Tuesday, 20 October 2020

சமணர்கள்

சேகுவேரா தன் நாட்டுக்காக போராடியவர். தேசபக்தர். ஆனால், இவரை நாயகனாக கொண்ட யாரும் தேசபக்தர்கள் இல்லை. பெரியபுராணம் படிக்காதவர்களுக்கு, ஞானசம்பந்தரை பற்றியோ, தர்மம் பற்றியோ, ராஜ்ய பரிபாலனம் பற்றியோ அறியாதவர்களுக்காக சொல்லி ஆக வேண்டும், அன்று நடந்ததை. ஞானசம்பந்தர் மதுரைக்கு விஜயம் போகும்போது நாவுக்கரசர் தடுக்கிறார். நாளும் கோளும் சரியில்லை. சமணர்கள் சூது செய்வார்கள். நீங்கள் சிறுபிள்ளை. நானும் துணைக்கு வருகிறேன் என்கிறார். கோளறு பதிகத்தை உடனே பாடிவிட்டு, சிவன் காலை பிடித்தவன் எவன் காலையும் பிடிக்கவேண்டாம் என்று அவரை தடுத்துவிட்டு தனியாக புறப்படுகிறார். அவர் தங்கியிருந்த மடத்துக்கு ஏவல் வைக்கிறார்கள் சமணர்கள். நெருப்பு பிடிக்கிறது. தங்கியிருக்கும் இடத்துக்கு தீ வைப்பவர்களை, சிசு கொலை செய்கிறவர்களை, வேதமறிந்த அந்தணர்களை மற்றும் அப்பாவிகளை கொல்கிறவர்களை, பெண்களை பலாத்காரம் செய்கிறவர்களை, பசுக்கொலை செய்கிறவர்களை என்று ஐந்து வகையான மஹாபாவங்களை புரிகிறவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே என்று ராஜ்ய நீதி சொல்கிறது. இவர்கள் அரசுக்கு வேண்டியவர்களாக இருந்ததால் மன்னன் தண்டிக்கவில்லை. சமணமும் பவுத்தமும் அறிவால் நம்மை வென்றதில்லை. ராஜாவை கைக்குள் போட்டுக்கொண்டுதான் இம்சித்தார்கள். இன்றும் அதே நிலைமை. இஸ்லாமும், கிறிஸ்தவமும், நாத்தீகமும் அதை அப்படியே தொடர்கின்றன. சம்பந்தர் பாடிய பாடல் அந்த தீயை அணைத்து, ஏவல் சென்று மங்கையர்க்கரசியின் கணவன் உயிருக்கு ஆபத்தின்றி 'பையலே சென்று பாண்டியருக்கு ஆகுக' என்று சம்பந்தர் சொல்ல. அவர்கள் வைத்த தீ வெப்பு நோயாக மாறி, மன்னனை தாக்கி கடும் காய்ச்சலில் விழுகிறான். மருந்துகள் குணப்படுத்தவில்லை. சமணர்களின் மயிற்பீலியும், மந்திரித்த நீரும் அதிகமாக்கின வெப்பத்தை. துடித்தான் மன்னன். வழியின்றி சம்பந்தரை வர சொன்னான். தன் வியாதியை போக்க சொன்னான். சமணர்கள், மன்னனின் ஒரு பாதியை நீங்களும் மறுபாதியை நாங்களும் குணப்படுத்துகிறோம் என்று சவால் விட்டனர். நீர் கொண்டுவந்த திருநீற்றை நம்பமாட்டோம் என்று சமையற்கட்டிலிருந்து சாம்பலை எடுத்து தந்தனர். பதிகம் பாடி நீரை இட்டு, சுகம் உண்டாக்கினார். சம்பந்தர் வென்றார். மறுபகுதியையும் குணப்படுத்தும்படி மன்னன் கேட்க, அதையும் செய்தார். அப்போது கூன் இருந்த பாண்டியன், கூன் நிமிர்ந்து நின்ற சீர் நெடுமாறனானான். தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், அனல்வாதம் என்றார்கள். அனலில் தாங்கள் எழுதிய சுவடியை இடவேண்டும் என்றார்கள். சம்பந்தரின் சுவடி எரியவில்லை. சமணர்களின் சுவடி எரிந்தது. இந்த இடத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். செய்யவில்லை. புனல்வாதம் என்றார்கள். என்ன அபத்தம் இது? வாதம் வாதம் என்றால் இதற்கு முடிவென்ன என்று மன்னனின் மனைவி மங்கையற்கரசி கேட்க, சம்பந்தர் புனல்வாதத்தில் வென்றால் தாங்கள் கழுவேறுவதாக சவால் விட்டனர். சம்பந்தர் தோற்றால் அவர் ஏறவேண்டும் என்று சவால். ஓடும் ஆற்றில் இட்டனர். சம்பந்தரின் சுவடி திருவேடகத்தில் கரை ஒதுங்கியது. அதனால்தான் அந்த பெயர் அந்த ஊருக்கு வந்தது. சமணர்களின் சுவடி அடித்துக்கொண்டு போனது. தோற்றார்கள் சமணர்கள். கழு ஏறினார்கள். இறந்தார்கள். சரி, அவர்களை மதம் மாற்றிவிட்டிருக்கலாமே என்று இன்றுள்ளவர்கள் கேட்டால்? நமது பதில்: அதே கோரிக்கையை சமணர்கள் வைத்திருக்கலாமே? நீங்கள் இந்த கேள்வியை சமணர்களிடம் கேட்டிருக்கலாமே? போய் அவர்களிடம் கேட்பதை விட்டுவிட்டு இங்கு வந்து கேட்கிறார்கள். வைதீக தர்மத்தை நிலைநாட்ட சங்கரரும் வாதம் செய்தார். சந்நியாசம்தான் வழங்கினார். அதுதான் சவால் அங்கு. இங்கு இது சவால். இத்தனைக்கும் தான் தோற்றால் ஸந்யாஸத்தை விடுத்து சம்சாரியாகிறேன் என்று பெரும் பாவத்தை முன்னிறுத்தி சவால் விட்டார் சங்கரர். சரி. இதை சம்பந்தர் தடுத்திருக்கலாமே? மன்னனிடம் சென்று மன்னா, அவர்களை மன்னியுங்கள். உயிர் பிச்சை அளியுங்கள் என்று சொல்லியிருக்கலாமே? சைவம்தான் சிவமயமாயிற்றே? அன்புதானே சிவம்? கேட்பார்களே, பதில் சொல்லவேண்டுமே? ஒரு மடாதிபதி, மன்னனின் தீர்ப்பில் தலையிடக்கூடாது. இதற்கு பெயர்தான் செக்யுலரிசம். ராமனை செருப்பால் அடிப்பதோ, நாத்தீகம் பேசுவதோ, மற்ற மதத்தை அவதூறாக பேசுவதோ அல்ல. பல நூற்றாண்டுகள் முன் மன்னனின் தீர்ப்பில் சர்ச்சுகள் தலையிட்டு, தண்டனைக்கு பாவமன்னிப்பு தந்து விடுவித்தன. குற்றங்கள் அதிகரித்தன. மன்னனால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது சர்ச்சுகள் அரசாங்க நடவடிக்கையில் தலையிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டு, அரசாங்கம் மத தலையீடு இல்லாமல் செக்யுலராக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். சட்டம் இயற்றப்பட்டது. ஹிந்து மதத்தில் எந்த மன்னனின் தீர்ப்பில் எந்த மடாதிபதி என்று தலையிட்டார்? அதனால் இந்த தீர்ப்பில் தலையிட முடியாது, தனக்கு உரிமை இல்லை. மீறி தலையிட்டால் எல்லை மீறியதாகும் என்று தர்மத்தின் கீழே விலகினார் சம்பந்தர். இவர்தான் கொன்றார்கள் என்கிறார்கள். அவரிடம் என்ன படையா இருந்தது தண்டனையை நிறைவேற்ற? அவர் என்ன மன்னனா? படை இருந்திருந்தால் நெருப்பு வைத்தவர்களை கொல்லாமல் பாட்டு ஏன் பாடினார்? அன்று நம்மை இம்சித்த சமண பவுத்தம் இன்றும் இருக்கிறது. யாருக்கும் தொந்தரவில்லை அவர்களால். சமுதாயத்தில் பெரும் நன்மைகளை செய்துவருகிறார்கள். எத்தனையோ பவுத்த கோவில்கள் உள்ளன. அவர்களாலும் யாருக்கும் தொந்தரவில்லை. அடைக்கலம் கேட்டு வந்த தலாய் லாமாவுக்காக சைனாவுடன் போரிட்டு தோற்றோம். இப்போது இஸ்லாமும், கிருஸ்த்தவமும் நாத்தீகர்களும் செய்து வரும் அட்டூழியங்களை அவர்கள் அன்று செய்தார்கள். மன்னன் தண்டித்தான். இதில் சம்பந்தர் மீது என்ன குற்றம்? Post from Anand Venkat (Edited)

Monday, 19 October 2020

*கிருஸ்தவ ஆலயத்தில் #காவிகொடி🚩*

*"இந்து மதம்"* என்னும் தர்ம நெறி இன்னும் சில ஆண்டுகளில் புதைய போவது உறுதி..! அதற்கான வேலைகளை கடந்த 270 ஆண்டுகளில் கிறித்தவ மிஷினரிகள் ஏற்கனவே 50% முடித்துவிட்டன..! (200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களாலும் 70 ஆண்டுகள் காங்கிரஸ் குடும்பத்தாலும்) இன்னும் சில ஆண்டுகளில் தன் இலக்கை அடையபோகிறது..! ஆம்... இந்துக்கள் அனைவரும் மதம் மாறினால் தான் இந்து மதம் அழியும் என்றில்லை... இந்து தர்மத்தின் அடையாளங்களையும், வரலாறுகளையும் சடங்குகளையும் திரித்து கூறினாலே போதும் அது அழிந்து விடும்..! அந்த அடையாளங்களை அழிக்கும் வேலைகளை தான் செய்து வருகின்றன இந்த கிறிஸ்தவ மிஷினரிகள்... இந்த மிஷினரிகள் இந்தியாவில் காலூன்றி 270 வருடங்களாய் மதம்மாற்றும் தொழிலை செய்து வந்தாலும் இந்தியாவை கிறித்தவ நாடாக இன்னும் இவர்களால் மாற்ற முடியவில்லை... காரணம் பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு நாம் கடைபிடிக்கும் வழிபாடு முறைகளும் சடங்குகளும் தான்.... இதை நன்கு புரிந்து கொண்ட மிஷினரிகள் இந்த வழிபாடுகளை தங்கள் வசமாக்கி அது காலம் காலமாக கிறித்தவத்திற்கு சொந்தம் என பொய் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டன..! சரி, இந்த மிஷினரிகள் அப்படி என்ன தான் செய்கின்றன... பார்ப்போம்.... 1.திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கிறித்தவராம்... பைபிளில் வரும் தாமஸ் என்பவர் பரங்கி மலையில் அமர்ந்து சொல்ல சொல்ல தான் திருவள்ளுவர் திருக்குறளே எழுதினாராம்.... இதற்காக பல போலியான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்களாம்... இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவை தான் உண்மை என வரலாறு மாற்றி எழுதப்பட போகிறது... நாமும் எது எப்படி போனால் என்ன என்று விரல் சூப்பி சென்று விடுவோம்..! 2.பகவத்கீதையில் கிருஷ்ணரும் அர்ஜீனரும் பேசியவற்றை, இயேசுவும் தாமசும் பேசியதாக ஸ்லோகங்களில் பெயர்களை மாற்றி சர்ச்சுகளில் படிக்கின்றனர் இந்த *கேவலவாதிகள்...* 3.யானைக்கு யர்ரம் னா குதிரைக்கும் குர்ரம் என்பதை போல், இந்து வேதங்களில் உள்ள வாக்கியங்களை திருடி எதுகை மோனை அமைத்து அதற்கு அவர்களே ஒரு அர்த்தமும் கொடுத்து அதில் இயேசுவை பற்றி தான் சொல்லியிருக்கிறது என்று பிரச்சாரம் செய்கின்றனர் இந்த மிஷினரிகள்... *'சமஸ்கிருதம்'* என்றால் என்ன என்றே தெரியாத நம்மாளும் இந்த விஷபூச்சிகளின் பேச்சை நம்பி விடுகிறான் என்பதே கொடுமை..! 4.இந்துக்கள் கந்த சஷ்டி கவசம் பாடுகின்றனர்... அதற்கு இணையாக இவர்கள் அந்தோனியார் சஷ்டி கவசத்தை தயார் செய்துவிட்டனர்..! 5.இந்துக்கள் காமாட்சி அம்மன் விளக்கு வீட்டில் வைத்துள்ளனர்... அதற்கு இணையாக காமாட்சியை தூக்கிவிட்டு மேரிமாதா விளக்கும் தயார் ஆகிவிட்டது..! 6.கோவில்களின் கொடிமரம், சிலைகள் வடிவமைப்பு, தேர்பவனி, முடி காணிக்கை என அனைத்தும எடிட், காப்பி & பேஸ்ட் செய்யப்பட்டுவிட்டது கிறித்தவத்தில்..! 7.விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கு இணையாக இயேசு சகஸ்ரநாமம் தயார் ஆகிவிட்டது..! 8.இந்தியா உலகிற்கு அளித்த கொடையான யோகாவையும் இந்த ஜென்மங்கள் விட்டுவைக்கவில்லை..! *"இயேசு யோகா"* என்ற பெயரில் வகுப்புகளையே நடத்த ஆரம்பித்துவிட்டனர்..! 9.அகத்தியர் மலை *அகஸ்டின்* மலையாக மாற்றப்பட்டு வருகிறது..! சில நடுநிலை நக்கிகளும் இதை *மதசார்பின்மை* என்ற பெயரில் இந்த அநியாயங்களை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர்... உண்மையில் இது மதசார்பின்மை அல்ல... மிஷினரிகள் செய்யும் கலாச்சார கற்பழிப்புகளை எதிர்க்க தெரியாத *கோழைத்தனம்..!* இன்னும் ஏராளம் இருக்கின்றன..! *"சரிப்பா இப்படிலாம் அவங்க பண்ணா உன் இந்து தர்மம் அழிஞ்சுடுமா..? அது என்ன அவ்ளோ வீக்கா..?"* என்று கேட்கும் அதிமேதாவிகளே, முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இவர்களின் வரலாற்று திணிப்புகளாலும், வழிபாடுகளை காப்பி அடிப்பதாலும் இந்து தர்மம் அழியாது... ஆனால், மறையும்..! தனித்தன்மைகளை இழக்கும்... இரண்டும் ஏறத்தாழ ஒன்று தான்..! *"ஆணிவேரை இழந்த மரமும், அடையாளத்தை இழந்த இனமும்"* நிலைத்து வாழ வாய்ப்புகள் இல்லை என்பதை உங்கள் மரமண்டையில் முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள்..! இந்த மதமாற்றும் வேலையும் மரபுமாற்றும் வேலையும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் தான் நடக்கிறது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்..!ஆனால், அது நம் வீட்டின் அருகாமையில் எப்போதோ வந்துவிட்டது...பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடற்கரை, பூங்காக்கள் என எங்கும் பரப்பபடுகின்றன இந்த திணிப்பு வேலைகள்..! இவர்களின் ஏமாற்று வேலைகளை ஒடுக்க அனைவரிடமும் ஒரே மனபாங்கான ஒற்றுமை இல்லை..! இதுவே நம் பலவீனம்..! *இதுவே மிஷினரிகளின் பலம்..!* சரி... இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்..? இந்த மிசினரிகளின் போலித்தனத்தை நம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு கொடுப்பதே இவர்களின் திணிப்புகளை தடுக்கும் ஒரே வழி..! (சில) கிறித்தவ பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்துங்கள்... நடுநிலைகளே, இந்து-கிறிஸ்டின் என்று ஒருவன் பேச ஆரம்பித்துவிட்டால் அவனை இந்து மத வெறியனாக பார்க்கும் உங்கள் எண்ணத்தை முதலில் கைவிடுங்கள்... நமது அடையாளங்களையும் மரபுகளையும் காப்பாற்றிக் கொள்ளவும், நம் மக்களுக்கு அதற்கான விழிப்புணர்வை கொடுக்கவும், எங்களுக்கு வேறு வழி தெரிவதில்லை. இது யாரையும் புண்படுத்தவும் அல்ல... அனைத்து மதங்களையும் மதிப்பது நம் பெருமை... நம் அடையாளங்களை அந்நிய மதவெறியவர்களிடம், மதம் பரப்பி நாடுபிடிக்க துடிக்கும் அயல்நாட்டு தீயசக்திகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை... --Rathnam Murugesan

பிறப்பால் வர்ணங்கள் இல்லை

பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! - இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத திராவிடக் குஞ்சுகள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டி எலும்புகளைக் கவ்விக் கொண்டிருக்கிறது: ----------------------------------------------------------------------------------- உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது. சமஸ்கிருதம் தெரியாமலேயே நீங்கள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் இட்டுக்கட்டி விடும் போது சமஸ்கிருதம் அறிந்த என்னால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லிவிட முடியும். புருஷ சூக்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்: --------------------------------------------------------------------------- ”பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” (ரிக் வேதம் 10-90-12) வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்: ----------------------------------------------------- பிராமணஸ்ய - பிராமணன் உடைய; முகமாஸீத் - முகமானது பிரகாசமாய் இருத்தல்; பாஹீ - தோள்கள் வலிமையாக ராஜான்ய - சத்திரியர்கள் க்ருத - மத்திய ஊரு - தொடை ததஸ்ய - தத்துவம் நிறைந்த யத் வைஷிய - இந்த வைஷியர்கள் பத்ப்யாகும் - பாதமாக சூத்திரோ - சூத்திரன் அஜாயத் - வலிமைமிகுந்தவனாக (ஆஜானபாகு). ஸ்லோகத்தின் பொருள்: -------------------------------------- வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும், அதாவது பார்வையில் நேர்மை, எண்ணத்தில் தூய்மை, வாயில் வாய்மை பொருந்தியவனாக இருத்தல் வேண்டும். பிரம்ம தேவரின் முகத்தை ஒத்திருத்தல் வேண்டும். இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவனால் போர்கலையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும். வைசியனாவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும். சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த உலக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும் அதற்கு அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும். இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது? ------------------------------------------------------------------ மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது? வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன். பிறப்பால் வர்ணங்கள் இல்லை - மனு தர்மம்: -------------------------------------------------------------------- பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம், “ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே” அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது. இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது: -------------------------------------------------------------------- ஜன்மனா - பிறப்பால்; ஜாயதே - பிறந்த அனைவரும்; சூத்ர - சூத்திரரே; கர்மணா - தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ - இருபிறப்பாளனாக; ஜாயதே - பிறப்பாளன் ஆகிறான். மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்த்தத்தில் ஜ, ஜா என்னும் வார்த்தைகள் எங்காவது காண முடிகிறதா? ------------------------------------------------------------------------- --Saravanaprasad Balasubramanian

Wednesday, 14 October 2020

 வரலாறு முக்கியம்.

சென்னை:
சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.
மதராஸ்:
முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.
கோடம்பாக்கம்:
“கோடா பாக்” - குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.
மாம்பலம்:
மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது.
மற்றொரு பெயர் காரணம்: “மா அம்பலம்” - ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய கிருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.
சைதாப்பேட்டை:
“சதயு புரம்” - சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வதுசிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகி விட்டது.
கிண்டி:
ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.
பரங்கிமலை:
ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது.
பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும்.
சேத்துப்பட்டு:
மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.
எழும்பூர்:
இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழும்பூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழும் ஊர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர். திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.
ராயபுரம்:
பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம், இன்று ராயபுரம்.
சிந்தாதரிப்பேட்டை:
“சின்ன தறிப் பேட்டை” - சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.
தண்டையார்பேட்டை:
பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.
புரசவாக்கம்:
“புரசைப் பாக்கம்” - புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.
அமிஞ்சிகரை:
“அமைந்தகரை (அ) அமர்ந்தகரை” - ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.
செங்கல்பட்டு:
“செங்கழுநீர் பட்டு” - செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.
பெருங்களத்தூர்:
பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.
பல்லாவரம்:
பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.
பூந்தமல்லி:
பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.
நந்தம்பாக்கம்:
நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.
ராமாபுரம்:
ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.
போரூர்:
முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.
குன்றத்தூர்:
குன்றுகள் நிறைந்த ஊர்.
ஸ்ரீ பெரும் பூதூர்:
அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.
சுங்குவார் சத்திரம்:
பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.
நந்தனம்:
மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.
யானை கவுணி:
திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவாயில் யானை கவுணி.
மாதவரம்:
மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.
வளசரவாக்கம்:
“வள்ளி சேர் பாக்கம்” - முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.
ஈக்காட்டுதாங்கல்:
“ஈர காடு தங்கல்” - வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம்.
முகப்பேர்:
மகப்பேர் ஸந்தானபுரி.
முகலிவாக்கம்:
கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.
அயனாவரம்:
அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.
courtesy: Irrubukkaram.

 ஏழைகள் என்று சொல்லி சில மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவர்கள் போல் சிலாகித்து விடுகின்றனர்.

அடிப்படை சுகாதாரத்தை பேணி, சரியான படி உறங்கி, கிடைக்கும் காசில் உணவை தயாரித்து உண்டால் பாரதத்தில் ஏழைகள் இல்லை என்பதே உண்மை.

ஆனால், ஏழைகள் என்று சொல்லிக் கொண்டே வீட்டில் டிவி வைத்துள்ளார்கள். 

ஏழைகள் என்று சொல்லிக் கொண்டே மொபைல் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

ஏழைகள் என்று சொல்லிக் கொண்டே டாஸ்மாக், பீடி, பான் என சகிதமாக வாழுகிறார்கள்.

இன்னும் உச்சம் என்னவென்றால் ஏழைகள் என்று சொல்லிக் கொண்டே நிறைய பிள்ளைகளும் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஏழைகள் என்று சொல்லிக் கொள்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை பார்த்ததன் அடிப்படையில் தான் எழுதுகிறேன்.


ஆனால், இங்கே பலர் அரசை குற்றம் சாட்டவும், 

நாட்டின் மதிப்பை குறைத்து பேசவும் 

ஏழைகள் நலம் அது இதுவென்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

ஏழைகள் நலம் என்பதெல்லாம் ஓட்டு பொறுக்கவே......


நீங்கள் ஏழைகள் என்று கருதும் நபர்களை கூர்ந்து கவனியுங்கள். 

கெட்ட பழக்க வழக்கத்துக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று பாருங்கள். உண்மை புரியும்.

இதுதான் யதார்த்தம்......

Good Question, Ultimate reply.

 சார் , பிரிட்டீஷ் அரசு வரவில்லை என்றால் நீங்கலாம் படிச்சுருக்க முடியாது. ரயில், மருத்துவம், கல்வி கிடைத்திருக்க அவன் தான் காரணம்? இப்படி பொதுவாக கிருஷ்தவ மதம் மாற்றும் பாதிரியார்கள் , பெரியார்(ஈவேரா) பகுத்தறிவு கூட்டங்கள் பேசுவதில் நியாயம் இருக்கிறதா? இதைபற்றி உங்கள் விளக்கம் மாரிதாஸ்?{கேள்வி: கார்த்திக்}

1912ல் பிரிட்டீஷ் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் வெளியிடப்படுகிறது. அது என்னவென்றால் இந்திய நிறுவனங்கள் எதுவும் ரயில் இஞ்சின் சார்ந்த எந்த உற்பத்தியும் செய்ய கூடாது, முழுமையாக தடை செய்கிறோம். எதற்கு இந்திய நிறுவனங்கள் தயாரிக்க கூடாது?
1843ல் ரயில் பிரிட்டீஷ் ரயில் இந்தியாவில் அனுமதித்த போது என்ன காரணம் என்று அவர்களே வெளியிட்டு உள்ளனர். அந்த விவகாரத்தை பின்னர் விளக்குகிறேன். பின்னர் மெல்ல 1860களில் ரயில் இந்தியாவில் முழுமையாக ஓட தொடங்கின. இந்த நேரம் அந்த ரயில் இஞ்சீன் பழுதுபார்க்கும் வேலை சில நேரம் இந்தியர்களிடம் கொடுக்கபட்டது. நன்கு புரிந்து கொள்ளுங்கள் 1900களை தாண்டியும் கூட 90% ரயில் ஊழியர்கள் இந்தியர்கள் தான். இஞ்சின் ஓட்டுவது, ஸ்டேசன் மாஸ்டர் என்று அனைத்து பெரிய பொறுப்பிலும் ஆங்கிலேயர் இருந்தனர். இந்தியர்களுக்கு எந்த ஊதிய உயர்வும் கிடையாது, எந்த பதவி உயர்வும் கிடையாது - சம்பளம் மிக மிக மிக குறைவு.
இந்த நிலையிலும் பழுதுபார்க்கும் வேலை 1862ல் இந்தியர்கள் செய்ய அனுமதி அளித்த அடுத்த 10 வருடத்தில் இந்தியர்கள் தாங்களே ரயில் இஞ்சின் தயாரிக்கும் அளவுக்கு திறமை பெற்று - இஞ்சின் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதாவது கற்றுகொள்வது கொஞ்சம் அதிகம் ஆர்வம் உள்ள ஆட்கள் இவர்கள். எனவே 1878களில் Indian locomotives உற்பத்தி அதிகம் ஆக - உடனே தடை செய்தார்கள் பிரிட்டீஷ். இத்தனைக்கும் மிக மிக குறைந்த செலவில் செய்த போதும் தடை விதிக்கபட்டது.
காரணம் அவர்கள் தொழில்நுட்பம் இந்தியர்கள் கைக்கு செல்ல கூடாது. ஆனால் இந்தியர்கள் உழைப்பில் கிடைக்கும் வருமானம் மட்டும் இவர்களுக்கு தேவை. இது அனைத்து துறைகளிலும் நடந்த உண்மை. அதாவது இவர்கள் எந்த தொழில் நுட்பத்தையும் இந்தியர்க்கு கொடுத்துவிட்டு போகவில்லை.
ரயிவே துறையில் கிடைத்த வருமானம் முழுக்க பிரிட்டிஷ் அரசுக்கு சென்றது. அதை என்ன இந்தியாவிலா முதலீடாக செய்தனர்??? இல்லை கிடைத்தா லாபத்தில் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தனரா????
எடுத்துக்காட்டுக்கு 90,000இந்திய மக்கள் வருமானமும் அன்று ஒரு பிரிட்டீஷ் ஸ்டேட் செகரட்டரி ஒரு மாத சம்பளமும் ஒன்று.
ரயில்வே துறையில் இந்தியர்கள் நாயை விட கேவலமாக வேலை பார்த்து பற்றி என்னால் இன்னும் அதிகம் பேச முடியும். இன்று இந்தியாவிடம் இருக்கும் அத்தனை தொழில்நுட்பமும் இந்தியா தானே உருவாக்கிக்கொண்ட விஷயம். இந்தியர்கள் முட்டாள்கள் இல்லை வாய்ப்புகள் கொடுக்காமல் மறுக்கபட்டு ஒடுக்கப்பட என்ன செய்ய முடியும் இந்தியவர்களால்? இதை இத்தோடு விட்டு விட்டு அடுத்து ஆடை உற்பத்திக்கு செல்வோம்.
------------------------------------------------------
ஆடை உற்பத்தி ?
பிரிட்டீஸ் விட்டு செல்லும் போது இந்தியாவில் வீட்டுக்கு 1,2 சேலை கூட கிடையாது. அந்த அளவுக்கு ஆடை என்பதே ஆடம்பரம் என்ற நிலையில் மிக கொடூரமான ஒரு பெரும் அழிவை இந்தியர்களின் ஆடை உற்பத்தி தொழிலில் உருவாக்கி இருந்தார்.
இந்தியர்கள் தான் உலகத்தில் பருத்தி விளைச்சல் , அதை எடுத்து நூல் செய்து , நூலைகொண்டு ஆடை நெய்யும் புத்திசாலித்தனம் முதலில் பெற்றவர்கள். woven ஆடைகளும் பிரமாதமாக செய்வார்கள். இதை பெரும்பாலான கிரேக்க வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏறக்குறைய 3000வருடம் மேலாக இந்த நாட்டில் நல்ல பருத்தி ஆடைகளை இவர்கள் உடுத்தினர், அதை சார்ந்த தொழில் நுட்பம் இவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக இருந்துவந்தது. அலெக்சாண்டர் வரலாற்றில் இதன் குறிப்புகள் உண்டு.
பெங்கால் , ஆந்திரா , தமிழ் நாடு, குஜராத் என்று எல்லா இடங்களிலும் 17ஆம் நுற்றாண்டு இறுதி வரை கூட மற்றநாடுகளுக்கு ஏற்றுமதி நடந்தது. இதற்கு பக்கா ஆதாரங்கள் இந்தியாவிடம் உண்டு. துருக்கி , ஜாவா , சீனா , ஜப்பான் என்று ஏற்றுமதி ஆனா வரலாறு உண்டு.
சரி ஏன் அவை அடியோடு அழிந்து போனது???
வேறு என்ன காரணம் பிரிட்டீஷ். இவர்கள் காலனிநாடுகளில் எங்கேயும் இந்தியர்கள் ஆடை இறக்குமதிக்கு 70%முதல் 80%வரை வரி விதித்தனர். அது ஏன்? ஏன் என்றால் பிரிட்டீஷ் உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் ஆடை விலை மிக மிக அதிகம், அதே ஆடை இந்தியர்கள் மிக குறைந்த செலவில் ஏற்றுமதி செய்ய உலகமே இந்தியர்களை விரும்பியது. அதை எப்படி தடுப்பது???? போடுடா வரியை... எவனும் இந்தியர்கள் ஆடையை வாங்க கூடாது , வாங்க முடியாது. அந்த அளவு விலை ஏறியது.
தொழில் போட்டிக்கு வக்கு இல்லாத பிரிட்டிஷ் தொழில்சாலைகள் அதிகாரம் கொண்டு இந்திய தொழில்சாலைகளை ஒடுக்கினர்.
காலணி நாடுகளில் இந்தியர்கள் நெய்த ஆடைக்கு பல மடங்கு வரி விதிக்க - என்ன மிச்சம் இருக்கும் இந்திய தொழிலாளர்க்கு? வியாபாரிகளுக்கு? நாசம் அல்ல - சர்வ நாசம் ஆகிப்போனது இந்த அற்புதமான மக்களின் ஆடை செய்யும் தொழில்நுட்பம், வியாபாரம்.
பெங்கால் பகுதியில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 16,000,000 அதாவது இன்றைய மதிப்பில் சுமார் லட்சம் கோடி வருமானம் ஈட்டிய நாட்கள் 17ஆம் நூற்றாண்டு. {2469.0% விலை தங்கள் குறைவாக கிடைத்த காலம். அதாவது சுமார் 1கிராம் தங்கம் 1.7ரூபாயாக இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம் என்று கொஞ்சம் கற்பனை செய்யவும்.}
{15ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை கூட இந்தியா முழுவதும் தங்கம் அதிகம் கிடைக்க காரணமே இந்தியர்களின் வியாபார திறமையும் , தொழில் திறமையும் தான். அதை வாஸ்கோடகாம வந்த பொழுதே குறிப்பாக அறியலாம். பின்னர் இந்த தேசம் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர் அனைவரும். இந்தியா சென்றால் தங்கம் நிச்சயம் கிடைக்கும் என்ற பேராசையில் இந்த தேசம் சூறையாடியது உலகமே.}
ஆக இறுதியில் தனக்கே ஆடை இல்லாமல் நின்றான் இந்தியன். இதை இப்படி எடுத்துகொள்ளுங்கள் உலகத்தில் 4ல் ஒருவர் இந்தியாவில் உற்பத்தியான ஆடையை அணிந்தனர் 17ஆம் நூற்றாண்டு வரை அது தான் உண்மை. 18 ஆம் நுற்றாண்டு தொடக்கத்தில் - அப்படி இருந்த நாடு தொழில் வளர்ச்சி நாசம் ஆகி நடுதெருவுக்கு வந்தது இந்த முட்டாள் தனமான பிரிட்டீஷ் வியாபார உக்தியால்.
ஏன் முட்டாள்கள் என்கிறேன்???? இங்கே காலணி நாடுகளில் வியாபாரம் நல்ல நிலையில் இருந்தால் தானே வரி வழூல் செய்து பிரிட்டீஷ் ஆட்சியரும் நல்லா இருக்குலாம் காலணி நாட்டு மக்களும் நல்லா இருக்காலம். அப்போ இந்திய தொழில் வளர்ச்சி மறைமுகமாக அவர்களுக்கும் லாபம் தானே? ஆனால் தாங்கள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் , தாங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் - இந்தியர்கள் அடிமைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற முட்டாள் தனமான அதிகார புத்தியால் பொருளாதாரம் நாசம் ஆகி போனது.
ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால்:
1865களில் அமெரிக்கன் சிவில் வார் ஆரம்பித்த நேரத்தில், இரண்டாவது முதல் உலக போர் ஆரம்பமான காலத்தில் இந்த இரண்டு காலத்திலும் ஏற்றுமதி கட்டுபாடுகளை தளர்த்தியது பிரிட்டீஷ் - அந்த இரண்டு நேரத்திலும் இந்தியர்கள் மீண்டு எழுந்து மீண்டும் உலக சந்தையை பிடித்தனர். அதாவது 1865ல் தளரத்திய உடன் மீண்டும் எங்கள் இந்தியர்கள் ஆடை உற்பத்திக்கு பெரிய அளவில் தேவை உருவாக 1896ல் மொத்த உலக உற்பத்தியல் இந்தியர்கள் 8-9% பங்களிப்பை வழங்கினர். ஆனால் மீண்டும் முடக்கிவிட்டனர். அடுத்து முதல் உலகப்போர் முடிவில் 1936ல் உலக ஆடைகள் உற்பத்தியில் இந்தியர்களின் பங்கு என்ன தெரியுமோ ? 68%. அதாவது உலகத்தில் 10ல் 7பேர் இந்தியர்கள் ஆடையை அணியும் அளவுக்கு பெரும் வளர்சி பெற , மீண்டும் ஆடை உற்பத்தி, இறக்குமதிக்கு மீண்டும் வரி கொண்டு நசிக்கி நாசம் செய்தனர் பிரிட்டீஷ்.
அமெரிக்கன் ஆயுதங்களை தயாரிப்பதில் வெற்றிபெற்ற ஒரே காரணம் தான் பிரிட்டிஷ் கீழ் இந்தியா வர காரணம். வேறு எந்த காரணமும் இல்லை. தொழில் , வியாபாரம் எல்லாமே இந்தியர்கள் பலமடங்கு அவர்களை விட முன்னேறிய சமூகமாக இருந்தனர். இது தான் அசைக்க முடியாத உண்மை.
------------------------------------------------------
கல்வி???
அந்த கல்லூரி இந்த கல்லூரி கட்டி கொடுத்தான் என்ற கூப்பாடு இருக்கட்டும் 200 வருடம் ஆட்சியில் இருந்துவிட்டு கல்வி கொடுத்துவிட்டு சென்றான் என்றால் எடுத்து புள்ளிவிவரம் பாருங்கள். 1947இந்தியா சுதந்திரம் வாங்கும் பொது 12% தான் படித்தவர்கள் என்று கூறுவது கூட சரியான கணிப்பு அல்ல , உண்மையில் அது 7%க்கும் கீழ்.
அதாவது 200வருடம் இந்த பிரிட்டீஷ் ஆட்சியில் 7% படித்து முன்னேறி இருந்தோம். 1947க்கு பின் இந்தியர்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்த இந்த கடந்த 60வருடத்தில் ஏறக்குறைய 80% படித்தவர்கள் என்ற நிலையை எட்டிவிட்டோம். இந்த விசயத்தில் யார் சிறந்தவர்கள்????
இந்த கல்வி முறையே அவன் கொடுத்த பிச்சை என்று பேசும் விச பாம்புகள் இந்த பாதரியார்களுக்கு நான் கூற விரும்புவது கொஞ்சம் 12ஆம் நூற்றாண்டுவரை கொரியா , சீனா , இந்தோனேசியா என்று ஆசியா முழுவதும் சில ஐரோப்பிய தேச தலைசிறந்த வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் எங்கே படித்தவர்கள் என்று கொஞ்சம் விவரம் தேடி படிக்கவும்.
நாலாந்தா , விகரமாசிலா , ஓடந்தபுரி , மகவிஹரா என்று நாங்கள் தான் உலகம் முழுவதும் கல்விகளை சென்று சேர்த்தவர்கள். 12ஆம் நூற்றாண்டு வரை உலகமே கல்விக்கு இந்தியா தான் சிறந்த இடமாக இருந்தது.
2,000ஆசிரியர்கள் , 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்தது உலகத்தில் எங்க நாலந்தா கல்வி கூடத்தில் தான். அது ஏதோ இன்று நேற்று அல்ல - 1200கிபி வரை நன்றாவே இயங்கியது. இது போல பல்கலைக்கழகம் சென்று கல்வி பயின்ற ஆசிரியர்கள் பின்னர் அங்கிருந்து பிரிந்து குருகுலம் நடத்தி கல்வியை கொடுப்பது இந்த இந்தியாவின் கலாச்சாரம்.
ராஜா ராம்மோகன் ராய் 19ஆம் நுற்றாண்டில் கிராமங்களில் பள்ளிகள் தொடங்கி கல்வி கற்பிக்கும் முறையை அறிமுகம் செய்ததாக எங்களுக்கு வரலாறு இருக்கு. இது போல பல மனிதர்கள் பல முயற்சிகள் கிராமங்களில் செய்தனர்.
அதாவது எல்லோரும் காசி , நலந்தா என்று சென்று படித்துவிட்டு பின்னர் நாடு , ஊர் திரும்பி மக்களுக்கு கல்வி கொடுப்பது என்று சுமார் 2000வருட பழைய குருகுல கல்விமுறை இந்த இந்தியாவில் இருந்தது. உலகம் முழுவது 12ஆம் வகுப்பு வரை படிப்பதே காரணம் இந்தியாவில் குருகுல கல்வி 12ஆண்டுகள் சொல்லி கொடுத்த பாதிப்பு தான் ஒழிய வேறு இல்லை.
{ஜாதி கொண்டு கல்வி மறுக்கும் கீழ்தரமான புத்தி என்னவோ இந்தியார்களுக்கு 800கிபிக்கு பின் தான் வந்திருக்க வேண்டும். ஏன் என்றால் அதுவரை அனைவருமே கல்வி கூடங்களுக்கு சென்று படித்த வரலாறு உண்டு. குலம் என்பது பிறப்பால் அல்ல என்ற விஷயம் மறந்து- பிறப்பால் ஜாதியஅடையாளம் என்ற கட்டமைப்பு என்று உருவானதோ அன்று நாசமாக தொடங்கியது இந்த மண். அதற்காக பிரிட்டீஷ் ரெம்ப நல்லவன் கிடையாது. அங்கேயும் அடிமைகள் காலச்சரம் இருந்து வந்தது.}
சரி எதனால் கல்விமுறை இங்கே பிரிட்டீஷ் கொண்டுவந்தது?
1820களில் மிக பெரிய அளவில் பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் உள்ள அனைத்து நாடுகளிலும் மதம் மாற்றும் வேலைக்கு அனுப்பபட்டார்கள், அவர்கள் Evangelist. இந்த Evangelist வேலை மதம் மாற்றுவது - பிரிவினைகளை உருவாக்கி அதன் மூலம் மதம் மாற்ற வேண்டும். இங்கே மட்டும் அல்ல அனைத்து காலணி நாடுகளிலும் இந்த கூட்டம் சென்று வேகமாக வேலை செய்தது. எனவே ஆங்கிலம் கட்டாயம் ஆக்கபட்டது, அவர்கள் கூறும் வரலாறு தான் படிக்க வேண்டும் என்ற நிலை உருவானது.
இன்றுவரை வாஸ்கோடா காமா முதல் முதலில் இந்தியா வந்தார் என்று தான் படிக்கிறோம். என்ன செய்ய? அவர் வருவதற்கு முன்பே இந்தியர்களின் வர்த்தகம் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருந்தது என்பதற்கு மிக பல ஆதாரங்கள் உண்டு. இன்னும் சொல்வதானால் வாஸ்கோடாகாம வரும் போது இங்கே இந்திய மன்னர்கள் அரபு வணிகர்கள் , இந்தோனேசிய வணிகர்கள எல்லோரும் இருந்ததாக தானே கூறியுள்ளார். ஆனாலும் அவர் தான் முதலில் வந்தார். யாருக்கு? பிரிட்டீஷ் காரர்களுக்கு ஒரு போர்சுக்கள் காரர் வந்தது தான் முதல் வரலாறு. எங்களுக்கு அல்ல. ஆனாலும் நாங்கள் இந்த வரலாற்றை படித்து தொலையவேண்டியதாக உள்ளது. அதுக்கு காரணம் நேரு.
இன்னொரு சுவாரசியமான விஷயம் :
எகிப்த மன்னன் Ramesses II இறந்த பதபடுத்தபட்ட உடலில் இருந்து தற்போது கெய்ரோ மியுசியமில் உள்ளது. அந்த உடலில் x-ray examination செய்யபட்டபோது கிடைத்த தகவல்படி - அதில் பயன்படுத்த பட்டுள்ளது "மிளகு". அதாவது கிரேக்கம் , ரோமன் என்று எந்த பழைய நாகரீகமும் இந்திய நாகரிகத்துடன் வணிகம் செய்து வந்ததற்கு பல ஆதாரம் உண்டு - அது எவ்வளவு பழமையானது என்று இதை வைத்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த மிளகு வரலாறு கொஞ்சம் படிங்க நாங்க யார் என்பது தெரியும்.
எனவே நோக்கம் மதம் மாற்றவேண்டும் , தங்கள் வரலாறு தான் உலக வரலாறாக படிக்கவேண்டும் , தாங்கள் சொல்வது தான் இந்திய வரலாறு என்று இருக்க வேண்டும் என்ற கேடுகெட்ட புத்தி. நாங்கள் இங்கிலீஷ் மேனின் காப்பி ஆகி போனோம். Imitative Englishmen என்பது தான் பெருமை என்று ஆகிபோக மதம் மாற்றுவது எளிதாகி போனது. அதனால் எங்கள் பாரம்பரிய கல்வி முறை அழிந்தது. இப்போ பலருக்கு வாஸ்கோட காமா தான் பெரிய ஆள். அவர் எதனால் வந்தால் வந்து என்ன அட்டுழியம் செய்தார் என்பதெல்லாம் பலருக்கு தெரியாது.
பிஜேபி சமிபத்தில் வரலாற்றை மாற்றி எழுதுவதாக கூப்பாடு போடும் வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கதறவேண்டும்???? ஏன் என்றால் பிஜேபி உண்மையான வரலாற்றை மாற்றி எழுத விரும்புகிறார்கள். சும்மா ரயில் , மருத்துவம் , கல்வி என்று பிரிட்டீஷ் ஒரு முகத்தை மட்டும் நடத்துவது தான் இங்கே இருக்கும் பெரிய தவறு என்று மாற்றி உண்மையை எழுத கூச்சல் போடுகிறார்கள்.
--------------------------------------------------------------------
மருத்துவமனைகள்?
1782, 92, 1803 , 1804 , 1820 தொட்டு இரண்டாண்டுக்கு ஒருமுறை வறட்சியும் வறுமையும் மக்களை வாட்டி வதைக்க காரணம் என்ன? 1838வரை நம்மிடம் தெளிவான தகவல்கள் இருக்கு. அதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் கூட்டம் கூட்டமாக மக்கள் இறந்து போக அதற்கு எந்த விததிலும் தடுக்கும் முயற்சி எடுக்காமல் விட்டுவிட்டு வரியை மட்டும் கராறாக பெற துடித்தனர் பிரிடீஷ்.
இந்தியாவில் தொடர்ந்து வரட்சி , வறுமை , நோய் தாக்குதல் ஒவ்வொரு ஆண்டும் பரவ காரணமே இந்த முட்டாள் பிரிட்டீஷ் அரசு தான். என்ன சொல்கிறீர் முட்டாளா??
ஆம் , இந்தியார்கள் உழைப்பின் மூலம் பிரிடீஷ் அரசுக்கு 1922களில் வந்த வருமானம் மொத்த வருமானத்தில் 64%. அதாவது பிரிட்டீஷ் உலகம் முழவதும் காலணி நாடுகள் நடத்தலாம் ஆனால் வருமானம் கொட்டியது இந்தியாவில் தான். 100ரூபாயில் 64 ரூபாய் இந்த மக்களை ரத்தம் போல உறிஞ்சி தான் வாழ்ந்தனர்.
அப்படி வருமானம் கிடைக்கும் இந்த மக்கள் கொஞ்சமாது நல்ல இருந்தா தானே இன்னும் வருமானம் அதிகம் ஆகும்??? உழைப்பவன் நாசம் ஆகிவிட எங்கிருந்து வருமானம் கிடைக்கும்????? இந்த அறிவு இல்லாமல் காலரா , அம்மை என்று பரவினால் என்ன ஆகும்?
சென்னை ஒரிஸா பிகார் பம்பாய் என்று இந்தியா முழுவதும் வறுமையில் அதாவது உணவு இன்று இறந்தவர்கள் 1700- 1900 குள்ளாக மட்டும் சுமார் 2.5கோடி மக்கள் இறந்து போனார்கள். இந்த மாதிரி ஒரு கேவலமாக ஆட்சியை உலகத்தில் எவனும் இதற்கு முன்னர் கொடுத்திருக்க மாட்டான். 1900-1947குள்ளாக 1.5கோடி மக்கள் வறுமை காரணமாக இறந்தனர். மன்னர்கள் காலத்தில் இப்படி இறந்ததாக வரலாறு கிடையாது. அம்மை , மலேரியா போன்ற கொல்லை நோய்கள் பரவியது உண்டு. ஆனால் வறுமை இப்படி இருந்தது இல்லை.
இன்னொரு சுவாரசியமான தகவல்:
1866ல் ஒரிஸாவில் மிக பெரிய வறட்சி,. மக்கள் உணவுக்கு ஏங்கும் நிலையில் பிரிட்டன் அந்த பகுதியில் விளைந்த அரிசி சுமார் 1லட்சம் கிலோ அரிசியை பிரிட்டீஷ்க்கு ஏற்றுமதி செய்தது.. இங்கே பட்டினி சாவு , ஆனால் அவனுக்கு இங்கே உழைத்த மக்களின் அரிசி மட்டும் எந்த தடையும் இல்லாமல் சென்றது.
{1519-1939வரை சுமார் 53,00,000அடிமைகள் கொண்ட காலணி நாடுகளில் அடிப்படை கட்டுமான வேலைகள் , விவசாயம் என்று அனைத்து பார்த்தனர். அடிமைகள் என்றால் எல்லோருக்கும் ஆப்ரிக்க அடிமைகள் மட்டும் தான் நியாபகம் வரும். ஆனால் ஆப்ரிக்க மக்க 58% என்றால் இந்தியர்கள் 32% அடிமைகளாக உழைத்தார்கள். யார் குரல் கொடுத்தார் இவர்களுக்கு???}
பின்னர் இது பெரிய அளவு இந்தியாவில் உற்பத்தி பாதிப்பினை உருவாக்க - நேரடியாக பிரிடீஷ் வருமானம் வீழ்ச்சி கண்டது. என்ன செய்வர்??
மக்களுக்கு மருத்துவம் கொடுக்க முடிவு செய்தனர். எப்படி??? அப்போதும் இந்த மக்களிடம் இருந்த பழைய மருத்துவமுறைகளை முற்றிலும் அழிக்கும் வேலையும் , நல்ல தரமான மருத்துவ குறிப்புகளை இந்த மக்களிடம் இருந்து திருடும் வேலையும் தான் செய்தனர். எனவே காலனிநாடுகளில் குறிப்பிட்ட அளவு வருமானத்தை முதலீடு செய்வது மிக முக்கியம். அது மக்கள் நல்லா இருக்கணும் என்று காரணம் அல்ல - அப்போ தான் அரசுக்கு வருமானம் கூடும்.
சரி இப்படி அத கட்டுனேன் இதை கட்டுனேன் என்று கூறும் கூட்டம் கொஞ்சமாது பொருளாதார அறிவு இருக்கும் கூட்டமா???? நம்மிடம் 100ரூபாய் வருமானம் பெற்றால் நமக்கு எவ்வளவு செலவு செய்தான் என்று பார்கக்வேண்டுமா இல்லையா?
பிரிட்டீஷ் நமக்கு நம் வருமானத்தில் செலவு செய்தது வெறும் 0.2%கூட கிடையாது. அந்த முதலீட்டில் தான் இந்த மருத்துவமனை , கல்வி நிலையங்கள் எல்லாம் வந்தன. அப்போ பிரிட்டீஸ் அரசுக்கு எவ்வளவு கிடைத்திருக்கும் என்று கொஞ்சம் சிந்திக்கவும். அறிவு , நாட்டின் மீது அக்கரை இருக்கும் எந்த மனிதனுக்கும் இதன நியாயம் புரியும், மத பற்றால் இந்த நாட்டை விட்டுவிட்டு காசாவையும் , ஜெருசலம் , பாலஸ்தீனம் என்று இன்னொரு நாட்டின் மண்ணை புனிதம் என்று கருதும் யாருக்கும் இது புரியாது.
-----------------------------------------
இந்தியர்கள் வேறு என்ன செய்தோம்??
இந்தியர்களை அடிமைகளாக பிஜி , தென் ஆப்ரிக்க, மலேசியா, சிங்கபூர் என்று உலகம் முழுவதும் எடுத்து சென்று ஒரு கழுதைவியை விட மோசமாக வேலை வாங்கியதை பற்றிய வரலாறு படிக்கவும்??? அங்கே விவாசாயம் செய்ய கூறி செய்த கொடுமைகளை தெரியுமா?? தென் ஆப்ரிக்க மண்ணில் இந்த மக்கள் கரும்பு தோட்டத்தில் பட்ட கஷ்டம் ஒருவராது இங்கே அறிவார்களா??
அதாவது எந்த நாட்டிலும் இருந்து அடிமைகள் இங்கே வரவில்லை , இந்த மக்கள் தான் பிரிட்டீஷ் காலணி நாடுகளுக்கு சென்று அடிமைகளாக விவசாயம் முதல் தொழில்துறை வரை அனைத்தையும் செய்தனர். ஏன்???? ஏன் என்றால் இயற்கையாக இவர்கள் விவசாயம் முதல் வியாபாரம் வரை அத்துபடி. அதை அதிகாரம் கொண்டு சுரண்டினர் பிரிட்டீஷ் ஆட்சிர்கள்.
ராஜராஜ சோழன் காலத்துக்கு முன்பிருந்தே கப்பல் கட்டும் தொழில் நுட்பம் இங்கே இந்தியருக்கு கைவந்த கலை. மராட்டிய சிவாஜியிடம் 500க்கும் மேற்பட்ட கப்பல்கள் இருந்தன. கல்கொத்தா கப்பல் கட்டும் தொழிலுக்கு மிக பிரசித்திபெற்ற இடம். இப்படி வணிக ரீதியாக உயர்ந்த அளவில் இருந்த மக்களை கொண்டு 300க்கும் மேற்பட்ட கப்பல்களை சரக்கு சுமந்து செல்ல செய்ய கூறி அடிமை தனம் செய்த பிரிட்டீஸ் ஒரு ஒரு கப்பலை ஏற்றுமதி செய்ய இந்தியர்களுக்கு அனுமதி வழங்கியதா??? எங்கள் வா உ சிதம்ரம் பிள்ளை போன்றவர்கள் எடுத்த முயற்சியை நாசம் செய்ததோடு சிறை அல்லவா அடைத்தனர்.
தொழில் போட்டி என்றால் நேரடியாக மோதவேண்டும்.
போட்டுக்கு இந்தியர்கள் வளரவே கூடாது அடிமை அடிமை அடிமை என்று ஆக்கிவிட்ட இந்த பிரிட்டிஸ் அரசை இன்று தூக்கி கொண்டாடுகிறான் இந்த நியூஸ் 7 செய்தி சேனலில் திரியும் ஒரு ஒநாய்... காரணம் என்ன??? மதம் மதம், அவர் கிருஷ்டவ மதம் அவனை இந்த பூமியை புனிதம் என்று மதிக்க பழக்கவில்லை.
உலக போரில் இந்தியர்கள் இல்லை என்றால் இந்த பிரிட்டீஸ் அதன் நேச நாடுகள் ஒன்னும் இல்லாமல் ஹிட்லரிடம் அடிவாங்கி அழிந்து போகி இருக்குமே அந்த உண்மை ஏன் மறைக்கிறார்கள் பிரிட்டீஷ்???
பிரிட்டீஷ் வெற்றிக்கு யார் காரணம் - குட்டியா இந்தியர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைதத்தா????
ஜெர்மனி ஏன் தோற்றது??? காரணம் அவர்களிடம் போருக்கு தேவையான ஆயுதங்கள் , ஆடைகள் என்று அனைத்தையும் உற்பத்தி செய்து வீரர்களுக்கு அனுப்ப பெரிய அளவு labour இல்லை. ஆனால் பிரிட்டீஷ் அரசுக்கு 1,40,00,000 இந்தியர்கள் வேலை செய்தோம்.. அது மட்டுமா 25லட்சம் வீரர்கள் பிரிடீஷ் அரசுக்காக போரில் இறங்கினர் , இது தவிர் கப்பல் விமான படை என்று எல்லாவற்றிலும் கடைமட்ட ஊழியர்கள் இந்தியர்கள் தான். சுமார் 2கோடிக்கும் மேல். அதாவது ஜெர்மனி வேறு 3.5லட்சம் ஊழியர்களை கொண்டு தன் படைக்கு தேவையான உற்பத்தியை செய்ய , பிரிட்டீஷ் படைக்கு 1.5கோடி ஊழியர்கள் இந்தியாவில் வேலை செய்தனர்.
மீண்டும் கூறுகிறேன் வேறு எந்த நாட்டினரும் இந்த வேலையில் இல்லை. முழுக்க முழுக்க labour force பிரிடீஷ்க்கு கிடைத்தது இந்தியர்களிடம் தான். அது தான் முதுகெலும்பு வீரர்களுக்கு. ஆனால் எங்கள் நாட்டில் நாங்களே எங்களுக்கு அங்கீகாரம் இல்லாத ஒரு படிப்பை பள்ளிகளில் படிக்கிறோம்.
அந்த புண்ணியம் எங்கள் நேரு , நேரு குடும்பத்தை சாரும். தமிழ் நாட்டில் அதையும் விட கேவலமான திராவிட கட்சிகள் வரலாறு தானே படிக்கிறோம். வைக்கம் வீரர் ஈவே ராமசாமி என்று இன்றுவரை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வரலாறு நடத்தி மக்களை முட்டாள் ஆக்கும் கூட்டம் திராவிட கட்சிகள். இப்படி இருந்தால் எது தான் விளங்காது?
--------------------------------------------------
என்னால் ஒரு பதிவில் மொத்தமும் வெளியிட முடியாத நாசமான வரலாறு இந்தியர்களுடையது.
நேதாஜி போல் மாமனிதர்கள் நாட்டை ஆளாமல் போக கெட்ட நேரம் இந்த பாவம் இன்னும் இந்தியாவை விட்டு போகவில்லை.
-------------------------------------------------------
இறுதியாக :
1947ல் விடுதலை. அதன் பின் சரியோ தவறோ சட்டம் ஆட்சியர் எல்லாம் விடுங்கள். ஆனால் மக்கள் சுதந்திரம் கிடைக்க மீண்டும் எழுந்து உழைத்தனர். இன்று?
இன்று உலகத்தின் 4வது மிக பெரிய ராணுவம் இந்தியர்களுடையது;
உலகத்தின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், மிக பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6இடத்தில்
textile exporters மீண்டும் இந்தியர்கள் 3ஆவது இடத்தை பிடித்துவிட்டோம்.
Space Research Organisations என்று எடுத்து பார்த்தால் - இந்தியா 5இடத்தில் உள்ளது.
கல்வி ? 7% என்று விட்டு சென்ற பிரிட்டீஷ் - இன்று 80%நெருங்கிவிட்டோம்.
பிரிட்டீஸ் தான் இந்தியாவில் கிரிக்கெட் சொல்லி கொடுத்தேங்க - இரண்டும் முறை உலக கோப்பையை வாங்கிவிட்டோம்.
{இந்த கட்டுரை எழுதும் போது உலகத்தின் global hunger index இந்தியர்கள் 100இடத்தில் இருபதாக செய்திகள் வெளிவருகின்றன. அதற்கு காரணம் அரசு அல்ல . ஏன் என்றால் உலகத்தின் பெரிய ஆளவு உணவு ஏற்றமதி செய்யும் நாடுகளில் முக முக்கியமானது இந்திய. இந்தியாவில் ரேசன் கடைகளில் இலவச உண்டு தொட்டு பள்ளிகளில் கூட இலவச உணவு உண்டு. பிரச்சனை மக்களுக்கு ஆரோக்கியமான உணவு எடுக்கும் பழக்கம் உருவாகவில்லை என்று தான் global hunger index தெளிவாக கூறுகிறது. அதை தனியாக் விளக்குகிறேன். உடனே இந்தியாவை அவமானம் செய்ய ஒரு கூட்டம் ஓடி வரும்.}
இன்னும் ஆயிரம் சாதனைகளை சொல்லி கொண்டே செல்லலாம். மிக மிக முக்கியம் இந்தியர்களிடம் இன்று இருக்கும் சாதனைகள் 99.9% பிரிடீஷ் அரசுக்கு எந்த சொந்தமும் கிடையாது அது ரயில்வே முதல் மருத்துவம் வரை. அது நாங்கள் 1947க்கு பின்னர் எங்கள் முயற்சியால் உருவாக்கி கொண்டது தவிர எவனுடைய பிச்சையில் வாழவில்லை. தெற்காசியாவில் எங்கள் தயவு இல்லாமல் எந்த அணுவும் நகராது - உலகத்தில் இந்தியாவை தவிக்கமுடியா சக்தியாக உருவாக்கியுள்ளோம்.
இந்த நாட்டை இந்த மண்ணின் அருமை, தியாகம், புகழ் என்று இவ்வளவு தெரியாமல் ஏன் இந்த கிருஸ்தவ மதம் மாற்றும் மக்களுக்கு பிரிட்டீஸ் பெரிதாக தெரிகிறது???
காரணம் - அவர் கொண்ட மதம் என்றால் இவர்களை விட கேவலமான ஒரு ஈன பிறவி இந்த மனித குலத்தில் வேறு கிடையாது. இப்படி நாட்டை நாசம் செய்த பிரிட்டீஸ் அரசை உயர்வாக பேசி திரியும் யாரையும் "தூக்கில் போடுங்கள் இல்லை சட்டம் கொண்டு சுட்டு தள்ளுங்கள்" என்று கூறுவேன்.
எதற்கு இவ்வளவு வெறி, கோபம்?
பிரிடீஷ் வரி வசூல் செய்யும் அதிகாரிகள் ஒருமுறை வரி கட்டாத காரணத்தால் கல்கொத்தாவில் ஒரு வியாபாரியின் மனைவியை நடு தெருவில் ஆடையை கழற்றி, நிர்வாணம் ஆக்கி பின்னர் செய்த கொடுமையை நான் படித்த போது தோன்றியது "இந்த அளவு மக்கள் தியாகத்தை, மதம் மாறிய ஒரே காரணத்தால் ஒருவன் பிரிடீஷ்க்கு வக்காலத்து வாங்குவான் என்றால் அவன் ஏன் உயிருடன் இங்கே இருக்கவேண்டும்?".
அதாவது நன்கு புரிந்து கொள்ளுங்கள் எனக்கு கோபம் பிரிடீஷ் மக்கள் மீது கிடையாது. அது வரலாறு , அவர்களுடைய முன்னோர் செய்த குற்றம். எனவே இன்று இருப்பவர்களிடம் நான் காட்டுவது ஏற்புடையது அல்ல. ஆனால் அதை சரி என்று வக்காலத்து வாங்கும் இங்கே இருக்கும் இந்த மதம் மாற்றும் கூட்டத்தை, பெரியார் என்ற ஈவே ராமசாமி கூட்டத்தை நான் வெறுக்கிறேன். இவர்கள் அழித்தொழிக்க பட வேண்டும் என்பேன்.
வரலாற்றை படித்துவிட்டு மனசாட்சியுடன் பேசுங்கள் - நான் (மாரிதாஸ்) கொண்ட இந்த கோபத்தின் நியாயம் புரியும்.
{பிஜேபி நாடுமுழுவதும் பள்ளிகளில் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியை நான் முழுமையாக வரவேற்கிறேன்.}
-மாரிதாஸ்

சோமநாதர் ஆலயம்

 சோமநாதர் ஆலயம். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய உண்மை சரித்திரம்,

கி.பி. 1001ல் முஹம்மது கஜ்னி என்ற கொள்ளையன் செழிப்பாக இருந்த பாரத தேசத்தை நோக்கி தன் கவனத்தை திருப்பியதுதான் நம் நாட்டின் கொடூர சரித்திரத்திற்கு தொடக்கம். அச்சமயத்தில் பெரும் சக்ரவர்திகள் இல்லாமல் இருந்ததும் ஒரு பெரும் பின்னடைவு. சிற்றரசர்களால் ஆளப்பட்டிருந்த இன்றைய ஆப்கான் பகுதிகள், துருக்கிய கொள்ளைக்காரனுக்கு எளிதான விருந்தாகப் பட்டது. பல தடவை படையெடுத்து அவன் ஜெயபாலா என்ற அரசர் ஆண்டுவந்த இன்றைய பெஷாவர் என்ற பகுதியை பிடித்தான். பின்னர் அருமையான விளைநிலங்களை கொண்ட பஞ்சாப் பகுதிகளை அவன் பிடித்தான்.
அவன் பெரும்பாலும் ஹிந்துக்களின் கோவில்களை குறி வைத்தான். அக்காலங்களில் ஹிந்துக்கள் தனிப்பட்ட முறையில் சொத்துக்களை அதிகமாய் வைத்திருப்பதில்லை. மாறாக கோவில்களுக்கு அவற்றை வழங்கி விடுவார்கள். கோவில்களில் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருந்தன. அரசர்களுக்குள் போர் வந்தாலும் கோவில்களை யாரும் தாக்கும் வழக்கம் இல்லை. ஆனால் முஹம்மது கஜ்னியோ கொள்ளைக்காரன் ஆயிற்றே, அவனுக்கு ஏது தர்ம நெறிகள் ?
வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளை அவன் ஊடுறுவி, அழித்து பின் திரும்ப சென்று விடுவான். அவ்வாறு திரும்ப திரும்ப செய்து அவன் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் பயத்தை உண்டாக்கி இருந்தான். நாகர்கோட், தனேசர், மதுரா, கனௌஜ், கலிஞ்ஜர் மற்றும் சோமநாதபுரியில் அவன் இவ்வாறாக ஊடுறுவி, பேரழிவை உண்டாக்கி விட்டு திரும்பி சென்று விடுவான். செல்லும் போது பலரை அடிமைகளாக பிடித்துக் கொண்டு போய் மதமாற்றி விடுவான். இவ்வாறு முஹம்மதின் ஊடுறுவலால "சிந்தி ஸ்வாரங்கர் சபையை" சேர்ந்த மக்களும் பிற ஹிந்துக்களும் அவனின் மதமாற்றலில் இருந்து தப்பிக்க சிந்து பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
முஹம்மது கஜ்னி, ஆயிரக்கணக்கான ஹிந்து ஆலயங்களை அழித்தான். அதில் குஜராத்தில், சௌராஷ்ட்ரா பகுதியில் இருந்த‌ சோமநாதர் ஆலயமும் அடக்க‌ம். அந்த கோவில் மிக அற்புதமாய் இருந்த‌து. அதில் 300 இசைக் கலைஞர்கள், 500 நடன மங்கைகள், 300 பக்தர்களுக்கு முடியெடுக்கும் பணியாளர்கள் என பலர் பணி புரிந்தார்கள். அருமையான 56 தேக்கு தூண்களால் அந்த கோவில் நிறுவப்பட்டிருந்தது என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கி பி 1025ம் ஆண்டு கஜ்னி அதை காத்து நின்ற 50000 மக்களை கொன்றழித்து அதனை அழித்தான். அதை காத்து நின்றவர்களில் 90 வயதான கோக்னா ரானாவும் அடக்கம். முஹம்மது சோமநாதர் ஆலயத்தில் இருந்த லிங்கத்தை உடைத்து அதன் துண்டுகளை மெக்காவிலும் மெதினாவிலும், தன் தர்பாரிலும், க‌ஜ்னி என்ற மசூதி ஆகியவற்றின் வாயில் படிக்கட்டுகளில் பதித்தான். அந்த பேரழிவை நடத்திவிட்டு 61/2 டன் தங்கத்தோடு அவன் நாடு திரும்பினான். இன்றைய வாங்கும் சக்தியோடு ஒப்பிட்டு பார்த்தால் அதன் தற்போதைய மதிப்பு 13 லட்சம் கோடி என்கிறார்கள் பொருளாதார் நிபுண‌ர்கள். அதாவது பத்மநாபர் கோவிலில் கிடைத்த கருவூலத்தை போல் 13 மடங்கு.
ஜகாரியா-அல்-கஜ்வானி எனும் அரேபிய புவி இயல் அறிஞர் சோமநாத ஆலயத்தின் அழிவை பற்றி கூறுகிறார்.
"சோம்நாத நகரம் கடற்கரை ஒரத்தில் அமைந்த நகரம். அந்த கோவிலில் உள்ள அற்புதங்களில் அதன் பிரதான மூர்த்தியான லிங்கம் மிகவும் முக்கியமானது. அந்த லிங்கம் மேலும் கீழும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் இருந்தது. கோவிலின் மைய பகுதியில் அது இருக்கும். அது காற்றில் அவ்வாறு மிதந்து இருப்பது பார்ப்பவரை அதிசயப்பட வைக்கும். அவர்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் கூட!! ஹிந்துக்கள் அந்த கோவிலுக்கு அம்மாவாசை நாட்களில் தீர்த்த யாத்திரை செல்வார்கள். ஆயிரமாயிரமாய் அங்கு சேர்வார்கள். முஹம்மது அங்கு போர் புரிந்து செல்கையில் அவன் அந்த கோவிலை பிடிப்பதற்கும், அதை அழிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டான். எதற்கென்றால் அதை அழிக்கும் பொருட்டு பல ஹிந்துக்களை முஹம்மதியர்களாய் மாற்றக் கூடும் என்பதால். கடைசியில் அவன் ஒருவழியாய் அதை பிடித்து பல ஆயிரம் ஹிந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றினான். சோமநாதர் ஆலயத்தை அவன் கி.பி. 1025 ஆம் ஆண்டு பிடித்ததும் அந்த லிங்கத்தை வியந்து பார்த்தான். பின்னர் அதை அவனே உடைத்தெறிந்து பின் அதனை எடுத்து வர உத்தரவிட்டான்"
பின்னர் புனரமைக்கப்பட்ட அக்கோவிலை கி.பி. 1296 ஆம் ஆண்டு, சுல்தான் அல்லாவுதின் கில்ஜி அழித்தான். ஆயுதம் இல்லாமல் அதை தடுக்க வந்த 50000 பேர்கள் வாளுக்கு இறையானார்கள். 20 ஆயிரம் பேர் அடிமைகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
மீண்டும் அக்கோவிலை மஹிபாலா தேவா என்கிற சுதாசம அரசர் கி.பி. 1308ம் ஆண்டு கட்டினார். அதை 1375ம் ஆண்டு மீண்டும் முதலாம் முஜாஃபர் ஷா என்பவன் அழித்தான்.
மிண்டும் அது புனரமைக்கப்பட்டது. கி.பி 1451 ஆம் ஆண்டு மஹ்முத் பெக்தா என்பவனால் மீண்டும் அழிக்கப்பட்டது.
பின்னரும் உயிர்பெற்ற அக்கோவிலை, கடைசியாக கி.பி. 1701 ஆம் ஆண்டு ஔரங்கசீப் என்ற கொடுங்கோலனால் மீண்டும் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் அக்கோவிலின் தூண்களை உபயோகப்படுத்தி, ஒரு மசூதி எழுப்பப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிறகு ஹிந்துக்களின் பெரு முயற்சியால் அக்கோவில்
மீண்டும் எழுந்து நிற்கிறது. ஆனால் அது நமக்கு ஆயிரம் பாடங்களை சொல்லித் தரும் ஒரு பொக்கிஷமாய் உள்ளது. இன்றைக்கு அதன் கோபுரங்கள் உயர்ந்து இருந்தாலும், "எல்லா மதமும் ஒன்றுதான்" என்று கூறும் மூடர்களை கண்டு அது வெட்கத்தால் தலை குனிந்து நின்றுகொண்டிருக்கிறது. சரித்திரத்தின் மிக மோசமான தன்மையே அது மீண்டும் மீண்டும் திரும்புகிறது என்பதுதான் என்று அது நமக்கு ஞாபக படுத்துகிறது. ஒற்றுமையும், அதர்மத்தை தட்டி கேட்கும் தன்மையும் நம்மில் அழிந்துவிட்டதை அது உலகிற்கு பரைசாற்றுகிறது.