Monday, 19 October 2020

பிறப்பால் வர்ணங்கள் இல்லை

பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! - இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத திராவிடக் குஞ்சுகள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டி எலும்புகளைக் கவ்விக் கொண்டிருக்கிறது: ----------------------------------------------------------------------------------- உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது. சமஸ்கிருதம் தெரியாமலேயே நீங்கள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் இட்டுக்கட்டி விடும் போது சமஸ்கிருதம் அறிந்த என்னால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லிவிட முடியும். புருஷ சூக்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்: --------------------------------------------------------------------------- ”பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” (ரிக் வேதம் 10-90-12) வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்: ----------------------------------------------------- பிராமணஸ்ய - பிராமணன் உடைய; முகமாஸீத் - முகமானது பிரகாசமாய் இருத்தல்; பாஹீ - தோள்கள் வலிமையாக ராஜான்ய - சத்திரியர்கள் க்ருத - மத்திய ஊரு - தொடை ததஸ்ய - தத்துவம் நிறைந்த யத் வைஷிய - இந்த வைஷியர்கள் பத்ப்யாகும் - பாதமாக சூத்திரோ - சூத்திரன் அஜாயத் - வலிமைமிகுந்தவனாக (ஆஜானபாகு). ஸ்லோகத்தின் பொருள்: -------------------------------------- வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும், அதாவது பார்வையில் நேர்மை, எண்ணத்தில் தூய்மை, வாயில் வாய்மை பொருந்தியவனாக இருத்தல் வேண்டும். பிரம்ம தேவரின் முகத்தை ஒத்திருத்தல் வேண்டும். இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவனால் போர்கலையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும். வைசியனாவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும். சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த உலக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும் அதற்கு அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும். இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது? ------------------------------------------------------------------ மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது? வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன். பிறப்பால் வர்ணங்கள் இல்லை - மனு தர்மம்: -------------------------------------------------------------------- பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம், “ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே” அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது. இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது: -------------------------------------------------------------------- ஜன்மனா - பிறப்பால்; ஜாயதே - பிறந்த அனைவரும்; சூத்ர - சூத்திரரே; கர்மணா - தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ - இருபிறப்பாளனாக; ஜாயதே - பிறப்பாளன் ஆகிறான். மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்த்தத்தில் ஜ, ஜா என்னும் வார்த்தைகள் எங்காவது காண முடிகிறதா? ------------------------------------------------------------------------- --Saravanaprasad Balasubramanian

No comments: