Thursday, 8 October 2020

அழிவு நிலையில் இந்துக்களும் , இந்துக்கோவில்களும்

 தாய் மதத்தை தவிக்க விட்டு விட்டு...

தரம் தாழ்ந்து...
'#பகுத்தறிவு' இல்லாத பைத்தியகாரர்களாகி விட்ட #இந்துக்களே!
ஒரு அமெரிக்க கிறிஸ்தவரின் "பகுப்பாய்வை'' பாருங்கள்.
இதற்கு துணையாக இருப்பது வேறுயாருமில்லை !!
#இந்துக்களே!" என்கிறார்.
ஸ்டீஃபன் நேப்,
'Crime Against India and Need to Protect Ancient Vedic Traditions'
அதாவது,
'இந்தியாவுக்கு எதிரான குற்றமும், பழம்பெரும் வேதக் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியமும்'
என்னும் ஓர் ஆராய்ச்சிப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் வெளிடப்பட்டுள்ள இப்புத்தகம், இப்போது வசூலை வாரிக் குவித்து வருகிறது.
அவர் தென் இந்தியாவில் உள்ள, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்கள் எப்படி,
மக்களாட்சியில்...
மிகவும் நலிவடைந்து விட்டன. என்பதைப் “புட்டு புட்டு” வைக்கிறார்.
இப்போது,
'மதச் சார்பற்ற நாடு' என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவில்...
இஸ்லாமுக்கும், கிறித்தவத்துக்கும் உள்ள சலுகைகள்...
இந்து மதத்துக்கு இல்லாமல் போனது எப்படி?
என்னும் துயரத்தை நன்றாக விளக்குகிறார்.
இன்று,
சில பல சுயநல காரணங்களுக்காக மாற்று மதத்தினரிடம்...
அரசியல்வாதிகள் அடங்கி போகிறார்கள்.
இன்றைய நிலையில் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் அந்தந்த மதத்தினரால் பராமரிக்கப் படுகின்றன.
ஆனால்,
புராதன இந்துக் கோவில்களோ, 1951-ம் ஆண்டில் கொண்டு வரப் பட்ட, “இந்து மதம் மற்றும் தர்மஸ்தாபனங்கள் சட்டப்படி” (Hindu religious and charitable endownments Act) அரசால் எடுத்துக் கொள்ளப் பட்டு விட்டன.
மதச் சாற்பற்ற அரசின் அதிகாரிகள்,
ஒவ்வொருக் கோவிலின் நிர்வாகத்திலும்,
ஆகம விஷயங்களிலும்,
அவற்றின் சொத்துக்களைக் கையாள்வதிலும்,
தங்கள் “மூக்கை நுழைக்க” ஆரம்பித்து விட்டனர்.
இந்த இடையூறு, மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்குக் கிடையாது."
இவ்வாறு
தெளிவாக சொல்கிறார் ஸ்டீஃபன் நேப்.
மேலும் அவர்,
“ ஹிந்துக் கோவில்கள் எல்லாமே, பழங்காலத்தில் இருந்த அரசர்களால் கட்டப் பட்டதாகும்.
அவைகளுக்கு சொத்துக்களையும், ஆபரணங்களையும், அவர்கள் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அவர்கள் பரம்பரையினர், தங்களுக்கு, இக்கோவில்களில் உரிமை ஏதும் இருப்பதாகக் கோர வில்லை.
இப்போது உள்ள ஜனநாயகத்தில்...
இத்தகையக் கோவில்கள் ஒன்று கூடக் கட்டப் படவில்லை.
அப்படி இருக்கும் போது, தங்களுக்குக் கொஞ்சமும் உரிமை இல்லாத் இவ்விஷயத்தில்...அரசு எப்படி நுழைந்து.?
எப்படி இந்து மத வழிபாட்டுத் தலங்களில் தலையிட முடியும்?என்றும் கேட்கிறார்.
ஆந்திராவில் உள்ள 43,000 இந்து கோவில்களின் ஆண்டு வருமானத்தில், 18 % தான், இக்கோவில்களுக்கு செலவழிக்கப் படுகிறது.
மிச்சமுள்ள 82%, அரசின் மற்ற நிர்வாகச் செலவுகளுக்குத் தாரை வார்க்கப் படுகிறது.
திருப்பதி ஸ்ரீ வேங்கடாசலபதியின் ஆண்டு வருமானம் 3,100 கோடி ரூபாய்.
இதில், 83% அரசு எடுத்துக் கொள்கிறது.
ஆந்திர அரசு, 10 புராதனக் கோவில்களை இடித்து...
ஒரு “கால்ஃப்” மைதானம் கட்டுகிறது.
இதைப் போல,
10 மசூதிகளையோ, மாதாகோவில்களையோ இடிக்க எண்ணியிருந்தால் என்ன ஆகி இருக்கும்?" என்று
கேட்கிறார் ஸ்டீஃபன் நேப்.
சிந்திக்க வேண்டிய கேள்வி!!.
கர்நாடகாவில், இந்துக் கோவில்கள் மூலம் ஆண்டுக்கு வரும் 79 கோடி வருமானத்தில்...
7 கோடியைத் தாராளமாக இக்கோவில்களின் பராமரிப்புகளுக்கு அரசு செலவிடுகிறது.
இதில் வயிற்றெரிச்சல் என்னவென்றால்...
59 கோடியை, ஹஜ் யாத்திரைக்குத் திருப்பி விடப் படுகிறது என்பது தான்.
மேலும் இதில், 13 கோடி ரூபாயை சர்ச்கள் பராமரிப்புக்காக அளிக்கிறது கர்நாடகஅரசு.
“ஊரான் வீட்டு நெய்யே: என் பெண்டாட்டி கையே” என்பது இது தான்.
இதுவும்,
ஸ்டீஃபன் நேப்பின் “கூர்நோக்கு பார்வை” தான்.
கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் வருமானத்தை...
அங்குள்ள ஆலய ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட நிதி இல்லாமல்,
அனைத்தையும் சுரண்டிக் கொண்டு போய் விடுகிறார்கள் அரசு தரப்பு.
மேலும்,
இப்போது 'உள் நுழைவு டிக்கெட்டின்' இமாலய விலை பற்றி எவரும் எதிர்த்து பேசாதது கூட வருத்தமளிக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலைச் சுற்றியிருக்கும் வனத் துறைக்கு சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் கொண்டக் காடுகளை...
கிறித்தவர்களுக்குக் கொடுத்து, காட்டை அழித்து வருகிறார்கள்.
இப்போதுள்ள,
“திருவாங்கூர்-கொச்சி சுயாட்சி தேவஸ்வம் போர்டை”
ஓர் அவசரச் சட்டத்தின் மூலம்,
'கலைத்து விடலாமா?' என்று கூட அரசு எண்ணி வருகிறது.
இதுவும் ஒரு அமெரிக்கப் கிறிஸ்தவரின் பகுப்பாய்வு தான்.
நிச்சயமாக, ஸ்டீஃபன் நேப் ஒரு ஹிந்து அல்ல.
இது போல, ஒரிஸ்ஸாவில் உள்ள மிகப் புகழ் பெற்றத் தலமான, பூரி ஜகந்நாதருக்குச் சொந்தமான 70,000 ஏக்கர் நிலத்தை அரசு “ஸ்வாஹா” செய்து விட்டது... என்றும்,
மஹாராஷ்ட்ராவிலும் சுமார் 4 லட்சம் கோவில்கள் நலிவு அடைந்து விட்டதாகவும் வருத்தத்துடன் விவரிக்கிறார்.
நமது தமிழகத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
இந்து அறநிலைய சொத்துக்கள் எப்படியெல்லாம் அழிந்து வருகின்றன...
என்றும்,
கோவில்களுக்கு வர வேண்டிய வருமானம் வசூலிக்கப் படுவதே இல்லை...
என்றும்,
மண்டபபங்களோ, மதில்சுவர்களோ, திருக்குளங்களோ, கொஞ்சம் கூடப் பராமரிக்கப் படுவதில்லை...
என்றும்,
ஆலய ஊழியர்களுக்கு சம்பளம் முறைப்படி வழங்கப்படுவதில்லை...
என்றும்,
அரசு அதிகாரிகள்,
கோவில் சொத்துக்களை தங்கள் இஷ்டம் போல விற்று, வேறு காரியங்களுக்குச் செலவலிப்பது பற்றியும்...
புள்ளி விவரங்களுடன் ஸ்டீஃபன் நேப் விளக்குகறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ஏற்பட்டுள்ள ஜனநாயக ஆட்சியில்...
இந்து மத ஆலயங்களுக்கு நிகழ்ந்துள்ள இந்தக் கதிக்கு காரணம்...
முக்கியக் காரணங்களாகக் கூறுகிறார் இவ்வாசிரியர்.
இந்துக்களே!
இனியாவது விழிப்படையுங்கள்.
நம் ஆலயங்களில்,
அரசின் குறுக்கீடுகளைக் களைத்தெறியப் பாடுபடுங்கள்.🙏
ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யும் பிரிவினைவாதிகள் பேச்சைக் கொஞ்சம் கூடக் கேட்காதீர்கள்.
ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் இந்துக் கோவில்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளை அம்பலப் படுத்துங்கள்.
கட்சி பாகுபாடு இன்றி ஒற்றுமையுடன் தட்டிக் கேளுங்கள்.
இனிவரும் காலத்திவாவது...
நமது இந்து மதத்தை காப்பாற்ற முன் வாருங்கள்.
பகிர்ந்து வந்த தகவல்
MC முருகேசன்.பருகூர்

Wednesday, 7 October 2020

தஞ்சை நிசும்பசூதனி

 முன்பொருமுறை எழுதிய நிசும்பசூதனி கட்டுரையை இப்போது இங்கு பதிவிடுகிறேன். நன்றி. 

                   தஞ்சை நிசும்பசூதனி 

  மகா சரஸ்வதி எழில் வடிவினள். வெண் பனியின் மலைச் சிகரத்தில் கருணைச் சிகரமாக அமர்ந்தாள். சிம்மத்தின் மீது அமைதியாக அமர்ந்து வீணாகானத்தில் லயித்திருந்தாலும், அம்பு, உலக்கை, சூலம், சக்கரம், சங்கம், மணி, கலப்பை, வில் ஏந்தி சந்திர ஒளியில் பிரகாசித்திருப்பாள். இமயக்கிரியில் அமைதிக் கோலம் பூண்டவள் வெகு விரைவிலேயே கோரக் கோலமாக சாமுண்டியாகவும், சும்ப, நிசும்பர்களை வதம் செய்யப்போகும் நிசும்பசூதனியாக வெகுண்டெழும் காலம் நெருங்கியது. 

சத்தியத்தின் நேர் துருவங்களாக, கொடுங்கோன்மையின் முழு உருவாக இருந்த சும்ப& நிசும்ப சகோத ரர்களின் அணுக்கத் தொண்டர்களான சண்டனும், முண்டனும் இமயக்கிரியில் திரிந்திருந்தபோது கௌசீகியை கண்டனர். சிம்மத்தின் மீது அமர்ந்த அழகுச் சிகரத்தைப் பார்த்து திகைத்துப் போயினர். தம் அசுரத் தலைவர்களுக்கு இவளை அர்ப்பணித்தால் என்ன என்று குரூரமாக யோசித்தனர். சும்பனிடம் தாம் கண்ட பேரழகுப் பெண்ணைப் பற்றிச் சொல்ல காமம் தலைக்கேறியது, இவளே மாதேவி என அறியாத அற்பன் அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ள யோசித்தான். அவனின் அழிவு ஒரு விதையாக போக வடிவெடுத்து வந்தது. 

 அசுரனின் அரசவையில் அழகிய குரலையுடையோனான சுக்ரீவன் என்பானை அழைத்தான். 'எப்படியாயினும் இனிய மொழி பேசி அரசவைக்கு அழைத்துவா' என்றான். மன்னனின் கட்டளையை மாதேவ னின் வாக்காக ஏற்று அதிவிரைவாக இமயக் கிரியை அடைந்தான். கிரி கன்னிகையாக அமர்ந்திருந்த கௌசிகீயை பார்த்து, ''சும்பனின் அரசவையை ஒளிரூட்டும் பேரழகு படைத்தவளே...'' என்று தொடங்கி அமிர்த வாக்காலும், மயக்கு வார்த்தைகள் பேசி சம்மதமா என்று முடித்தான். இவள் சம்மதித்து விடுவாள் என்றே முகத்தைப் பார்த்தாள். அதேபோல அவளும் சம்மதம் என்றாள். ஆனால், ''யார் என்னுடன் போரிட்டு வெற்றி பெறுகிறார்களோ அவர்களையே மணப்பேன். அதையே நான் வரமாகப் பெற்றிருக்கிறேன்'' என்றாள். ஒரு வஞ்சகப் பேச்சுக்கு மறு வார்த்தையாக இன்னொரு விஷத்தை வார்த்தைகளில் தோய்த்துப் பேசினாள்.

கடுங்கோபத்தோடு நுழைந்தவன் விவரம் சொல்ல சும்பன் தூம்ரலோசனனை அழைத்தான். 'தூம்ரம்' என்றால் 'புகை' என்று பொருள். பொங்கும் புகையோடு பெரும் படையோடு கிளம்பியவன் கௌசிகீயின் எதிரே கர்ஜிக்க, அவள் வாகனமாக இருந்த சிம்மத்தின் ஹூங்காரத்திலேயே கரைந்து வீழ்ந்தான். தூம்ரலோசனன் மாண்டான் என்பதை கேள்வியுற்ற சும்ப&நிசும்பரின் படைத் தலைவர்களாக விளங்கிய சண்டனும், புத்தியற்ற வெறும் உடற் கொழுப்பு கொண்ட முண்டனும் எங்களுக்கு நிகர்த்தவள் யாரவள் என்று திமிறிக் கிளம்பினர். மாபெரும் படையோடு வந்தவர்கள் கௌசிகீயை பார்த்து, 'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அப்படியே எங்களோடு வந்துவிடு' என ஒரு அம்பை சிம்மத்தின் பிடரி பார்த்துச் செலுத்தினான். 

கௌசிகீயின் கண்கள் சிவந்தது. அசுரப் படையின் ஒரு பகுதியை தம் கதையாலே ஏவித் தாக்கியபோதுதான் முதன் முறையாக சிம்மவாஹினி சாதாரணவள் இல்லை. இவளே சாமுண்டி என்பதை சண்ட, முண்டர்கள் உணர்ந்தார்கள். இதற்குப் பின்னால் தேவர்களின் சூழ்ச்சியே நிறைந்துள்ளது என்று எண்ணியவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர். அதுவரை சாந்தமாக இருந்தவளின் நெற்றிப் பொட்டிலிருந்து மாகோரமிக்க அதிபயங்கர உருவோடு காளி வெளிப்பட்டாள்.

தெற்றுப் பற்களோடு கூடிய அதிகோர முகமும், செம்பட்டைச் சடையும், கன்னங்கரியவளாக இருந்தாள். கத்தியும், கழுத்தைச் சுருக்கிட்டு இழுத்துப் போடும் பாசமும், கபாலம் சொருகிய கட்வாங்கம் என்ற குண்டாந்தடியும், அனேக கபாலத்தை மாலையாக பிணைத்து கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டாள். தலையில்லா உடலை இடையில் கட்டி முடிந்திருந்தாள். வரிப்புலியின் தோலை உரித்து சேலையாக்கி போர்த்திக் கொண்டிருந்தாள். உடல் முழுதும் ரத்தக் குழம்பை கஸ்தூரி சந்தனமாகப் பூசிக்கொண்டாள். உலகம் முழுதும் துழாவிப் புசிப்பது போல் நாவைச் சுழற்றியபடி இருப்பவளின் கண்கள் செந்தனல் துண்டங்களை எரிமலையாகப் பொழிந்தது. அவள் கர்ஜிப்பு தாங்காது அசுரர்களின் ரத்தமே உறைந்து போயிற்று.

எங்கேயோ மறைந்திருந்த தேவர்களும், கந்தவர்களும், ஏன் மகேசனும், பிரம்மா, விஷ்ணு போன்றோரும் அங்கு பிரசன்னமாயினர். காணுதற்கு அரியவளாதலால் வானுலகமே விழாக் கோலம் பூண்டது. சும்பனும்  நிசும்பனும் பதவியிழந்து பரலோகம் செல்வோமோ என்று அஞ்சினர். ஆனாலும், அசுர ரத்தமாயிற்றே... 'பராசக்தியே ஆயினும் பாதியாக வகிர்ந்து போடுவோம்' எனப் போர்க்களம் ஓடினர். 

ஒரு கணம் சூரியனை மறைத்து பூமியையே பிளக்கும் பேரதிர்வோடு நின்றிருக்கும் கௌசிகீயிலிருந்து வெளிப்பட்டிருக்கும் சாமுண்டியைப் பார்த்தார்கள். என் படைக்கு எம்மாத்திரம் இவள் என்று கால் உதைத்து நின்றார்கள். மகா யுத்தம் தொடங்கியது. பலப் படைக்கலன்களை அப்படியே விழுங்கி ஜீரணித் தாள். ரத்த ஆறு பெருக்கெடுக்க சும்பனும் அவள் போலவே இன்னொரு கோரவுரு எடுக்க, நிசும்பன்   அம்பைப் பொழிய தேவி அநாயாசமாக அழித்தாள். ஒட்டு மொத்த படைக் கலன்களையும் சிம்மமும்,     சாமுண்டியும் சம்கரிக்க சும்ப நிசும்பர்கள் பலம் மொத்தமும் சேர்த்துக் கொண்டு அருகே வர, தேவியின் வாள் நிசும்பனின் தலையை வெட்டியது. சும்பனை சூலத்தால் மார்பினில் பாய்ச்சினாள். சண்ட, முண்டர்களை அழுத்திக் கொன்றாள். தேவர்களும், வானவரும் கண்களில் நீர் பெருக இருகைகூப்பி துதித்தனர். 'ஜெய் நிசும்பசூதனி' என்று ஜெயகோஷம் எழுப்பினர். இதுவே மகா சரஸ்வதியான சத்தியம், தர்மத்தை நிலைத்துச் செய்ய வந்த நிசும்பசூதனி.

அது சோழர்களின் தொடக்கக் காலம். நிசும்பசூதனியே வெற்றித் தெய்வம். சத்ரு நாசம் செய்யும் மாகாளி என எண்ணிய சோழகுலச் சக்ரவர்த்தியான விஜயாலயச் சோழன் எண்ணூற்று ஐம்பவதாவது வருடம் தஞ்சையில் நிறுவினான். போருக்குச் செல்லும் போதேல்லாம் 'தஞ்சையை காப்பாய் தேவி' என்று அவள் பாதம் பணிந்துவிட்டுத்தான் யுத்த களத்திற்குச் செல்வானாம். மிகவும் ஆதாரப்பூர்வமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் ‘‘தஞ்சாபுரீம் சௌத சுதாங்கராகாம.... என்று தொடங்கும் வடமொழி வரிகளில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற காளி தேவியை அங்கு பிரதிஷ்டை செய்தான். தேவியின் அருளால் நான்கு கடல்கள் ஆகிய ஆடையை அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையை அணிவது போலச் சுலபமாக ஆண்டு வந்தான் என்று முடிக்கிறது. 

மாமன்னன் பரம்பரையை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் அவள் திருவடி பணிந்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவானாம். போருக்கு முன்பு லட்சம் படை வீரர்களாயினும் சரி இவள் சந்நதியில் வீழ்ந்து வெற்றி வரம் கோரி யுத்தகளம் ஓடுவார்களாம். இவளே தஞ்சையின் காவல் தெய்வம். தஞ்சையின் புகழை தரணியெங்கும் ஒலிக்க விட்ட காருண்ய சூலினி. செல்வம் பெருக்கித் தந்த அட்சய மாகாளி இவளே. அன்றிலிருந்து இன்றுவரை அதேப் பொலிவோடும், அதேசக்தியோடும் விளங்குகிறாள் நிசும்பசூதனி. 

தேவிமகாத்மியம் உரைக்கும் உருவத் தோற்றத்தை சிற்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள் சோழர்கள். மிக கோரமான உருவம். மூக்கு அழுந்தி அதற்குக் கீழே தெற்றுப்பற்கள் துருத்தியிருக்க ஒரு ஓரமாய் தலை சாய்த்து அரை பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் நிசும்பசூதனி. தீச்சுடர் போன்ற கேசம். வற்றிய தோலும், விலா எலும்புகளோடு கூடிய பதினாறு கைகள். அதில் விதம்விதமான ஆயுதங்கள். பாம்பை கச்சமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். கால்கள் மெல்லியனவாக இருந்தாலும் காலுக்குக் கீழே நான்கு  அசுரர்களை வதைத்து அழுத்தும் கோபத்தை சிற்பத்தில் வடித்திருப்பது பார்க்கப் பிரமிப்பூட்டும். இவர்களே சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன். யுத்த களத்தில் உக்கிரமாக போர் புரியும்போது நெஞ்சு நிமிர்த்தி எதிரியை நோக்கி பாயும் வன்மத்தையும், அதனால் முதுகுப் புறம் சற்று வளைந்து குழிவாக இருப்பதையும், எதிர்காற்றில் கபால மாலைகள் இடப்புறம் பறக்கும் வேகத்தையும் சிற்பமாக்கி கலையின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். பெண் எனும் சக்தி பொங்கியெழுந்தால் இப்படித்தான் வீருகொண்டெழும் என்பதே நிசும்பசூதனி சொல்லும் விஷயம். அதேசமயம் தர்மத்தின் பக்கம் நிற்கும் நீதி தேவதை.  

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியிலுள்ள  பூமால் ராவுத்தர் தெருவில் வடபத்ரகாளியம்மன் கோயிலென்று இதை அழைப்பார்கள். இக்கோயில் அமைந்துள்ளது.

 '' பாற்கடலை கடைய அமுதம் வருமா?

பைத்தியக்காரத்தனம்.

அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி.

இதைவிட ஒரு காமெடி என்னன்னா

அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம். கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம். அவ்ளோ பெரிய ஆமையை Discovery சேனல்ல கூட காமிக்கலையே.

தேவர்களும்,அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம்.

அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம். 

சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். 

விஷத்த குடிச்சா சாமி சாகுமா?இல்ல அப்படி செத்தா அது சாமியா?

அப்புறம் அமுதம் வந்துச்சாம்.  அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.

இப்படி ஒரு Fantacy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல. இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ சாமி கும்பிட்டுகிட்டு இருக்க. '' 

---  இப்படி தன் இரவல் அறிவையெல்லாம் ஒன்று திரட்டி ரொம்ப பெரிய கஷ்டமான கேள்வியக் கேட்டு விட்டதாகவும் 

என்னை மட்டம் தட்டி விட்டதாகவும் இருமாந்திருந்தார் நண்பர் ஒருவர்(பாவம் சமீபத்தில்தான் பகுத்தறிவு பால்வாடியில் சேர்ந்திருப்பார் போல).

🌿🌿

நான் நிதானமாக சொன்னேன்... 

''இந்து கலாச்சாரத்தில் சொல்லப்படுகின்ற கதைகள் எல்லாம் உருவகங்கள்.

மிகப்பெரிய தத்துவங்களை எல்லாம் குழந்தைக்கு கூட புரியும் வண்ணம் புனையப்பட்ட உருவகக்கதைகள் இவை.

இவற்றை  அப்படீயே எடுத்துக்கொண்டு வாதிடுவது அறிவுடைமை ஆகாது.

அதனால் Encoding செய்யப்பட்ட உருவகங்களை Decoding செய்தால் போதும். பொருள் அதுவாகவே விளங்கும்.

சரி. இப்போது இந்த பாற்கடல் கதையை Decode செய்கிறேன்.

பாற்கடல் - குண்டலினி சக்தி

மேருமலை - முதுகுத்தண்டு

வாசுகி பாம்பு - மூச்சுக்காற்று

(உஷ் ...உஷ்னு சத்தம் வருதா)

தேவ,அசுரர் - இடகலை,பிங்கலை(நாடி)

ஆமை - ஐம்புலன்களையும் அடக்கி ஆளும்தன்மை

தொண்டைக்குழி - விசுக்தி

விஷ்னு - வாழ்வு

ஆலகாலவிஷம் - கபம்

அமுதம் - நித்ய வாழ்வு 

(மரணமில்லா பெருவாழ்வு)

அதாவது முதுகுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை,பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது.

(இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும் தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்)

ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசி யோகம் மூலம் இடகலை ,பிங்கலை வழியே மாற்றி மாற்றி 

மூச்சுக்காற்றை இழுக்கும்போது (நாடி சுத்தி) நித்யப் பெருவாழ்விற்கான அமுதம் சுரக்கும் அதை உண்டவர்கள் தேவர்கள் போல மரணமில்லா பெருவாழ்வு அடைவர்.

ஆனால் இந்தப்பயிற்சியின் போது அளவுக்கதிகமான கபமே முதலில் வெளிப்படும் 

ஆனால் பரம்பொருள் சிவனின் கருணையால் அந்த கபத்தை கலைத்துவிடும்.

(சந்தேகம் இருப்பின் வாசி யோகம் பயின்றவரிடம் கேட்டு தெளிவு பெறலாம்)''

- என்று விளக்கினேன்.அவரும் பாவம் வேறொருவருக்கு பாடம் எடுக்க சென்றுவிட்டார்.

விநாயகர் சக்தியின் அழுக்குருண்டையில் பிறந்தவராமே -என்று.


🌿🌿

அவர் கிடக்கட்டும்.உங்களுக்காக (புரிந்து கொள்ள நினைப்போருக்கு) 

மேலும் சில உருவகங்களின் Decodings...

🌷ஒரே இறைவன்(இஸ்லாம்) - அத்வைதம் (Oneness)

🌷சக்தி,சிவன் - துவைதம்(Duality)

🌷பிதா,சுதன்,பரிசுத்த ஆவி - விசிஷ்டாதுவைதம் (கிறித்துவம்)

- உருவகம்

🌷சும்மா இருந்தால் சிவம்(Static) 

🌷ஓயாமல் அசைந்தால் சக்தி(Dymnamic)

🌷சக்தி இல்லையேல் சிவம் இல்லை-உருவகம்

🌷திரிசூலம்-இச்சா சக்தி,கிரியா சக்தி,ஞான சக்தியின் உருவகம்

🌷கணபதியை(பூமி) சக்தி (Dynamic force)

அழுக்கை(Dust of universe )உருட்டி படைத்தாள்-இது பூமி தோன்றலின் உருவகம்.

🌷தில்லை நடராசர் நடனம்-Cosmic dance ன் உருவகம் (அறிவியல் ஏற்றுக்கொண்டது)

🌷சிவன் (யோக சக்தி),திருமால் (போகசக்தி)

இவற்றின் கலவையான சக்தியே ஐயப்பன்-உருவகம்.

🌷முப்பரிமாணம் மட்டுமே உணரக்கூடிய மனித மூளைக்கு நாலாவது பரிமானமான காலத்தை உணர்த்த மகாகாலன்,

அதன் எதிர்பரிமாணம் மகாகாளி - உருவகம்

🌷பிறப்பை அருளும் தாயின் உருவத்தை மரணத்தை அருளக்கூடிய கோர உருவமாக காளியாகபடைத்தது 

ஜனனமும்,மரணம் இறைவனக்கு ஒன்றே என உணர்த்தும் உருவகம்

🌷வாயு மைந்தன் அனுமன்(குரங்கு போன்ற நிலையில்லாத மனம் யோகம் பயின்றால் கடவுளாகும் தகுதி உண்டு என்ற தத்துவம்

- மனத்தின் உருவகம்

🌷கருடாழ்வார்-மூச்சின் உருவகம்

🌷சூரியனின் ஏழு குதிரைகள் நிறப்பிரிகை-VIBGYOR உருவகம்

🌷தசாவதாரம் பரிணாம வளர்ச்சியின் உருவகம்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

🌷ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் உருவகம்.

எல்லாம் உணர்ந்தோர் ஏதும் உணராதோர்க்கு தான் உணர்ந்ததை உணர்த்த ,

ஏதும் உணராதோர் உணர்ந்த தன்மையின் அடிப்படையில் தாம் உணர்ந்ததை (தத்துவத்தை) உருவகமாக்கி

உணர்த்தினர்.

நீங்களாவது உணர்ந்து கொண்டீரா?

உணர்ந்து கொண்டோர் பகிர்ந்து கொள்வர்.

Sunday, 4 October 2020

கடவுள் நமது சினேகிதன்

 சோ அவர்களின் எங்கே பிராமணன் கேள்வி பதிலிலிருந்து...

கேள்வி : ஒருவருக்காக இன்னொருவர் பிரார்த்தனை செய்தால், முதலாமவரின் குறைகளை கடவுள் களைந்து விடுவாரா?

சோ: ஹிந்து மதம், இறைவனை மிகவும் நெருக்கமானவராகப் பார்க்கிறது. ஹிந்து மதத்தில், கடவுளை நாம் அன்னியப்படுத்தி, எங்கோ வைத்து விடவில்லை. கடவுள் நமது சினேகிதன் மாதிரி. கடவுள் சினேகிதனா என்று கேட்டால், ஆமாம்!

மற்ற பல மதங்களைப் போல ஹிந்து மதம், கடவுளை எட்ட முடியாதவராக நினைக்கவில்லை. நண்பனாக, உறவினனாக; குருவாக, சீடனாக; தந்தையாக, மகனாக; சினேகிதனாக, காதலனாக; எஜமானனாக, வேலையாளாகப் பார்க்கப்படுகிறான் இறைவன்.

ஏனென்றால் உண்மையான பக்தனுக்கு அந்த உரிமை இருக்கிறது. பக்தி அவ்வளவு வலிமை உடையது.

இதனால்தான் கடவுளுக்கு கல்யாண உற்சவம் செய்து பார்க்கிறோம்; தாலாட்டி தூங்க வைக்கிறோம்; பாட்டு பாடி மேளம் கொட்டி, துயில் எழுப்புகிறோம்; நீராட்டுகிறோம்; புத்தாடை அணிவிக்கிறோம்.கடவுளுக்கும், பக்தியுள்ள மனிதனுக்கும் இவ்வளவு நெருக்கம் இருப்பதால், அவரிடம் உரிமை எடுத்துக் கொண்டு, இன்னொருவருக்காக வேண்டுகிறோம். இதை உண்மையான பக்தன் செய்கிறபோது அதற்கு பலன் கிடைக்கிறது.

நீங்கள் என் சினேகிதர். உங்களிடம், ஒருவருக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும். அவர் என்னிடமும் கூறி, உங்களிடம் கேட்டுக் கொள்ளச் சொல்கிறார். நான் உங்களிடம் அவருடைய காரியத்தை விளக்கி, அவருக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டு; அதனால் நான் சொல்கிற கோரிக்கையை நீங்கள் ஏற்கிறீர்கள். நீங்கள் ஒரு மனிதர். உங்களுக்கு இருக்கிற கருணை, இறைவனுக்கு இருக்காதா?

ஆதி சங்கரர் வரலாற்றில் வருகிற ஒரு அருமையான நிகழ்ச்சி இதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. சங்கரர் அப்போது சிறு பையன். பிரம்மச்சாரி. பிட்சைக்காக ஒரு வீட்டிற்குப் போகிறார். அந்த வீடோ, ஒரு பரம தரித்திரனுடைய வீடு. அந்த மனிதனும் வெளியே போயிருக்கிறான். வீட்டில் அவனுடைய மனைவி மட்டும் இருக்கிறாள்.

சங்கரர் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று குரல் எழுப்ப, அந்த அம்மாள் செய்வதறியாமல் திகைக்கிறாள். ஏனென்றால், பிட்சை போடுவதற்கு வீட்டில் எதுவுமே இல்லை. வாயிலில் வந்து நிற்கிற பிரம்மச்சாரியோ, பெரும் தேஜஸ் உடையவராகக் காட்சியளிக்கிறான். வெறும் கையுடன், அந்தச் சிறுவனை திருப்பி அனுப்ப அந்தப் பெண்மணியின் மனம் இடம் கொடுக்கவில்லை. தவிக்கிறாள்.

உங்களைப் போன்றவர்களுக்கு தகுந்த உபசாரம் செய்பவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்’ என்று சங்கரரிடம் கூறிவிட்டு, அந்தப் பெண்மணி, வீட்டில் ஏதாவது இருக்காதா என்று தேடினாள். ஒரு பானையில், வாடிப் போன ஒரு நெல்லிக்கனி இருந்தது. அன்றைய பொழுதுக்கு அவர்கள் வீட்டில் அதுதான் உணவு; அவ்வளவு ஏழ்மை. கையில் கிடைத்த அந்த நெல்லிக்கனியை மிகவும் தயக்கத்துடனும், இவ்வளவு அற்பமான பொருளை பிட்சையிடுகிறோமே என்ற குற்ற உணர்வுடனும், அந்தப் பெண்மணி, சங்கரருக்கு பிட்சையாகத் தந்தாள்..

சங்கரர் நிலைமையைப் புரிந்து கொண்டார்; அந்தப் பெண்மணியின் நல்ல மனதையும் அவர் தெளிவாகவே தெரிந்து கொண்டார். அவளுக்காக அவர் மனம் இளகியது.

அந்தக் குடும்பத்தினரின் வறுமையை நீக்குமாறு, அவர் மனமுருகி, மஹாலக்ஷ்மியை வேண்டிக் கொண்டார்.

அப்போது அவர் துதித்த ஸ்லோகங்கள், ‘கனகதாரா ஸ்தோத்ரம்’ என்ற பெயரைப் பெற்றன. அவர் துதியைக் கேட்டு மகிழ்ந்த மஹாலக்ஷ்மி, அவர் முன் தோன்ற, சங்கரர் விழுந்து வணங்கி நிற்க, தேவி பேசினாள்:

‘குழந்தாய்! இவர்கள் முற்பிறவியில் எந்த நன்மையையும் செய்யவில்லை. அப்படியிருக்க, அவர்களிடம் நான் கருணை காட்ட வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது எவ்வாறு?’சங்கரர் சொன்னார்: ‘தாயே! இப்போது இந்த நெல்லிக்கனி, இந்தப் பெண்மணியால் எனக்கு பிட்சையாக அளிக்கப்பட்டது. என் மீது கருணை வைத்து இந்த தானத்திற்கு நீ பலன் அளிக்கக் கூடாதா?’– இவ்வாறு சங்கரர் வற்புறுத்தி வேண்டிக் கொண்ட பிறகு, மனமிரங்கிய மஹாலக்ஷ்மி, தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழியச் செய்து, அந்த வீட்டையே நிரப்பி விட்டாள். அந்தக் குடும்பத்தின் வறுமை நீங்கியது.இப்படி, சங்கரர் வேண்டிக் கொண்டபோது, ஏதோ ஒரு ஏழைக் குடும்பத்துக்கு தெய்வம் கருணை காட்டவில்லையா?

அதே போலத்தான், ""உண்மையான பக்தி உணர்வுடன்"" நமக்காக ஒருவர் வேண்டிக் கொண்டால், நமக்கு நன்மை கிட்டும்.

காந்தி... நல்லவரா..??? கெட்டவரா..??


 காந்தி... நல்லவரா..??? கெட்டவரா..??

#############################
கண்டிப்பாக படிக்கவும்.....
மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட வரலாறுகளை மட்டுமே படித்துப் பழகிய நமக்கு, சில உண்மை வரலாற்றுச் சம்பவங்கள் தற்போது தெரிய வரும்போது பெரும்பாலும் சிலருக்கு கசக்கத்தான் செய்யும்..
இரு சமுதாயத்தினருக்கு இடையில் அமைதியையும் சகோதரத்துவதுடன் வாழும் தன்மையை ஏற்படுத்தும் விதமாகவே பல உண்மைகள் மறைக்கப்பட்டன.. ஆனால் மறைத்தாலும் மறந்தாலும் உண்மை உண்மையே தவிர என்றைக்கும் பொய்யாகாது!!
இப்படி சில விஷயங்களை இப்போது பேசுவதால் சகோதரத்துவத்திற்கு எதிராகிவிடும் என்று சிலர் எண்ணக் கூடாது.. நாம் இஸ்லாமியருக்கு எதிரானவரும் கிடையாது.. ஏனெனில் நமக்கும் இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.. அவர்கள் உணர்வுகளுக்கும் நாம் மதிப்பு கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்..
அதேநேரம் நடந்தவை நடக்கவில்லை என்று மறுக்கப்பட்டாலும் மறைக்கப்பட்டாலும் நடந்தவை நடந்தவையே!!
சரி, காந்திஜியைப் பற்றி எதற்கு இந்த கேள்வி..??
காந்திஜி அவர்கள் தான் நடத்தும் பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் 'ரகுபதி ராகவ ராஜாராம்.... பதீத பாவன சீதாராம்..' என்ற புகழ்பெற்ற பஜனைப் பாடல் பாடப்படும்.. சகோதரத் துவத்தை ஏற்படுத்த பாடலின் இடையில் ஒரு வார்த்தையை சேர்த்தார் காந்திஜி..
'ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்... ஸப்கோ சன் மதி தே பகவான்' என்று..
இதை இன்னும் ஹிந்துக்கள் பாடிக்கொண்டு இருக்கின்றனர்.. ஆனால் எத்தனை இஸ்லாமியர்கள் பாடுகின்றனர் என்று தெரியவில்லை..
அல்லாவும் ஒரு கடவுள் என்று ஏற்றுக்கொள்ளும் ஹிந்துக்கள் இஸ்லாமியர்களை சகோதரர்களாகவே பார்க்கின்றனர்.. இன்றும் 'பாய்' (சகோதரர்) என்று அன்போடு அழைக்கின்றோம்..
ஆனால் அல்லா மட்டுமே கடவுள் என்றும், இஸ்லாம் தவிர மற்ற மதத்தினரை 'காபிர்'களாக பார்க்கும் இஸ்லாமியர்கள் ஹிந்துக்களை எதிரியாகவே பார்க்கின்றனர்... இதை உணர்ந்த இஸ்லாமியர்கள் 'ஏன்?' என்ற கேள்வியை அவர்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டும்..
காங்கிரஸில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் சுவாமி சிரத்தானந்தர் முஸ்லீம்களாக மதம் மாறியவர்களை மீண்டும் ஹிந்து மதத்திற்கு திரும்ப 'சுத்தி' என்ற இயக்கத்தை உருவாக்கி, அதன் முயற்சியின் காரணமாக உ.பி.யில் 18000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் தாய்மதமான ஹிந்து மதத்திற்கு திரும்பினர்.. அதனைப் பொறுக்காமல் தடுக்க நினைத்த முஸ்லீம் பொறுப்பாளர்கள் காந்திஜியிடம் புகார் செய்து, தாய்மதம் திரும்புவதை நிறுத்த கோரிக்கை வைத்தனர்..
ஹிந்துக்கள் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்ட போது தடுக்க நினைக்காத காந்திஜி, முஸ்லீம்கள் மீண்டும் ஹிந்து மதத்திற்கு திரும்பும் போது மட்டும் பொங்கி எழுந்து, சுவாமி சிரத்தானந்தரை காங்கிரஸிலிருந்து நீக்கினார், தன் இஸ்லாமிய விசுவாசத்தைக் காட்டினார்..
அது மட்டுமா.. சுவாமி சிரத்தானந்தர் உடல்நிலை சரியில்லாத போது படுக்கையில் இருந்தார்.. 26.12.1926 .. அப்துல் ரஷீத் என்ற ஒருவன், சுவாமிஜியை பார்க்க வந்து, சில சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற வேண்டும் என்றான்.. சுவாமிஜி சம்மதம் தெரிவித்தபோது, குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்ட அப்துல் ரஷீத், சுவாமிஜியின் உதவியாளர் வெளியே சென்ற நேரத்தில், தான் மறைத்து வைத்த துப்பாக்கியை எடுத்து சுவாமி சிரத்தானந்தரை சுட்டுக் கொன்றான்..
அதன்பிறகு கைது செய்யப்பட்டு வழக்கு நடந்தது.. அப்துல் ரஷீத் ஒரு பெரிய தியாகி என்று மசூதிகளில் நிதி திரட்டினார்கள்.. அந்தக் கொலைகாரனுக்கு வாதாடிய வக்கீல் காங்கிரஸின் பெருந்தலைவர்களில் ஒருவரான ஆஸப் அலி..
"அப்துல் ரஷீத் நமது சகோதரன், அவனை நாம் எந்த வகையிலும் குற்றம் சொல்லக் கூடாது, அவனைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறிய அஹிம்சையை விரும்பிய காந்திஜியின் ஒத்துழைப்போடு காங்கிரஸ் மாநாட்டில் அப்துல் ரஷீத் வழக்கிற்கு தேவையான நிதியைத் திரட்டினார்கள்..
ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் நம் புரட்சி வீரன் பகத்சிங்கிற்கு தூக்குத் தண்டனை அளித்த போது, சில தலைவர்கள் அந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று ஆங்கிலேயன் லார்டு மிண்டோ வைஸ்ராய்க்கு கோரிக்கையாக ஒரு கடிதம் எழுதச் சொல்லி காந்திஜியைக் கேட்டனர்..
அதற்கு மறுப்பு தெரிவித்த காந்திஜி "வன்முறையில் ஈடுபட்ட பகத்சிங், அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும்" என்றார்..
ஆங்கிலேயர்கள் கேட்ட தூக்குத்தண்டனையை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்திஜி கையெழுத்துப் போட்டபோது, "அகிம்சையைப் போதிக்கும் இவர் எப்படி இம்சையை தரும் தூக்குத்தண்டனைக்கு சம்மதம் தெரிவிக்கிறார்" என வெறுத்த மக்கள் காந்திஜியை கடுமையாக விமர்சித்தனர். (The Legend of Bhagat Singh என்ற ஹிந்தி திரைப்படத்தில் கூட காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்).
இதுபோன்று முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையில் தன் விசுவாச வேற்றுமையை காந்திஜி கொண்டிருந்தார்..
மறக்கமுடியாத பெரும்துயரம் தேசப்பிரிவினை!!
1940 மார்ச் 23 - முஸ்லிம் லீக் மாநாடு - முஸ்லீம்களுக்கு தனி நாடு 'பாகிஸ்தான்' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் முகமது அலி ஜின்னா பேசியது:
"ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டு வெவ்வேறு மத சித்தாந்தங்கள், பழக்க வழக்கங்கள், இலக்கியம் கொண்டவர்கள். வாழ்க்கையைப் பற்றிய இவர்கள் கண்ணோட்டமும் வாழ்வின் பல்வேறு அம்சங்களப் பற்றிய அணுகுமுறையும் இருவருக்கும் வெவ்வேறானவை.
இரு சமூகங்களும் வரலாற்றில் ஊக்கம் பெறுகிற விஷயங்களும் வெவ்வேறு.. இரு சாராரின் இதிகாசங்கள், மாவீரர்கள் தனித்தனி.. நினைவில் கொள்ளும் சம்பவங்களும் வெவ்வேறானவை. பெரும்பாலும் ஒரு சாரரால் வீரராகக் கருதப்படுபவர் மற்றவர்களுக்கு எதிரியாக இருப்பார். இப்படிப்பட்ட இரண்டு தேசியங்களை ஒரே அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவது விபரீதம் ஆகும்.. முஸ்லீம்கள் ஒரு தேசம். அவர்களுக்கென ஒரு தனி தாயகம் தேவை. நிலப்பரப்பு தேவை. ஒர் தனி அரசு தேவை! " என்று பிரிவினையை வலியுறுத்தி முகமது அலி ஜின்னா பேசினார்..
இராஜேந்திர பிரசாத், டாக்டர் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் மேலும் ஒரு சில தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்..
"வாள் முனையில் பாகிஸ்தான் வாங்கிவிடலாம் என அவர்கள் நினைத்தால் வாளோடு வாள் மோதும்" என்றார் படேல்.
முகமது ஜின்னா "நாங்கள் சரித்திரச் சிறப்புமிக்க முடிவெடுத்திருக்கிறோம். இன்றுள்ள சட்டத்தின் நடைமுறைகளுக்கு நாங்கள் விடைகொடுத்துவிட்டோம்.. விரைவில் பாகிஸ்தான் உதயமாகும். 1946 ஆகஸ்ட் 16ந் தேதி முதல் கல்கத்தாவில் 'நேரடி நடவடிக்கை(Direct Action)'ல் ஈடுபடுவோம்" என்றார்..
நேரடி நடவடிக்கை என்றால் என்ன? என்று நிருபர்கள் கேட்டதற்கு, "நேரடி நடவடிக்கை என்றால் யாருக்குப் புரிய வேண்டுமோ அவர்களுக்குப் புரியும்" என்றார் முகமது ஜின்னா.
1946 ஆகஸ்ட் 16 - காலை , கல்கத்தா நகர் - ஜிகாத் (புனிதப் போர்) அறிவிக்கப்பட்டது. மசூதியிலிருந்து தொழுகையை முடித்து வெளிவந்த முஸ்லீம்கள், ஹிந்துக்கள் மீது பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு தாக்குதல்களைத் துவக்கினார்கள்.. கல்கத்தா மேயர் ஷரீப் கான் முன்னின்று வழிநடத்தினார். போலீஸ் நிர்வாகம் ஸ்தம்பித்தது..
கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் - 10000 க்கு மேல்.. கை கால் இழந்தோர் 15000 பேர்.. வீடு வாசல் இழந்து அனாதையானோர் 1 லட்சம் பேர்..
இப்போது மதக்கலவரம் என்றால் குஜராத் உத்திரப்பிரதேசம் என ஹிந்துக்கள் மீது குற்றம் சொல்பவர்கள் மிக எளிதாக 'நவகாளி' வரலாற்றை மறைத்துவிடுகின்றனர்..
ஹிந்துக்கள் மிகச்சிறிய சிறுபான்மையினராக இருந்த நவகாளியில் முஸ்லீம்கள் கலவரத்தைத் துவக்கினார்கள்.
மதமாற்றம், கற்பழிப்பு, கொலை.....
தங்கள் கணவன்மார்கள் தங்கள் கண் முன்னாலேயே கொல்லப்படும் கொடூரத்தைக் காணும் கொடுமை.. கணவர்கள் கண் முன்னே மனைவிகள் கற்பழிக்கப்படும் கொடுமை.. கணவனை கொன்றவனே திருமணம் செய்து கொள்ளும் கொடுமை.. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாட்டிறைச்சி உண்ணச் சொல்வது, முஸ்லீமாக மதமாற்றம் செய்யும் கொடுமை.... எண்ணற்ற......
முஸ்லீம்களின் இதுபோன்ற கலவரத்தைக் கண்டு மிரண்டு போன காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவித்தனர்..
19 சதவித ஜனத்தொகையுடன் கூடிய பாகிஸ்தானுக்கு மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதம் ஒதுக்கப்பட்டது..
வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு வங்காளம் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டது.. அஸ்ஸாமில் வடமேற்கு எல்லை மாகாணம், பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சிந்து மாகாணம் முழுவதுமாக சேர்த்து புதிய பாகிஸ்தான் அறிவிக்கப்பட்டது..
1947 ஆகஸ்ட் 14 - பாகிஸ்தான் சுதந்திர தினம்
1947 ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திர தினம்
பாகிஸ்தான் - முஸ்லீம் நாடு, குரான் அடிப்படையில் ஆட்சி நடைபெறும்..
இந்தியா - மதசார்பற்ற நாடு .. ஹ்ம்ம் வெட்கக்கேடு!
மதரீதியாக இரண்டு தேசங்களாக பிளக்கப்பட்ட பிறகு ஒரு நாடு முஸ்லிம் நாடு என்றால் மற்றொரு நாடு இந்து தேசம் என்று அறிவிக்கப்பட வேண்டியது தானே ஞாயமும் தர்மமும்.மதரீதியாக இவ்வளவு இழந்த பின்பு மதசார்பின்மை என்ன வேண்டியிருக்கிறது.
பிளவுபட்ட அன்றைய பாகிஸ்தானில் சுமார் 3 கோடி ஹிந்துக்கள் இருந்தனர்.. இந்தியாவில் சுமார் 3 கோடி முஸ்லீம்கள் இருந்தனர்.. அங்குள்ள ஹிந்துக்களை இங்கு அழைத்துக் கொள்ளலாம், இங்குள்ள முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடலாம் என்று டாக்டர் அம்பேத்கர் எவ்வளவோ சொல்லியும் காந்திஜியும் நேருவும் கேட்கவில்லை..
அதன் விளைவு...
1947ல் இந்தியாவில் 3 கோடி முஸ்லீம்கள் இருந்தனர்.. இன்று 15 கோடி முஸ்லீம்களாக பெருகியுள்ளனர்.. இதைப் பற்றி கவலை இல்லை, இந்தியர்கள் பெருந்தன்மை வாய்ந்தவர்கள்..
ஆனால் அன்று 1947ல் பாகிஸ்தானில் 3 கோடி ஹிந்துக்கள் இருந்தார்கள்.. இன்றோ வெறும் 60 இலட்சம் ஹிந்துக்கள் இருக்கின்றனர்..
எதனால் இந்த முரண்பாடு? மதசார்பற்றவர்கள்தான் பதில் தர வேண்டும்..
நாம் இங்கு மகிழ்ச்சியுடன் சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்கள் மீது முஸ்லீம்கள் படு பயங்கரமான தாக்குதல்களைத் தொடுத்தனர்..
உயிருக்குப் பயந்து முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள்..
பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு, பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டார்கள்..
லட்சக்கணக்கானோர் டெல்லி நோக்கி அகதிகளாக ஓடி வந்தனர்..
கணவரைப் பறிகொடுத்த மனைவியர்..
பெற்றோர்களை இழந்த குழந்தைகள்..
அகதிகளாக வந்தவர்களின் ரயில்கள் மீதும் தாக்குதல் நடந்தன..
டெல்லி வந்த ரயில் பெட்டிகளில் பிணக் குவியல்..
பாகிஸ்தான் முடிவான பிறகு அங்குள்ள ஹிந்துக்களை பத்திரமாக இங்கு கொண்டுவந்து சேர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மவுண்ட் பேட்டன் பிரபுவின் குடும்பத்துடன் 'சந்தோசமாக' இருந்த நேருவும் அவருக்கு துணையாக இருந்த காந்திஜியும்.. (சுதந்திரம் கிடைத்த பிறகும் கூட நம் நாட்டின் கவர்னர் ஜெனராலக மவுண்ட் மேட்டன் பிரபுவை ஏற்றுக் கொண்டதன் ரகசியம் மர்மம் பற்றி யாரேனும் யோசித்ததுண்டா??)
மாறாக, அங்குள்ள ஹிந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்படுவதால், பதிலுக்கு இங்குள்ள முஸ்லீம்களும் ஹிந்துக்களால் பாதிக்கப்பட்டு விடக் கூடாதென்று, முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு வேண்டி உண்ணாவிரதம் துவங்கினார் காந்திஜி..
இத்தகைய துயரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய தொகை ரூ.55 கோடியை உடனே கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் காந்திஜி..
ஆனால் பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்துள்ள நிலையில் இந்த பணத்தை கொடுத்தால் அது அவர்களின் இராணுவச் செலவுக்கு பயன்படும். அதனால் இப்போது கொடுக்கக் கூடாது என்றார் வல்லபாய் படேல்.. ஆனால் பாகிஸ்தான் கோரிக்கைக்காக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார் காந்திஜி.. இதனால் அதிர்ச்சியடைந்த படேல் உடனடியாக ரூ.55 கோடியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்..
இந்தியாவில் ஹிந்து முஸ்லீம் பிரச்சனையைத் தீர்த்து அமைதியைக் கொண்டு வர ஒரே வழி முஸ்லீம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் என்ற முடிவுக்கு வந்தனர் காந்திஜியும், நேருவும்..
அகிம்சை வழியில் ஹிந்துக்களின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டு, கலவரம் செய்யும் முஸ்லீம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியவர் காந்திஜி..
( இந்தப் பழக்கத்தினால் தான் இன்றும் ஹைதராபாத், மலபார் போன்ற முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள நகரங்களை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என அவ்வப்போது சில பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. காஷ்மீரில் தொடர்ந்து கலவரம் நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே)
இப்படி ஒருதலைபட்சமாக இருந்த காந்திஜி
ஒவ்வொருவருக்கும் இன்னொரு பக்கம் இருக்கிறது என்று நிரூபித்த காந்திஜி
எம் தேசத்தையும் மக்களையும் பிரித்த பிரிவினைவாதி
களுக்கு துணை நின்ற காந்திஜி
முஸ்லீம்களின் கலவரத்தைக் கட்டுப்படுத்த துணிவில்லாத காந்திஜி
ஆங்கிலேயனுக்கு அடிபணிந்த காந்திஜி
நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயனை எதிர்த்த உண்மையான 'தேசப்பிதா' நேதாஜிக்கு துரோகம் செய்த காந்திஜி
ஹிந்துக்களின் பெருந்தன்மையும் விட்டுக் கொடுக்கும் குணங்களைப் பார்த்து,
"முஸ்லீம்கள் பொதுவாகவே முரடர்கள், ஹிந்துக்கள் பொதுவாகவே கோழைகள்.. ஹிந்து தான் கோழையாக இருப்பதற்கு ஏன் முஸ்லீமை குறை கூற வேண்டும்?" என்று கூறிய காந்தி....
நல்லவரா? கெட்டவரா?
விடை உங்கள் கையில்.!
courtesy: Saravanaprasad Balasubramanian