிடுச்சு" புன்னகையோடு கரகரத்த குரலில் சொன்னான். "ஒரு விதத்தில் பார்த்தா வாழ்க்கையே நமக்கு அவள் தர்ற ப்ளாங்க் செக் தான், இல்லையா பெரியவரே. என்ன வேணும்னாலும் எழுதி நிரப்பிக்கோன்னு குடுத்துடறா. நாம் தான் எதையோ எழுதி எப்படியோ நிரப்பிக் கெடுத்துடறோம்" அவன் குரலில் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு வருத்தப் படுவது போல் தெரிந்தது. அதற்குப் பின் பேசும் மனநிலையில் இருவருமே இல்லை. மனம் நிறைந்திருக்கையில் வார்த்தைகள் அனாவசியமாகவும், மெளனமே இயல்பாகவும் இருவருக்கும் தோன்றியது. சாப்பிட்டு விட்டுத் தூங்கினார்கள். நடு இரவில் அபிராம பட்டர் விழித்துப் பார்க்கையில் செந்திலின் படுக்கை காலியாக இருந்தது. வீடு முழுவதும் தேடி அவன் இல்லாமல் கோயிலுக்குப் போய்ப் பார்த்தார். அவன் அங்கும் இருக்கவில்லை. அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே அவன் போய் விட்டிருந்தான். ஆனால் அவன் நேற்றுக் கொண்டு வந்திருந்த நகைகள் எல்லாமே பராசக்தியை அலங்கரித்துக் கொண்டிருந்தன

Saturday 16 October 2021

புரந்தரதாசர்

#மகான்_புரந்தரதாசர் கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி. சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப்பெரிய பணக்காரரின் மகன். கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி. நம்ப முடிகிறதா ...? கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும். ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கிறது. இதெல்லாம் இறைவன் திருவிளையாட்டு. செல்வம் செல்வம் என்று செருக்குடன் வாழ்ந்த அவரைவிட்டு லட்சுமியானவள் "செல்வோம்... செல்வோம்...' என்று போய்விட்டாள். ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது. கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார். அதுவும் எப்படி? அற்புத மான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர். அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும். "பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....' மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு. "சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று கெஞ்சுகிறார் அந்த மகான். அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக். அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயண செட்டி என்றும் அழைத்தார்கள். அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்டமாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம். ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சரஸ்வதி. அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள். அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான். பெரிய கோவில். மக்கள் "பாண்டுரங்கா... பாண்டுரங்கா' என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள். ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டுகொள்ளவே மாட்டார். பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன். ""ஐயா... தர்மப் பிரபுவே...'' ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்? ""ஐயா... தர்மப் பிரபுவே... சுவாமி...'' ""டேய்! யாருடா நீ?'' அதட்டினார் ஸ்ரீனிவாசன். ""ஐயா... நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்கு பூணூல் போடலாம்.... பிரபு... ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்.... சாமி...'' ""போ... போ... வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை...'' விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை. தினந்தோறும் வந்து, நமக்கு படியளப் பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார். ஒருநாள், ""உங்களிடம் யாசகம் வாங் காமல் போகமாட்டேன் பிரபு...'' என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான். "இது ஏதடா வம்பாப் போச்சே...' என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். ""இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே...'' அந்தக் காசைப் பார்த்துவிட்டு, ""பிரபு... இது தேய்ந்து போயிருக்கிறதே... எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்...'' என்றான் இறைவன். ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார். ""நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டு வந்து என் கடையில் அடமானம் வை... நல்ல காசு தருகிறேன்'' என்றார். அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான். அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள். ""பவதி... பிக்ஷாம் தேஹி...'' ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள். ""என்ன வேண்டும் சுவாமி?'' ""அம்மா... நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்கு பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை. ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா... உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா...'' "பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?' என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள். ""அட... நீ என்னம்மா... புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின்போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே? அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?'' என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன். "அட... உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே... அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?' சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி. அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன். ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்து விட்டதோ என்று தோன்றியது. ""இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடும்'' என்று மிரட்டினான் பிராமணன். கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து, "இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே..' என்று யோசித்தார் நாயக். சிறிது நேரம் கழித்து, ""ஓய் பிராமணரே... இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்...'' என்றார். அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான். உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார். மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை. ""சரஸ்வதி... மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா...'' சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். "ஐயய்யோ... இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?' கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். "இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடு வதைவிட சாவதேமேல்...' என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள். ""தாயே துளசி... நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா'' என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில்- விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே' என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்... பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, ""இந்தாருங்கள் மூக்குத்தி...'' என்று கொடுத்தாள். ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது அடகுக் கடைக் குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார். அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, "எனக்கு பணம் வேண்டாம்... என்னுடைய நகையைக் கொடுங் கள்...' என்று கேட்டால் என்ன செய்வது? மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது. மறுநாள் காலை! கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்து விட்டான். ""ஐயா... பிரபுவே.. நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்...'' என்றான். ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சி னார். ""ஐயா... மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது. வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாக பணம் தருகிறேன்.'' ""சரி... சரி... சாயங்காலமும் என்னை ஏமாற்றி விடாதே. நான் வருவேன்...'' கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார். அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான். ""என்னடா... ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?'' ""சுவாமி... என்னை மன்னித்துவிடுங்கள்... கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்.... நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்... பின்னர் மறைந்து விட்டார்...'' ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.! கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்தி விட்டுப் போனதையும் சொன்னாள். ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார். அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது. "இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்? போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள். இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன். பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....' புரந்தரதாசன்ஸ்ரீ னிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார். ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார். தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார். அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப் பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார். கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர். சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார். நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார். ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற "ஸ, ரி, க, ம, ப, த, நீ..' என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற்கு தந்த பிதாமகர் புரந்தரதாசரே. அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. அப்படிப்பட்ட மகான் புரந்தரதாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக்கலந்தார்.

தியாகராயரின் புகழ்

💐 *ஜெய்ஸ்ரீராம்* *தியாகராயரின் புகழ்* *வீட்டு திண்ணையில் *அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு* *இராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார்*. *எதிரே ஒரு வயதான தம்பதி அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலி ல் அந்த முதியவர் பேச ஆரம்பித்தார்*. '' *ஸ்வாமி, நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலி ருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணி ட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யணும்*.."' *மெல்லிய குரலில் , பேசினார் அவர்; வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்று ம், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவையெல்லா வற்றையும் தாண்டி , அம்மூவரின் முகலாவண் யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது*. *ஒருகணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதா ன புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார்* ; '' *அதற்கென்ன* *பேஷாய் தங்கலாம்*. இரவு *போஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ*" *அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின், அடுக்களையை நோக்கி, உரத் த குரலில்* , '' *கமலா,குடிக்க தீர்த்தம்* *கொண்டு வா* ..'' என்றார்* ; *அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின்* *கண்கள், அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பி ல் விரிந்தன*. ' *யார் இவர்கள்* ?' '' *கமலா ...'' தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது* ; '' *கமலா இவர்கள்* * *நமது விருந்தாளிகள்*. *இன்று நமது* *கிருஹத்தில் தங்க போகிறார்கள்* .. *இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய்*'' *தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவா றே இயல்பாய் பேசினார் அவர்* ; ' *அடடா, வீட்டில் இரண்டு பேர்களுக்கு போது மான அரிசியே இல்லை .இப்போது, ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு என்ன செய்வது ? பக்கத்து வீட்டு க்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான்* ' *உள்ளுக்குள் எண்ணியவள் , பின் எதையும் வெளிக்காட்டாமல், புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் ; போன வேகத்திலேயே, அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள், பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்த அக்கணம் அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவ ரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது* ; '' *அடடா, எங்கே செல்கிறீர்கள் அம்மா? எங்களுக்காக சிரமப்பட வேண்டாம். எங்களிடம் , வேண்டிய அளவு தேனும், தினை மாவும் இருக்கி றது. இரண்டையும் பிசைந்து ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம்.'' அவ ளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை, வியப்புடனும் , தர்மசங்கடத்துட னும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர்*. *தயக்கத்துடனும், சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள், உணவுத்தயாரிக்க அடுக்களையை நோக்கி விரைந்தாள்*. *அன்று இரவு, அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற தியாகராஜர், அவர்களுட ன் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு , பின், ஒரு கட்டத்தில் உறங்கி போனார்*. *பொழுது விடிந்தது, காலைக்கடன்களை முடித்து விட்டு, கூடத்தில் அமர்ந்து, வழக்கம் போல கண்களை மூடியவாறு, ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார*.. " *ஸ்வாமி .." எதிரே புன்னகையுடன் அந்த முதியவர். அருகே, அவரின் பார்யாளும், மற்று ம் அந்த இளைஞனும் . அந்த முதியவர் தொடர்ந்தார்*. '' *ரொம்ப சந்தோஷம், நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம் இரவு தங்க இடம் கொடுத்து வாய்க்கு ருசியாய் ஆகாரமும் கொடுத்து அன்பாய் உபசரித்தத ற்கு மிக்க நன்றி* ..'' *கூப்பிய கரங்களுடன்* அந்த முதியவர் பேச, *அருகே அந்த மூதாட்டியும், இளைஞனும் அவரின் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று* *தலையசைத்தவாறு நின்றிருந்தனர சொல்லி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப, தியாகரா ஜரும்* அவர்களை *வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார்*. *அவர்கள் மூவரும் வாசலை கடந்து , தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க, அவர்கள் செல்வ தை கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிரு ந்த தியாகராஜரின் கண்களில் ' சட்டென்று ' ஒரு தெய்வீக காட்சி இப்போது அந்த வயோதி கர் ஸ்ரீ ராமனாகவும் அந்த மூதாட்டி, சீதையாக வும், அந்த இளைஞன் அனுமனாகவும் தோற்ற மளிக்க அவருக்குள் இனம் புரியாத ஒரு பதை பதைப்பு*. *கண்கள் பனிசோர நா தழுதழுக்க* *தன்னை மறந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார்*. '' *என் தெய்வமே, தசரதகுமாரா, ஜானகி மணாளா, நீயா என் இல்லத்துக்கு வந்தாய்?. என்னே நாங்கள் செய்த பாக்கியம் அடடா, வெகு தூரத் திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே , உன் காலை பிடித்து அமுக்கி, உன் கால் வலி யை போக்குவதை விடுத்து , உன்னை தூங்க விடாமல் விடிய விடிய பேசிக்கொண்டே இருந் தேனே. மகாபாவி நான், என் வீட்டில் தரித்திரம் தாண்டவ மாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தை யும் கொண்டு வந்ததுடன், ஒரு தாய் தகப்பனா யிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே ! உனக்கு அநேக கோடி நமஸ்காரம்*'' *நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் தியாகராஜர். அப்போது அவர் திருவாயினின்று, அனிச்சையாய்* , '' சீதம்ம.....மாயம்ம...'' *என்கிற கீர்த்தனை பிறந்தது*... *ஸ்ரீ ராம் ஜெய ராம். ஜெய ஜெய ராம் சீதாராம்*...

சரஸ்வதி பூஜை

இந்தியா எங்கிருக்குன்னு கண்டுபிடிக்குறேன்னு கிளம்புன கொலம்பஸ் accidentஆ கண்டுபிடிச்சது தான் அமெரிக்கா. அங்குள்ள மக்கள இந்தியர்கள்னு நெனச்சதால அவங்க இன்னைக்கும் செவ்விந்தியர்கள்னு அழைக்கப்படுறாங்க.. சரஸ்வதி பூஜை கொண்டாடுன இந்தியாவ தேடித்தான் கொலம்பஸ் வந்தான். . அலெக்ஸாண்டர் இந்தியாக்குள்ள வரவே இல்ல. மன்னன் புருசோத்தமனால் (கிரேக்க உச்சரிப்பு பாரோஸ்) தடுத்து நிறுத்தப்பட்டான். சரஸ்வதி பூஜை கொண்டாடுன மன்னனால் தடுத்து நிறுத்தப்பட்டான் அலெக்ஸாண்டர் . வரலாறு தெரியாதவன்லாம் அறிஞன்.. அவனுக்கு நாலு சிங்கிடிங்க

PRITHIVI RAJ, the Great

பிருத்வி என இந்தியா ஏன் ஏவுகனைக்கு பெயர் சூட்டியது, அதுவும் இஸ்லாமியரான கலாம் இந்தியனாக உருவாக்கிய அந்த ஏவுகனைக்கு அப்பெயரை ஏன் பரிந்துரைத்தார் என்றால் விஷயம் மிக பெரிய வரலாற்றை கொண்டது பிரித்வி எனும் வரலாற்றில் ஒளிந்திருக்கின்றது இந்தியாவின் வீரமான வரலாறும், இங்கு நிலைத்துவிட்ட அந்த வீர காவியமும், காதல் காவியமும் இன்றும் கண்ணனுக்கும் வீரசிவாஜிக்கும் அடுத்தபடி கொண்டாடபடும் வீரவரலாறு அது அன்று கங்கையாலும் சிந்துவாலும் செல்வ செழிப்பில் மிதந்த இந்தியா மேல் ஆப்கானிய கொள்ளையர்களுக்கு கண் இருந்தது, அடிக்கடி கொள்ளையிட வருவர், கொள்ளை அடித்துவிட்டு ஓடிவிடுவர் இங்கு இருந்து ஆளும் தைரியமும் ஆசையும் அவர்களுக்கு இல்லை, ராஜ்புத் வீர இனமும் இன்னும் பல இந்திய குழுக்களும் அவர்களுக்கான பதிலடியினை கொடுத்து கொண்டே இருந்தன‌ அலெக்ஸாண்டரை போரஸ் விரட்டியது போல முகமது பின் காசிம் எனும் அரபு தளபதியின் படைகளை பாபா ராவல் எனும் இந்து மன்னன் எல்லையிலே விரட்டினான், அப்பொழுது அவன் பாதுகாப்புக்காக கட்டிய ஊர்தான் இன்றைய ராவல்பிண்டி யாரோ யாரோ வருவார்கள் அந்நாளில் அடிபட்டு ஓடுவார்கள் அல்லது கிடைத்ததை சுருட்டி தலைதெறிக்க ஓடிவிடுவார்கள் ஆப்கனின் கஸ்னி அல்லது கஜினி ஊரின் மன்னன் முகமது எனும் கஜினி முகமது கூட அப்படி கொள்ளை அடித்துவிட்டு ஓடியவனே தவிர மாவீரன் அல்ல‌ 17 முறையில் சிலமுறை வென்ற கஜினி தன் நாட்டில் மிகபெரும் அரசை ஸ்தாபித்தான் அவன் வம்சத்தை பின்னாளில் விரட்டி ஆட்சியினை கைபற்றினான் கோரி முகமது அதாவது அந்த ஊரில் ஏகபட்ட முகமதுகள், கஜினியினை ஆண்டவன் கஜினி முகமது, கோரி எனும் ஊரினை ஆண்டவன் கோரி முகமது கோரி என்பது கோவ்ரி, காவ்ரி, காவேரி என பொருள்படும், ஆப்கனில் ஏகபட்ட தமிழ்பெயர் உண்டு, காவேரிதான் கோரி ஆனது. விஷயம் அது அல்ல இப்போதைய விஷயம் கோரி முகமது அவன் கஜினி பாணியில் இந்தியாவினை தாக்க திட்டமிட்ட பொழுது இங்கு அவனுக்கு பெரும் சவால் இருந்தது அந்த சவாலின் பெயர் பிரித்வி ராஜன், இன்றைய டெல்லி, ஆஜ்மீர் பகுதிகளின் ராஜா அவன், 20 வயதிலே அரியணை ஏறினான், மாவீரனும் அழகனுமாய் இருந்தான் கூடவே அரசனுக்குள்ள அறிவும் ஏராளம் இருந்தது வட இந்தியா முழுக்க அவனுக்கு பெரும் செல்வாக்கும் இருந்தது அப்பொழுது கன்னோசி நாடு அதாவது இன்றைய உபி பகுதியில் ஜெயசந்திரன் என்றொரு அரசன் இருந்தான், அவன் ஒரு யாகம் நடத்தினான் , தன்னை தலைவராக ஏற்கும் படி பலருக்கு ஓலை அனுப்பினான் எல்லோரும் வந்து வணங்கி யாகத்தில் கலந்து கொண்டனர் ஆனால் பிரித்விராஜன் வரவில்லை, தன்னை அவன் அவமதித்ததாக மனதில் புழுங்கிகொண்டிருந்தான் ஜெய்சந்திரன் என்றாலும் மோதிபார்க்கும் ஆசை எல்லாம் இல்லை எனினும் அரண்மனையில் பிரித்விராஜன் பற்றி அவன் விவாதிப்பதும் அதை நாலுபேர் மறுத்து பிரித்வியின் பெருமைகளையும் அவனின் மாவீரத்தையும் பற்றி பேசுவதும் வழக்கமானது அதை அவ்வப்போது கேட்டுகொண்டிருந்த ஜெயசந்திரன் மகள் சம்யுத்தாவிற்கு பிரித்வி மேல் காதலே வந்தது ஆம் பார்க்காமலே வந்த காதல் அது, அப்படியும் காதல் சாத்தியமாய் இருக்கின்றது. பிரித்விராஜன் பற்றிய செய்திகளை கேட்டே அவள் காதலில் விழுந்தாள் என்ன இருந்தாலும் அரச குடும்பம் அல்லவா? உரிய முறையில் யாரையோ பிடித்து அனுப்பி தன் காதலை பிரித்விராஜனிடம் சொல்ல சொல்லிவிட்டாள் அவனுக்கும் ஆச்சரியம், சம்யுக்தா பற்றி கேள்விபட்ட அவனும் அவள் காதலை ஏற்றுகொண்டான், ஆனால் சந்திப்போ டேட்டிங்கோ இல்லை, எல்லாம் கனவில் மட்டுமே வீரனை காதலித்த பின் சம்யுக்தா சும்மா இருப்பாளா? அவளுக்கும் தைரியம் வந்தது, மிக தைரியமாக ஜெயசந்திரனிடமே தன் காதலை சொன்னாள், "மணந்தால் பிரித்வியினை மணப்பேன் இல்லை என்றால் மரணத்தை தவிர யாரையும் மணக்க மாட்டேன்" ஆத்திரத்தில் பொங்கினான் ஜெயசந்திரன், பிரித்வி என் அரண்மனைக்கு வரவே தகுதியற்றவன், அவன் என் அரண்மனை காவலாளி வேலைக்கே சரி என சொல்லி பிரித்வி போலவே ஒரு சிலை செய்து வாசலில் வைத்தான் அதை அடிக்கடி மிதித்தானா, காரி உமிழ்ந்தானா, செருப்பு மாலை இட்டானா? யானை கொண்டு சாணமிட செய்தானா என்ற தகவல் இல்லை, ஆனால் பிரித்விராஜன் தகுதி இதுதான் என சொல்லிகொண்டிருந்தான் சம்யுக்தையோ அச்சிலைக்கு மாலையிடுவதும் திலகமிடுவதும் அதை சுற்றி ஆடுவதுமாக இருந்தாள் பொறுத்து பார்த்த மன்னன் ஒரு நாள் சுயம்வரம் நடத்தினான், மகளிடம் சொன்னான் " பிரித்விராஜனை தவிர எல்லா ராஜகுமாரரும் சுயம்வரத்திற்கு வருவார்கள், ஒருவனுக்கு மாலையிடு, என்னை மீறி அவனும் வரமுடியாது, நீனும் செல்லமுடியாது" சம்யுக்தாவிற்கு வேறுவழியில்லை, ஆனாலும் பிரித்வி ராஜனை நம்பினாள் சுயம்வர நாளும் வந்தது, ராஜகுமாரர் எல்லாம் கூடி இருந்தனர், சம்யுக்தா கையில் மாலை கொடுக்கபட்டது, விரும்பியவன் கழுத்தில் மாலையிட உரிமையும் கொடுக்கபட்டது சம்யுக்தா நல்ல அழகி என்பதால் ராஜகுமாரர் எல்லாம் பல்லை மட்டுமல்ல‌ கழுத்தையும் காட்டியபடி நின்றனர் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தாள் சம்யுக்தா தேசமே, ஏன் தேசங்களே திரண்டிருந்தது, தன் காதலை காட்ட மிக சரியான சந்தர்ப்பம் இது என எண்ணிய சம்யுக்தா சட்டென ஓடி சென்று பிரித்வி சிலைக்கு மாலையிட்டாள் சபை அதிர்ந்தது, சிலையினை இடித்துவிட்டு அவளை இழுத்துவர ஜெயசந்திரன் அடியெடுத்து வைத்தபொழுது அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது சட்டனெ சிலைக்கு உயிர்வந்து சம்யுக்தாவினை அள்ளி குதிரையில் வைத்து பறந்தது ஆம் நடக்கும் விஷயங்களை மிக துல்லியமாக கண்காணித்த பிரித்விராஜன் சுயம்வரம் அன்று சிலைக்கு பதிலாக அவனே நின்றிருந்தான், சிலை போலவே நின்றிருந்தான் யாருக்கும் சந்தேகம் வராதாடி நின்றிருந்தது அவனின் சாமார்த்தியம் துள்ளியோடிய குதிரை இருவரையும் சுமந்து ஓடியது, பெரும் படையுடன் பின் தொடர்ந்தான் ஜெயசந்திரன், தொலைவில் தன் படையினை நிறுத்தி வைத்திருந்தான் பிருத்வி, அந்த இடத்தை அடைந்ததும் யுத்தம் தொடங்கிற்று யுத்தம் நடக்கும் சாக்கில் சம்யுக்தாவோடு டெல்லிக்கு வந்தான் பிரித்வி,ஜெயசந்திரனால் அவன் படைகளை தாண்டி வரமுடியவில்லை காதலர்கள் சந்தித்ததும், காந்தர்வ மணம் புரிந்ததும் ஒரே நாளிலே அவர்கள் வாழ்வு ஆனந்தமாக சென்றுகொண்டிருந்தது, இருமுறை தன்னை அவமானபடுத்திய பிரித்வி ராஜனை ஒழிக்க தூக்கமின்றி வழிதேடினான் ஜெய்சந்திரன் அந்நேரம் அதாவது கிபி 1191ம் ஆண்டு , இந்தியா மேல் முதன்முறையாக படையெடுத்தான் கோரி முகமது ஆப்கனை அடக்கி வெற்றி கொண்ட கோரி டெல்லி நோக்கி வந்தான், அவனை அரியானாவின் தராய் அருகே எதிர்கொண்டான் பிரித்விராஜன் மிக கடுமையான யுத்தம் அது, வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிக பெரும் வீரம் காட்டி நின்ற பிரித்விராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை ஆப்கனை அடக்கிய கோரி முகமது பிரித்வி முன்னால் திணறினான், ஒரு கட்டத்தில் கோரி முகமதுவினை வளைத்துபிடித்தான் பிரித்வி அன்றே கோரியின் தலையினை சீவியிருந்தால் இந்திய வரலாறே மாறியிருக்கும், ஆனால் உயிர்பிச்சை அளித்து அவனை ஆப்கனுக்கு விரட்டினான் பிரித்வி அடிபட்ட பாம்பாக ஆப்கன் திரும்பிய கோரி அவமானத்தில் நொந்தான், பெரும் படை திரட்டி மறுபடியும் டில்லி நோக்கி வந்தான் இம்முறை வலுவான குதிரைபடையோடு வந்தான் கோரி, பிரித்விராஜனிடம் யானைபடை வலுவாக இருந்தது என்பதால் அரபு குதிரைகள் சகிதம் வலுவாக வந்தான் கோரி இம்முறை கோரியினை விடவே கூடாது என முடிவு செய்த பிரித்வி பல மன்னர்களை திரட்டினான், அப்படியே மாமன் ஜெயசந்திரனிடமும் உதவி கேட்டான் ஜெய்சந்திரனோ பகைமையினால் உதவ மறுத்தான், உதவ சென்றவர்களையும் தடுத்தான் ஆயினும் களம் கண்டான் பிரித்வி உதவ மறுத்ததோடு இல்லாமல் கோரிக்கு ஆதரவான காரியங்களை செய்தான் ஜெயசந்திரன் தன் இருபெரும் எதிரிகளை தனியாக சந்தித்தான் பிரித்வி, போரில் மாவீரம் காட்டி நின்ற பிரித்வியினை கோரியினால் வெல்ல முடியவில்லை, ஆயினும் அவன் திரட்டி வந்த பெரும்படை அவனுக்கு பலமாக களத்துக்கு வந்து கொண்டே இருந்தது , யுத்தம் நீடித்தது யுத்த நெறிகளை மீறி காட்டுமிராண்டிதனமான போரில் ஈடுபட்ட கோரி, நள்ளிரவில் பாசறையில் புகுந்து பிரித்வியினை பிடித்தான், இதற்கு ஜெயசந்திரனின் கொடூரமான திட்டமும் இருந்தது துரோகத்தால் வீழ்த்தபட்டான் பிரித்வி ராஜன் கடந்த முறை தனக்கு உயிர்பிச்சை அளித்தவன் என்ற நன்றி கூட இல்லாமல் அவனின் கண்களை குருடாக்கினான் கோரி எதிரி வென்றதும் ராஜபுத்திர இந்து பெண்கள் என்ன செய்வார்களோ அதை சம்யுக்தாவும் செய்தாள், ஆம் தீகுளித்து இறந்தாள் அவளோடு பல பெண்கள் செத்தனர் டெல்லியினை வென்ற கோரி மற்ற ஆப்கன் மன்னர்களை போல கொள்ளை அடித்துவிட்டு ஓடவில்லை, தன் அடிமைகளில் ஒருவனை தன் பிரதிநிதியாக அமர்த்தினான் அத்தோடு மிக முக்கியமான காரியத்தை செய்தான், ஆம் தனக்கு உதவிய ஜெயசந்திரனை கொன்றான் கோரி. எதற்காக என்றால் அந்நாளைய வழக்கபடி பிரித்வியின் நாடு ஜெயசந்திரன் பக்கம் போயிருக்கும், கொள்ளைகளோடு கோரி ஊர் திரும்ப வேண்டி இருக்கும் ஜெயசந்திரன் கணக்கு இதுதான், ஆனால் கொடூரமான கோரி காரியம் முடிந்ததும் அவனை காவு வாங்கினான் குருடானான பிரித்விராஜனை வைத்து தன் சபையில் வேடிக்கை காட்டுவது அவனுக்கு வழக்கமாயிருந்தது பலசாலி அகபட்டால் உடனே அவனை குருடனாக்கி அவனை தடுமாற வைத்து ரசித்து பழிவாங்கும் கொடூர பழக்கம் அன்று அரேபியாவிலும் ஆப்கனிலும் இருந்தது குருடனான பிரித்வியினை அடிக்கடி சபையில் நிறுத்தி அவமானபடுத்தி விளையாடுவது அவனுக்கு வழக்கமாயிற்று "ஒரு நாள் நீதான் பெரும் வில்லாளி ஆயிற்றே? இப்பொழுது வில்லும் அம்பும் கொடுத்தால் சரியாக அடிப்பாயா?" என நகையாடினான் கோரி தன்னால் ஒலிவரும் இலக்கினை துல்லியமாக தாக்கமுடியும் என்றான் பிரித்வி ராஜன் அரை போதையில் இருந்த கோரி, அவன் கையில் வில்லை கொடுத்து, இப்பொழுது மணி ஒலிக்கும் அதுதான் இலக்கு நீ அதை சரியாக அடிக்க வேண்டும் என உத்தரவிட்டதுதான் தாமதம் மிக சரியாக கோரியின் மேல் அம்பை செலுத்தினான் பிரித்வி ஆம், ஓய்வு என்பதாலும் பிரித்வி குருடன் என்பதாலும் கவச உடை இன்றி உத்தரவிட்ட கோரியினை, அவன் குரல் வந்த திசை நோக்கி மிக சரியாக அம்புவிட்டு கொன்றான் பிரித்வி அதன் பின்பு பிரித்வி கொல்லபடுகின்றான், அவனுக்கு வயது 24 24 வயதிற்குள் மங்கா புகழ்பெற்றவன் பிரித்வி, கோரி முகமதுவினை முதலில் ஓட அடித்தவன் அவனே இந்தியரிடையே ஒற்றுமை இருந்தால் இரண்டாம் முறையும் அவனால் வென்றிருக்க முடியும், ஜெயசந்திரனின் துரோகமும் பிரித்வியினை சாய்த்தது துரோகத்தால் வீழ்த்தபட்டான் மாவீரன் பிரித்வி, அவனின் வாழ்வும் காதலும் வீரமும் கடைசியில் பழிதீர்த்த நுட்பமும் மங்கா காவிய பாடல்களாயின இன்றும் வட இந்தியாவின் கிராமிய பாடல்களில் அவன் கதையும் காவியமும் உண்டு ஆப்கானிய கொடூர மன்னர்களை மாவீரனாக எதிர்கொண்ட அவனின் பெயரை இந்தியா தன் ஏவுகனைக்கு சூட்டியது ஆம் இந்தியா தன் ஏவுகனைக்கு "பிரித்வி " என‌ அவன் பெயரையே சூட்டியது இதை கவனித்த பாகிஸ்தான் அவசரமாக சீனாவிடமிருந்து ஏவுகனை வாங்கிய பாகிஸ்தான் அதற்கு "கோரி" என பெயரிட்டு வைத்திருக்கின்றது 900 ஆண்டுகளை கடந்தாலும் கோரியும் பிரித்வியும் இன்றும் ஏவுகனைகளாக எதிர் எதிரே நிற்கின்றார்கள் நிச்சயம் பிரித்வி இனி தோற்கமாட்டான், காரணம் அன்று அவனுக்கு துரோகம் செய்ய‌ ஜெயசந்திரன் இருந்தான் இன்று மொத்த இந்தியாவும் அவனுக்கு ஆதரவாய் இருகின்றது பிரித்த்வி மேம்படுத்தபட்டு பாகிஸ்தானின் எந்த மூலையினையும் அணுகுண்டோடு தாக்கும் அளவு வலிமையானதாக இந்தியாவின் பாதுகாப்பாக நிற்கின்றது அதில் பிரித்விராஜன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான், உண்மையான இந்துவீரன் ஒரு காலமும் அழிவதே இல்லை. Courtesy:Stanley Rajan