சார் , பிரிட்டீஷ் அரசு வரவில்லை என்றால் நீங்கலாம் படிச்சுருக்க முடியாது. ரயில், மருத்துவம், கல்வி கிடைத்திருக்க அவன் தான் காரணம்? இப்படி பொதுவாக கிருஷ்தவ மதம் மாற்றும் பாதிரியார்கள் , பெரியார்(ஈவேரா) பகுத்தறிவு கூட்டங்கள் பேசுவதில் நியாயம் இருக்கிறதா? இதைபற்றி உங்கள் விளக்கம் மாரிதாஸ்?{கேள்வி: கார்த்திக்}
Wednesday, 14 October 2020
Good Question, Ultimate reply.
சோமநாதர் ஆலயம்
சோமநாதர் ஆலயம். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய உண்மை சரித்திரம்,
Thursday, 8 October 2020
அழிவு நிலையில் இந்துக்களும் , இந்துக்கோவில்களும்
தாய் மதத்தை தவிக்க விட்டு விட்டு...
Wednesday, 7 October 2020
தஞ்சை நிசும்பசூதனி
முன்பொருமுறை எழுதிய நிசும்பசூதனி கட்டுரையை இப்போது இங்கு பதிவிடுகிறேன். நன்றி.
தஞ்சை நிசும்பசூதனி
மகா சரஸ்வதி எழில் வடிவினள். வெண் பனியின் மலைச் சிகரத்தில் கருணைச் சிகரமாக அமர்ந்தாள். சிம்மத்தின் மீது அமைதியாக அமர்ந்து வீணாகானத்தில் லயித்திருந்தாலும், அம்பு, உலக்கை, சூலம், சக்கரம், சங்கம், மணி, கலப்பை, வில் ஏந்தி சந்திர ஒளியில் பிரகாசித்திருப்பாள். இமயக்கிரியில் அமைதிக் கோலம் பூண்டவள் வெகு விரைவிலேயே கோரக் கோலமாக சாமுண்டியாகவும், சும்ப, நிசும்பர்களை வதம் செய்யப்போகும் நிசும்பசூதனியாக வெகுண்டெழும் காலம் நெருங்கியது.
சத்தியத்தின் நேர் துருவங்களாக, கொடுங்கோன்மையின் முழு உருவாக இருந்த சும்ப& நிசும்ப சகோத ரர்களின் அணுக்கத் தொண்டர்களான சண்டனும், முண்டனும் இமயக்கிரியில் திரிந்திருந்தபோது கௌசீகியை கண்டனர். சிம்மத்தின் மீது அமர்ந்த அழகுச் சிகரத்தைப் பார்த்து திகைத்துப் போயினர். தம் அசுரத் தலைவர்களுக்கு இவளை அர்ப்பணித்தால் என்ன என்று குரூரமாக யோசித்தனர். சும்பனிடம் தாம் கண்ட பேரழகுப் பெண்ணைப் பற்றிச் சொல்ல காமம் தலைக்கேறியது, இவளே மாதேவி என அறியாத அற்பன் அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ள யோசித்தான். அவனின் அழிவு ஒரு விதையாக போக வடிவெடுத்து வந்தது.
அசுரனின் அரசவையில் அழகிய குரலையுடையோனான சுக்ரீவன் என்பானை அழைத்தான். 'எப்படியாயினும் இனிய மொழி பேசி அரசவைக்கு அழைத்துவா' என்றான். மன்னனின் கட்டளையை மாதேவ னின் வாக்காக ஏற்று அதிவிரைவாக இமயக் கிரியை அடைந்தான். கிரி கன்னிகையாக அமர்ந்திருந்த கௌசிகீயை பார்த்து, ''சும்பனின் அரசவையை ஒளிரூட்டும் பேரழகு படைத்தவளே...'' என்று தொடங்கி அமிர்த வாக்காலும், மயக்கு வார்த்தைகள் பேசி சம்மதமா என்று முடித்தான். இவள் சம்மதித்து விடுவாள் என்றே முகத்தைப் பார்த்தாள். அதேபோல அவளும் சம்மதம் என்றாள். ஆனால், ''யார் என்னுடன் போரிட்டு வெற்றி பெறுகிறார்களோ அவர்களையே மணப்பேன். அதையே நான் வரமாகப் பெற்றிருக்கிறேன்'' என்றாள். ஒரு வஞ்சகப் பேச்சுக்கு மறு வார்த்தையாக இன்னொரு விஷத்தை வார்த்தைகளில் தோய்த்துப் பேசினாள்.
கடுங்கோபத்தோடு நுழைந்தவன் விவரம் சொல்ல சும்பன் தூம்ரலோசனனை அழைத்தான். 'தூம்ரம்' என்றால் 'புகை' என்று பொருள். பொங்கும் புகையோடு பெரும் படையோடு கிளம்பியவன் கௌசிகீயின் எதிரே கர்ஜிக்க, அவள் வாகனமாக இருந்த சிம்மத்தின் ஹூங்காரத்திலேயே கரைந்து வீழ்ந்தான். தூம்ரலோசனன் மாண்டான் என்பதை கேள்வியுற்ற சும்ப&நிசும்பரின் படைத் தலைவர்களாக விளங்கிய சண்டனும், புத்தியற்ற வெறும் உடற் கொழுப்பு கொண்ட முண்டனும் எங்களுக்கு நிகர்த்தவள் யாரவள் என்று திமிறிக் கிளம்பினர். மாபெரும் படையோடு வந்தவர்கள் கௌசிகீயை பார்த்து, 'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அப்படியே எங்களோடு வந்துவிடு' என ஒரு அம்பை சிம்மத்தின் பிடரி பார்த்துச் செலுத்தினான்.
கௌசிகீயின் கண்கள் சிவந்தது. அசுரப் படையின் ஒரு பகுதியை தம் கதையாலே ஏவித் தாக்கியபோதுதான் முதன் முறையாக சிம்மவாஹினி சாதாரணவள் இல்லை. இவளே சாமுண்டி என்பதை சண்ட, முண்டர்கள் உணர்ந்தார்கள். இதற்குப் பின்னால் தேவர்களின் சூழ்ச்சியே நிறைந்துள்ளது என்று எண்ணியவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர். அதுவரை சாந்தமாக இருந்தவளின் நெற்றிப் பொட்டிலிருந்து மாகோரமிக்க அதிபயங்கர உருவோடு காளி வெளிப்பட்டாள்.
தெற்றுப் பற்களோடு கூடிய அதிகோர முகமும், செம்பட்டைச் சடையும், கன்னங்கரியவளாக இருந்தாள். கத்தியும், கழுத்தைச் சுருக்கிட்டு இழுத்துப் போடும் பாசமும், கபாலம் சொருகிய கட்வாங்கம் என்ற குண்டாந்தடியும், அனேக கபாலத்தை மாலையாக பிணைத்து கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டாள். தலையில்லா உடலை இடையில் கட்டி முடிந்திருந்தாள். வரிப்புலியின் தோலை உரித்து சேலையாக்கி போர்த்திக் கொண்டிருந்தாள். உடல் முழுதும் ரத்தக் குழம்பை கஸ்தூரி சந்தனமாகப் பூசிக்கொண்டாள். உலகம் முழுதும் துழாவிப் புசிப்பது போல் நாவைச் சுழற்றியபடி இருப்பவளின் கண்கள் செந்தனல் துண்டங்களை எரிமலையாகப் பொழிந்தது. அவள் கர்ஜிப்பு தாங்காது அசுரர்களின் ரத்தமே உறைந்து போயிற்று.
எங்கேயோ மறைந்திருந்த தேவர்களும், கந்தவர்களும், ஏன் மகேசனும், பிரம்மா, விஷ்ணு போன்றோரும் அங்கு பிரசன்னமாயினர். காணுதற்கு அரியவளாதலால் வானுலகமே விழாக் கோலம் பூண்டது. சும்பனும் நிசும்பனும் பதவியிழந்து பரலோகம் செல்வோமோ என்று அஞ்சினர். ஆனாலும், அசுர ரத்தமாயிற்றே... 'பராசக்தியே ஆயினும் பாதியாக வகிர்ந்து போடுவோம்' எனப் போர்க்களம் ஓடினர்.
ஒரு கணம் சூரியனை மறைத்து பூமியையே பிளக்கும் பேரதிர்வோடு நின்றிருக்கும் கௌசிகீயிலிருந்து வெளிப்பட்டிருக்கும் சாமுண்டியைப் பார்த்தார்கள். என் படைக்கு எம்மாத்திரம் இவள் என்று கால் உதைத்து நின்றார்கள். மகா யுத்தம் தொடங்கியது. பலப் படைக்கலன்களை அப்படியே விழுங்கி ஜீரணித் தாள். ரத்த ஆறு பெருக்கெடுக்க சும்பனும் அவள் போலவே இன்னொரு கோரவுரு எடுக்க, நிசும்பன் அம்பைப் பொழிய தேவி அநாயாசமாக அழித்தாள். ஒட்டு மொத்த படைக் கலன்களையும் சிம்மமும், சாமுண்டியும் சம்கரிக்க சும்ப நிசும்பர்கள் பலம் மொத்தமும் சேர்த்துக் கொண்டு அருகே வர, தேவியின் வாள் நிசும்பனின் தலையை வெட்டியது. சும்பனை சூலத்தால் மார்பினில் பாய்ச்சினாள். சண்ட, முண்டர்களை அழுத்திக் கொன்றாள். தேவர்களும், வானவரும் கண்களில் நீர் பெருக இருகைகூப்பி துதித்தனர். 'ஜெய் நிசும்பசூதனி' என்று ஜெயகோஷம் எழுப்பினர். இதுவே மகா சரஸ்வதியான சத்தியம், தர்மத்தை நிலைத்துச் செய்ய வந்த நிசும்பசூதனி.
அது சோழர்களின் தொடக்கக் காலம். நிசும்பசூதனியே வெற்றித் தெய்வம். சத்ரு நாசம் செய்யும் மாகாளி என எண்ணிய சோழகுலச் சக்ரவர்த்தியான விஜயாலயச் சோழன் எண்ணூற்று ஐம்பவதாவது வருடம் தஞ்சையில் நிறுவினான். போருக்குச் செல்லும் போதேல்லாம் 'தஞ்சையை காப்பாய் தேவி' என்று அவள் பாதம் பணிந்துவிட்டுத்தான் யுத்த களத்திற்குச் செல்வானாம். மிகவும் ஆதாரப்பூர்வமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் ‘‘தஞ்சாபுரீம் சௌத சுதாங்கராகாம.... என்று தொடங்கும் வடமொழி வரிகளில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற காளி தேவியை அங்கு பிரதிஷ்டை செய்தான். தேவியின் அருளால் நான்கு கடல்கள் ஆகிய ஆடையை அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையை அணிவது போலச் சுலபமாக ஆண்டு வந்தான் என்று முடிக்கிறது.
மாமன்னன் பரம்பரையை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் அவள் திருவடி பணிந்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவானாம். போருக்கு முன்பு லட்சம் படை வீரர்களாயினும் சரி இவள் சந்நதியில் வீழ்ந்து வெற்றி வரம் கோரி யுத்தகளம் ஓடுவார்களாம். இவளே தஞ்சையின் காவல் தெய்வம். தஞ்சையின் புகழை தரணியெங்கும் ஒலிக்க விட்ட காருண்ய சூலினி. செல்வம் பெருக்கித் தந்த அட்சய மாகாளி இவளே. அன்றிலிருந்து இன்றுவரை அதேப் பொலிவோடும், அதேசக்தியோடும் விளங்குகிறாள் நிசும்பசூதனி.
தேவிமகாத்மியம் உரைக்கும் உருவத் தோற்றத்தை சிற்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள் சோழர்கள். மிக கோரமான உருவம். மூக்கு அழுந்தி அதற்குக் கீழே தெற்றுப்பற்கள் துருத்தியிருக்க ஒரு ஓரமாய் தலை சாய்த்து அரை பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் நிசும்பசூதனி. தீச்சுடர் போன்ற கேசம். வற்றிய தோலும், விலா எலும்புகளோடு கூடிய பதினாறு கைகள். அதில் விதம்விதமான ஆயுதங்கள். பாம்பை கச்சமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். கால்கள் மெல்லியனவாக இருந்தாலும் காலுக்குக் கீழே நான்கு அசுரர்களை வதைத்து அழுத்தும் கோபத்தை சிற்பத்தில் வடித்திருப்பது பார்க்கப் பிரமிப்பூட்டும். இவர்களே சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன். யுத்த களத்தில் உக்கிரமாக போர் புரியும்போது நெஞ்சு நிமிர்த்தி எதிரியை நோக்கி பாயும் வன்மத்தையும், அதனால் முதுகுப் புறம் சற்று வளைந்து குழிவாக இருப்பதையும், எதிர்காற்றில் கபால மாலைகள் இடப்புறம் பறக்கும் வேகத்தையும் சிற்பமாக்கி கலையின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். பெண் எனும் சக்தி பொங்கியெழுந்தால் இப்படித்தான் வீருகொண்டெழும் என்பதே நிசும்பசூதனி சொல்லும் விஷயம். அதேசமயம் தர்மத்தின் பக்கம் நிற்கும் நீதி தேவதை.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியிலுள்ள பூமால் ராவுத்தர் தெருவில் வடபத்ரகாளியம்மன் கோயிலென்று இதை அழைப்பார்கள். இக்கோயில் அமைந்துள்ளது.
'' பாற்கடலை கடைய அமுதம் வருமா?
பைத்தியக்காரத்தனம்.
அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி.
இதைவிட ஒரு காமெடி என்னன்னா
அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம். கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம். அவ்ளோ பெரிய ஆமையை Discovery சேனல்ல கூட காமிக்கலையே.
தேவர்களும்,அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம்.
அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம்.
சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம்.
விஷத்த குடிச்சா சாமி சாகுமா?இல்ல அப்படி செத்தா அது சாமியா?
அப்புறம் அமுதம் வந்துச்சாம். அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.
இப்படி ஒரு Fantacy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல. இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ சாமி கும்பிட்டுகிட்டு இருக்க. ''
--- இப்படி தன் இரவல் அறிவையெல்லாம் ஒன்று திரட்டி ரொம்ப பெரிய கஷ்டமான கேள்வியக் கேட்டு விட்டதாகவும்
என்னை மட்டம் தட்டி விட்டதாகவும் இருமாந்திருந்தார் நண்பர் ஒருவர்(பாவம் சமீபத்தில்தான் பகுத்தறிவு பால்வாடியில் சேர்ந்திருப்பார் போல).
🌿🌿
நான் நிதானமாக சொன்னேன்...
''இந்து கலாச்சாரத்தில் சொல்லப்படுகின்ற கதைகள் எல்லாம் உருவகங்கள்.
மிகப்பெரிய தத்துவங்களை எல்லாம் குழந்தைக்கு கூட புரியும் வண்ணம் புனையப்பட்ட உருவகக்கதைகள் இவை.
இவற்றை அப்படீயே எடுத்துக்கொண்டு வாதிடுவது அறிவுடைமை ஆகாது.
அதனால் Encoding செய்யப்பட்ட உருவகங்களை Decoding செய்தால் போதும். பொருள் அதுவாகவே விளங்கும்.
சரி. இப்போது இந்த பாற்கடல் கதையை Decode செய்கிறேன்.
பாற்கடல் - குண்டலினி சக்தி
மேருமலை - முதுகுத்தண்டு
வாசுகி பாம்பு - மூச்சுக்காற்று
(உஷ் ...உஷ்னு சத்தம் வருதா)
தேவ,அசுரர் - இடகலை,பிங்கலை(நாடி)
ஆமை - ஐம்புலன்களையும் அடக்கி ஆளும்தன்மை
தொண்டைக்குழி - விசுக்தி
விஷ்னு - வாழ்வு
ஆலகாலவிஷம் - கபம்
அமுதம் - நித்ய வாழ்வு
(மரணமில்லா பெருவாழ்வு)
அதாவது முதுகுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை,பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது.
(இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும் தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்)
ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசி யோகம் மூலம் இடகலை ,பிங்கலை வழியே மாற்றி மாற்றி
மூச்சுக்காற்றை இழுக்கும்போது (நாடி சுத்தி) நித்யப் பெருவாழ்விற்கான அமுதம் சுரக்கும் அதை உண்டவர்கள் தேவர்கள் போல மரணமில்லா பெருவாழ்வு அடைவர்.
ஆனால் இந்தப்பயிற்சியின் போது அளவுக்கதிகமான கபமே முதலில் வெளிப்படும்
ஆனால் பரம்பொருள் சிவனின் கருணையால் அந்த கபத்தை கலைத்துவிடும்.
(சந்தேகம் இருப்பின் வாசி யோகம் பயின்றவரிடம் கேட்டு தெளிவு பெறலாம்)''
- என்று விளக்கினேன்.அவரும் பாவம் வேறொருவருக்கு பாடம் எடுக்க சென்றுவிட்டார்.
விநாயகர் சக்தியின் அழுக்குருண்டையில் பிறந்தவராமே -என்று.
🌿🌿
அவர் கிடக்கட்டும்.உங்களுக்காக (புரிந்து கொள்ள நினைப்போருக்கு)
மேலும் சில உருவகங்களின் Decodings...
🌷ஒரே இறைவன்(இஸ்லாம்) - அத்வைதம் (Oneness)
🌷சக்தி,சிவன் - துவைதம்(Duality)
🌷பிதா,சுதன்,பரிசுத்த ஆவி - விசிஷ்டாதுவைதம் (கிறித்துவம்)
- உருவகம்
🌷சும்மா இருந்தால் சிவம்(Static)
🌷ஓயாமல் அசைந்தால் சக்தி(Dymnamic)
🌷சக்தி இல்லையேல் சிவம் இல்லை-உருவகம்
🌷திரிசூலம்-இச்சா சக்தி,கிரியா சக்தி,ஞான சக்தியின் உருவகம்
🌷கணபதியை(பூமி) சக்தி (Dynamic force)
அழுக்கை(Dust of universe )உருட்டி படைத்தாள்-இது பூமி தோன்றலின் உருவகம்.
🌷தில்லை நடராசர் நடனம்-Cosmic dance ன் உருவகம் (அறிவியல் ஏற்றுக்கொண்டது)
🌷சிவன் (யோக சக்தி),திருமால் (போகசக்தி)
இவற்றின் கலவையான சக்தியே ஐயப்பன்-உருவகம்.
🌷முப்பரிமாணம் மட்டுமே உணரக்கூடிய மனித மூளைக்கு நாலாவது பரிமானமான காலத்தை உணர்த்த மகாகாலன்,
அதன் எதிர்பரிமாணம் மகாகாளி - உருவகம்
🌷பிறப்பை அருளும் தாயின் உருவத்தை மரணத்தை அருளக்கூடிய கோர உருவமாக காளியாகபடைத்தது
ஜனனமும்,மரணம் இறைவனக்கு ஒன்றே என உணர்த்தும் உருவகம்
🌷வாயு மைந்தன் அனுமன்(குரங்கு போன்ற நிலையில்லாத மனம் யோகம் பயின்றால் கடவுளாகும் தகுதி உண்டு என்ற தத்துவம்
- மனத்தின் உருவகம்
🌷கருடாழ்வார்-மூச்சின் உருவகம்
🌷சூரியனின் ஏழு குதிரைகள் நிறப்பிரிகை-VIBGYOR உருவகம்
🌷தசாவதாரம் பரிணாம வளர்ச்சியின் உருவகம்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
🌷ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் உருவகம்.
எல்லாம் உணர்ந்தோர் ஏதும் உணராதோர்க்கு தான் உணர்ந்ததை உணர்த்த ,
ஏதும் உணராதோர் உணர்ந்த தன்மையின் அடிப்படையில் தாம் உணர்ந்ததை (தத்துவத்தை) உருவகமாக்கி
உணர்த்தினர்.
நீங்களாவது உணர்ந்து கொண்டீரா?
உணர்ந்து கொண்டோர் பகிர்ந்து கொள்வர்.
Sunday, 4 October 2020
கடவுள் நமது சினேகிதன்
சோ அவர்களின் எங்கே பிராமணன் கேள்வி பதிலிலிருந்து...
கேள்வி : ஒருவருக்காக இன்னொருவர் பிரார்த்தனை செய்தால், முதலாமவரின் குறைகளை கடவுள் களைந்து விடுவாரா?
சோ: ஹிந்து மதம், இறைவனை மிகவும் நெருக்கமானவராகப் பார்க்கிறது. ஹிந்து மதத்தில், கடவுளை நாம் அன்னியப்படுத்தி, எங்கோ வைத்து விடவில்லை. கடவுள் நமது சினேகிதன் மாதிரி. கடவுள் சினேகிதனா என்று கேட்டால், ஆமாம்!
மற்ற பல மதங்களைப் போல ஹிந்து மதம், கடவுளை எட்ட முடியாதவராக நினைக்கவில்லை. நண்பனாக, உறவினனாக; குருவாக, சீடனாக; தந்தையாக, மகனாக; சினேகிதனாக, காதலனாக; எஜமானனாக, வேலையாளாகப் பார்க்கப்படுகிறான் இறைவன்.
ஏனென்றால் உண்மையான பக்தனுக்கு அந்த உரிமை இருக்கிறது. பக்தி அவ்வளவு வலிமை உடையது.
இதனால்தான் கடவுளுக்கு கல்யாண உற்சவம் செய்து பார்க்கிறோம்; தாலாட்டி தூங்க வைக்கிறோம்; பாட்டு பாடி மேளம் கொட்டி, துயில் எழுப்புகிறோம்; நீராட்டுகிறோம்; புத்தாடை அணிவிக்கிறோம்.கடவுளுக்கும், பக்தியுள்ள மனிதனுக்கும் இவ்வளவு நெருக்கம் இருப்பதால், அவரிடம் உரிமை எடுத்துக் கொண்டு, இன்னொருவருக்காக வேண்டுகிறோம். இதை உண்மையான பக்தன் செய்கிறபோது அதற்கு பலன் கிடைக்கிறது.
நீங்கள் என் சினேகிதர். உங்களிடம், ஒருவருக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும். அவர் என்னிடமும் கூறி, உங்களிடம் கேட்டுக் கொள்ளச் சொல்கிறார். நான் உங்களிடம் அவருடைய காரியத்தை விளக்கி, அவருக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டு; அதனால் நான் சொல்கிற கோரிக்கையை நீங்கள் ஏற்கிறீர்கள். நீங்கள் ஒரு மனிதர். உங்களுக்கு இருக்கிற கருணை, இறைவனுக்கு இருக்காதா?
ஆதி சங்கரர் வரலாற்றில் வருகிற ஒரு அருமையான நிகழ்ச்சி இதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. சங்கரர் அப்போது சிறு பையன். பிரம்மச்சாரி. பிட்சைக்காக ஒரு வீட்டிற்குப் போகிறார். அந்த வீடோ, ஒரு பரம தரித்திரனுடைய வீடு. அந்த மனிதனும் வெளியே போயிருக்கிறான். வீட்டில் அவனுடைய மனைவி மட்டும் இருக்கிறாள்.
சங்கரர் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று குரல் எழுப்ப, அந்த அம்மாள் செய்வதறியாமல் திகைக்கிறாள். ஏனென்றால், பிட்சை போடுவதற்கு வீட்டில் எதுவுமே இல்லை. வாயிலில் வந்து நிற்கிற பிரம்மச்சாரியோ, பெரும் தேஜஸ் உடையவராகக் காட்சியளிக்கிறான். வெறும் கையுடன், அந்தச் சிறுவனை திருப்பி அனுப்ப அந்தப் பெண்மணியின் மனம் இடம் கொடுக்கவில்லை. தவிக்கிறாள்.
உங்களைப் போன்றவர்களுக்கு தகுந்த உபசாரம் செய்பவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்’ என்று சங்கரரிடம் கூறிவிட்டு, அந்தப் பெண்மணி, வீட்டில் ஏதாவது இருக்காதா என்று தேடினாள். ஒரு பானையில், வாடிப் போன ஒரு நெல்லிக்கனி இருந்தது. அன்றைய பொழுதுக்கு அவர்கள் வீட்டில் அதுதான் உணவு; அவ்வளவு ஏழ்மை. கையில் கிடைத்த அந்த நெல்லிக்கனியை மிகவும் தயக்கத்துடனும், இவ்வளவு அற்பமான பொருளை பிட்சையிடுகிறோமே என்ற குற்ற உணர்வுடனும், அந்தப் பெண்மணி, சங்கரருக்கு பிட்சையாகத் தந்தாள்..
சங்கரர் நிலைமையைப் புரிந்து கொண்டார்; அந்தப் பெண்மணியின் நல்ல மனதையும் அவர் தெளிவாகவே தெரிந்து கொண்டார். அவளுக்காக அவர் மனம் இளகியது.
அந்தக் குடும்பத்தினரின் வறுமையை நீக்குமாறு, அவர் மனமுருகி, மஹாலக்ஷ்மியை வேண்டிக் கொண்டார்.
அப்போது அவர் துதித்த ஸ்லோகங்கள், ‘கனகதாரா ஸ்தோத்ரம்’ என்ற பெயரைப் பெற்றன. அவர் துதியைக் கேட்டு மகிழ்ந்த மஹாலக்ஷ்மி, அவர் முன் தோன்ற, சங்கரர் விழுந்து வணங்கி நிற்க, தேவி பேசினாள்:
‘குழந்தாய்! இவர்கள் முற்பிறவியில் எந்த நன்மையையும் செய்யவில்லை. அப்படியிருக்க, அவர்களிடம் நான் கருணை காட்ட வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது எவ்வாறு?’சங்கரர் சொன்னார்: ‘தாயே! இப்போது இந்த நெல்லிக்கனி, இந்தப் பெண்மணியால் எனக்கு பிட்சையாக அளிக்கப்பட்டது. என் மீது கருணை வைத்து இந்த தானத்திற்கு நீ பலன் அளிக்கக் கூடாதா?’– இவ்வாறு சங்கரர் வற்புறுத்தி வேண்டிக் கொண்ட பிறகு, மனமிரங்கிய மஹாலக்ஷ்மி, தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழியச் செய்து, அந்த வீட்டையே நிரப்பி விட்டாள். அந்தக் குடும்பத்தின் வறுமை நீங்கியது.இப்படி, சங்கரர் வேண்டிக் கொண்டபோது, ஏதோ ஒரு ஏழைக் குடும்பத்துக்கு தெய்வம் கருணை காட்டவில்லையா?
அதே போலத்தான், ""உண்மையான பக்தி உணர்வுடன்"" நமக்காக ஒருவர் வேண்டிக் கொண்டால், நமக்கு நன்மை கிட்டும்.