Saturday, 16 October 2021
PRITHIVI RAJ, the Great
பிருத்வி என இந்தியா ஏன் ஏவுகனைக்கு பெயர் சூட்டியது, அதுவும் இஸ்லாமியரான கலாம் இந்தியனாக உருவாக்கிய அந்த ஏவுகனைக்கு அப்பெயரை ஏன் பரிந்துரைத்தார் என்றால் விஷயம் மிக பெரிய வரலாற்றை கொண்டது
பிரித்வி எனும் வரலாற்றில் ஒளிந்திருக்கின்றது இந்தியாவின் வீரமான வரலாறும், இங்கு நிலைத்துவிட்ட அந்த வீர காவியமும், காதல் காவியமும்
இன்றும் கண்ணனுக்கும் வீரசிவாஜிக்கும் அடுத்தபடி கொண்டாடபடும் வீரவரலாறு அது
அன்று கங்கையாலும் சிந்துவாலும் செல்வ செழிப்பில் மிதந்த இந்தியா மேல் ஆப்கானிய கொள்ளையர்களுக்கு கண் இருந்தது, அடிக்கடி கொள்ளையிட வருவர், கொள்ளை அடித்துவிட்டு ஓடிவிடுவர்
இங்கு இருந்து ஆளும் தைரியமும் ஆசையும் அவர்களுக்கு இல்லை, ராஜ்புத் வீர இனமும் இன்னும் பல இந்திய குழுக்களும் அவர்களுக்கான பதிலடியினை கொடுத்து கொண்டே இருந்தன
அலெக்ஸாண்டரை போரஸ் விரட்டியது போல முகமது பின் காசிம் எனும் அரபு தளபதியின் படைகளை பாபா ராவல் எனும் இந்து மன்னன் எல்லையிலே விரட்டினான், அப்பொழுது அவன் பாதுகாப்புக்காக கட்டிய ஊர்தான் இன்றைய ராவல்பிண்டி
யாரோ யாரோ வருவார்கள் அந்நாளில் அடிபட்டு ஓடுவார்கள் அல்லது கிடைத்ததை சுருட்டி தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்
ஆப்கனின் கஸ்னி அல்லது கஜினி ஊரின் மன்னன் முகமது எனும் கஜினி முகமது கூட அப்படி கொள்ளை அடித்துவிட்டு ஓடியவனே தவிர மாவீரன் அல்ல
17 முறையில் சிலமுறை வென்ற கஜினி தன் நாட்டில் மிகபெரும் அரசை ஸ்தாபித்தான் அவன் வம்சத்தை பின்னாளில் விரட்டி ஆட்சியினை கைபற்றினான் கோரி முகமது
அதாவது அந்த ஊரில் ஏகபட்ட முகமதுகள், கஜினியினை ஆண்டவன் கஜினி முகமது, கோரி எனும் ஊரினை ஆண்டவன் கோரி முகமது
கோரி என்பது கோவ்ரி, காவ்ரி, காவேரி என பொருள்படும், ஆப்கனில் ஏகபட்ட தமிழ்பெயர் உண்டு, காவேரிதான் கோரி ஆனது. விஷயம் அது அல்ல இப்போதைய விஷயம் கோரி முகமது
அவன் கஜினி பாணியில் இந்தியாவினை தாக்க திட்டமிட்ட பொழுது இங்கு அவனுக்கு பெரும் சவால் இருந்தது
அந்த சவாலின் பெயர் பிரித்வி ராஜன், இன்றைய டெல்லி, ஆஜ்மீர் பகுதிகளின் ராஜா அவன், 20 வயதிலே அரியணை ஏறினான், மாவீரனும் அழகனுமாய் இருந்தான் கூடவே அரசனுக்குள்ள அறிவும் ஏராளம் இருந்தது
வட இந்தியா முழுக்க அவனுக்கு பெரும் செல்வாக்கும் இருந்தது
அப்பொழுது கன்னோசி நாடு அதாவது இன்றைய உபி பகுதியில் ஜெயசந்திரன் என்றொரு அரசன் இருந்தான், அவன் ஒரு யாகம் நடத்தினான் , தன்னை தலைவராக ஏற்கும் படி பலருக்கு ஓலை அனுப்பினான் எல்லோரும் வந்து வணங்கி யாகத்தில் கலந்து கொண்டனர்
ஆனால் பிரித்விராஜன் வரவில்லை, தன்னை அவன் அவமதித்ததாக மனதில் புழுங்கிகொண்டிருந்தான் ஜெய்சந்திரன் என்றாலும் மோதிபார்க்கும் ஆசை எல்லாம் இல்லை
எனினும் அரண்மனையில் பிரித்விராஜன் பற்றி அவன் விவாதிப்பதும் அதை நாலுபேர் மறுத்து பிரித்வியின் பெருமைகளையும் அவனின் மாவீரத்தையும் பற்றி பேசுவதும் வழக்கமானது
அதை அவ்வப்போது கேட்டுகொண்டிருந்த ஜெயசந்திரன் மகள் சம்யுத்தாவிற்கு பிரித்வி மேல் காதலே வந்தது
ஆம் பார்க்காமலே வந்த காதல் அது, அப்படியும் காதல் சாத்தியமாய் இருக்கின்றது.
பிரித்விராஜன் பற்றிய செய்திகளை கேட்டே அவள் காதலில் விழுந்தாள்
என்ன இருந்தாலும் அரச குடும்பம் அல்லவா? உரிய முறையில் யாரையோ பிடித்து அனுப்பி தன் காதலை பிரித்விராஜனிடம் சொல்ல சொல்லிவிட்டாள்
அவனுக்கும் ஆச்சரியம், சம்யுக்தா பற்றி கேள்விபட்ட அவனும் அவள் காதலை ஏற்றுகொண்டான், ஆனால் சந்திப்போ டேட்டிங்கோ இல்லை, எல்லாம் கனவில் மட்டுமே
வீரனை காதலித்த பின் சம்யுக்தா சும்மா இருப்பாளா? அவளுக்கும் தைரியம் வந்தது, மிக தைரியமாக ஜெயசந்திரனிடமே தன் காதலை சொன்னாள், "மணந்தால் பிரித்வியினை மணப்பேன் இல்லை என்றால் மரணத்தை தவிர யாரையும் மணக்க மாட்டேன்"
ஆத்திரத்தில் பொங்கினான் ஜெயசந்திரன், பிரித்வி என் அரண்மனைக்கு வரவே தகுதியற்றவன், அவன் என் அரண்மனை காவலாளி வேலைக்கே சரி என சொல்லி பிரித்வி போலவே ஒரு சிலை செய்து வாசலில் வைத்தான்
அதை அடிக்கடி மிதித்தானா, காரி உமிழ்ந்தானா, செருப்பு மாலை இட்டானா? யானை கொண்டு சாணமிட செய்தானா என்ற தகவல் இல்லை, ஆனால் பிரித்விராஜன் தகுதி இதுதான் என சொல்லிகொண்டிருந்தான்
சம்யுக்தையோ அச்சிலைக்கு மாலையிடுவதும் திலகமிடுவதும் அதை சுற்றி ஆடுவதுமாக இருந்தாள்
பொறுத்து பார்த்த மன்னன் ஒரு நாள் சுயம்வரம் நடத்தினான், மகளிடம் சொன்னான் " பிரித்விராஜனை தவிர எல்லா ராஜகுமாரரும் சுயம்வரத்திற்கு வருவார்கள், ஒருவனுக்கு மாலையிடு, என்னை மீறி அவனும் வரமுடியாது, நீனும் செல்லமுடியாது"
சம்யுக்தாவிற்கு வேறுவழியில்லை, ஆனாலும் பிரித்வி ராஜனை நம்பினாள்
சுயம்வர நாளும் வந்தது, ராஜகுமாரர் எல்லாம் கூடி இருந்தனர், சம்யுக்தா கையில் மாலை கொடுக்கபட்டது, விரும்பியவன் கழுத்தில் மாலையிட உரிமையும் கொடுக்கபட்டது
சம்யுக்தா நல்ல அழகி என்பதால் ராஜகுமாரர் எல்லாம் பல்லை மட்டுமல்ல கழுத்தையும் காட்டியபடி நின்றனர்
எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தாள் சம்யுக்தா தேசமே, ஏன் தேசங்களே திரண்டிருந்தது, தன் காதலை காட்ட மிக சரியான சந்தர்ப்பம் இது என எண்ணிய சம்யுக்தா சட்டென ஓடி சென்று பிரித்வி சிலைக்கு மாலையிட்டாள்
சபை அதிர்ந்தது, சிலையினை இடித்துவிட்டு அவளை இழுத்துவர ஜெயசந்திரன் அடியெடுத்து வைத்தபொழுது அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது
சட்டனெ சிலைக்கு உயிர்வந்து சம்யுக்தாவினை அள்ளி குதிரையில் வைத்து பறந்தது
ஆம் நடக்கும் விஷயங்களை மிக துல்லியமாக கண்காணித்த பிரித்விராஜன் சுயம்வரம் அன்று சிலைக்கு பதிலாக அவனே நின்றிருந்தான், சிலை போலவே நின்றிருந்தான்
யாருக்கும் சந்தேகம் வராதாடி நின்றிருந்தது அவனின் சாமார்த்தியம்
துள்ளியோடிய குதிரை இருவரையும் சுமந்து ஓடியது, பெரும் படையுடன் பின் தொடர்ந்தான் ஜெயசந்திரன், தொலைவில் தன் படையினை நிறுத்தி வைத்திருந்தான் பிருத்வி, அந்த இடத்தை அடைந்ததும் யுத்தம் தொடங்கிற்று
யுத்தம் நடக்கும் சாக்கில் சம்யுக்தாவோடு டெல்லிக்கு வந்தான் பிரித்வி,ஜெயசந்திரனால் அவன் படைகளை தாண்டி வரமுடியவில்லை
காதலர்கள் சந்தித்ததும், காந்தர்வ மணம் புரிந்ததும் ஒரே நாளிலே
அவர்கள் வாழ்வு ஆனந்தமாக சென்றுகொண்டிருந்தது, இருமுறை தன்னை அவமானபடுத்திய பிரித்வி ராஜனை ஒழிக்க தூக்கமின்றி வழிதேடினான் ஜெய்சந்திரன்
அந்நேரம் அதாவது கிபி 1191ம் ஆண்டு , இந்தியா மேல் முதன்முறையாக படையெடுத்தான் கோரி முகமது
ஆப்கனை அடக்கி வெற்றி கொண்ட கோரி டெல்லி நோக்கி வந்தான், அவனை அரியானாவின் தராய் அருகே எதிர்கொண்டான் பிரித்விராஜன்
மிக கடுமையான யுத்தம் அது, வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிக பெரும் வீரம் காட்டி நின்ற பிரித்விராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை
ஆப்கனை அடக்கிய கோரி முகமது பிரித்வி முன்னால் திணறினான், ஒரு கட்டத்தில் கோரி முகமதுவினை வளைத்துபிடித்தான் பிரித்வி
அன்றே கோரியின் தலையினை சீவியிருந்தால் இந்திய வரலாறே மாறியிருக்கும், ஆனால் உயிர்பிச்சை அளித்து அவனை ஆப்கனுக்கு விரட்டினான் பிரித்வி
அடிபட்ட பாம்பாக ஆப்கன் திரும்பிய கோரி அவமானத்தில் நொந்தான், பெரும் படை திரட்டி மறுபடியும் டில்லி நோக்கி வந்தான்
இம்முறை வலுவான குதிரைபடையோடு வந்தான் கோரி, பிரித்விராஜனிடம் யானைபடை வலுவாக இருந்தது என்பதால் அரபு குதிரைகள் சகிதம் வலுவாக வந்தான் கோரி
இம்முறை கோரியினை விடவே கூடாது என முடிவு செய்த பிரித்வி பல மன்னர்களை திரட்டினான், அப்படியே மாமன் ஜெயசந்திரனிடமும் உதவி கேட்டான்
ஜெய்சந்திரனோ பகைமையினால் உதவ மறுத்தான், உதவ சென்றவர்களையும் தடுத்தான் ஆயினும் களம் கண்டான் பிரித்வி
உதவ மறுத்ததோடு இல்லாமல் கோரிக்கு ஆதரவான காரியங்களை செய்தான் ஜெயசந்திரன்
தன் இருபெரும் எதிரிகளை தனியாக சந்தித்தான் பிரித்வி,
போரில் மாவீரம் காட்டி நின்ற பிரித்வியினை கோரியினால் வெல்ல முடியவில்லை, ஆயினும் அவன் திரட்டி வந்த பெரும்படை அவனுக்கு பலமாக களத்துக்கு வந்து கொண்டே இருந்தது , யுத்தம் நீடித்தது
யுத்த நெறிகளை மீறி காட்டுமிராண்டிதனமான போரில் ஈடுபட்ட கோரி, நள்ளிரவில் பாசறையில் புகுந்து பிரித்வியினை பிடித்தான், இதற்கு ஜெயசந்திரனின் கொடூரமான திட்டமும் இருந்தது
துரோகத்தால் வீழ்த்தபட்டான் பிரித்வி ராஜன்
கடந்த முறை தனக்கு உயிர்பிச்சை அளித்தவன் என்ற நன்றி கூட இல்லாமல் அவனின் கண்களை குருடாக்கினான் கோரி
எதிரி வென்றதும் ராஜபுத்திர இந்து பெண்கள் என்ன செய்வார்களோ அதை சம்யுக்தாவும் செய்தாள், ஆம் தீகுளித்து இறந்தாள் அவளோடு பல பெண்கள் செத்தனர்
டெல்லியினை வென்ற கோரி மற்ற ஆப்கன் மன்னர்களை போல கொள்ளை அடித்துவிட்டு ஓடவில்லை, தன் அடிமைகளில் ஒருவனை தன் பிரதிநிதியாக அமர்த்தினான்
அத்தோடு மிக முக்கியமான காரியத்தை செய்தான், ஆம் தனக்கு உதவிய ஜெயசந்திரனை கொன்றான் கோரி. எதற்காக என்றால் அந்நாளைய வழக்கபடி பிரித்வியின் நாடு ஜெயசந்திரன் பக்கம் போயிருக்கும், கொள்ளைகளோடு கோரி ஊர் திரும்ப வேண்டி இருக்கும்
ஜெயசந்திரன் கணக்கு இதுதான், ஆனால் கொடூரமான கோரி காரியம் முடிந்ததும் அவனை காவு வாங்கினான்
குருடானான பிரித்விராஜனை வைத்து தன் சபையில் வேடிக்கை காட்டுவது அவனுக்கு வழக்கமாயிருந்தது
பலசாலி அகபட்டால் உடனே அவனை குருடனாக்கி அவனை தடுமாற வைத்து ரசித்து பழிவாங்கும் கொடூர பழக்கம் அன்று அரேபியாவிலும் ஆப்கனிலும் இருந்தது
குருடனான பிரித்வியினை அடிக்கடி சபையில் நிறுத்தி அவமானபடுத்தி விளையாடுவது அவனுக்கு வழக்கமாயிற்று
"ஒரு நாள் நீதான் பெரும் வில்லாளி ஆயிற்றே? இப்பொழுது வில்லும் அம்பும் கொடுத்தால் சரியாக அடிப்பாயா?" என நகையாடினான் கோரி
தன்னால் ஒலிவரும் இலக்கினை துல்லியமாக தாக்கமுடியும் என்றான் பிரித்வி ராஜன்
அரை போதையில் இருந்த கோரி, அவன் கையில் வில்லை கொடுத்து, இப்பொழுது மணி ஒலிக்கும் அதுதான் இலக்கு நீ அதை சரியாக அடிக்க வேண்டும் என உத்தரவிட்டதுதான் தாமதம்
மிக சரியாக கோரியின் மேல் அம்பை செலுத்தினான் பிரித்வி
ஆம், ஓய்வு என்பதாலும் பிரித்வி குருடன் என்பதாலும் கவச உடை இன்றி உத்தரவிட்ட கோரியினை, அவன் குரல் வந்த திசை நோக்கி மிக சரியாக அம்புவிட்டு கொன்றான் பிரித்வி
அதன் பின்பு பிரித்வி கொல்லபடுகின்றான், அவனுக்கு வயது 24
24 வயதிற்குள் மங்கா புகழ்பெற்றவன் பிரித்வி, கோரி முகமதுவினை முதலில் ஓட அடித்தவன் அவனே
இந்தியரிடையே ஒற்றுமை இருந்தால் இரண்டாம் முறையும் அவனால் வென்றிருக்க முடியும், ஜெயசந்திரனின் துரோகமும் பிரித்வியினை சாய்த்தது
துரோகத்தால் வீழ்த்தபட்டான் மாவீரன் பிரித்வி, அவனின் வாழ்வும் காதலும் வீரமும் கடைசியில் பழிதீர்த்த நுட்பமும் மங்கா காவிய பாடல்களாயின
இன்றும் வட இந்தியாவின் கிராமிய பாடல்களில் அவன் கதையும் காவியமும் உண்டு
ஆப்கானிய கொடூர மன்னர்களை மாவீரனாக எதிர்கொண்ட அவனின் பெயரை இந்தியா தன் ஏவுகனைக்கு சூட்டியது
ஆம் இந்தியா தன் ஏவுகனைக்கு "பிரித்வி " என அவன் பெயரையே சூட்டியது
இதை கவனித்த பாகிஸ்தான் அவசரமாக சீனாவிடமிருந்து ஏவுகனை வாங்கிய பாகிஸ்தான் அதற்கு "கோரி" என பெயரிட்டு வைத்திருக்கின்றது
900 ஆண்டுகளை கடந்தாலும் கோரியும் பிரித்வியும் இன்றும் ஏவுகனைகளாக எதிர் எதிரே நிற்கின்றார்கள்
நிச்சயம் பிரித்வி இனி தோற்கமாட்டான், காரணம் அன்று அவனுக்கு துரோகம் செய்ய ஜெயசந்திரன் இருந்தான் இன்று மொத்த இந்தியாவும் அவனுக்கு ஆதரவாய் இருகின்றது
பிரித்த்வி மேம்படுத்தபட்டு பாகிஸ்தானின் எந்த மூலையினையும் அணுகுண்டோடு தாக்கும் அளவு வலிமையானதாக இந்தியாவின் பாதுகாப்பாக நிற்கின்றது
அதில் பிரித்விராஜன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான், உண்மையான இந்துவீரன் ஒரு காலமும் அழிவதே இல்லை.
Courtesy:Stanley Rajan
Tuesday, 20 October 2020
சமணர்கள்
சேகுவேரா தன் நாட்டுக்காக போராடியவர். தேசபக்தர்.
ஆனால், இவரை நாயகனாக கொண்ட யாரும் தேசபக்தர்கள் இல்லை.
பெரியபுராணம் படிக்காதவர்களுக்கு, ஞானசம்பந்தரை பற்றியோ, தர்மம் பற்றியோ,
ராஜ்ய பரிபாலனம் பற்றியோ அறியாதவர்களுக்காக சொல்லி ஆக வேண்டும், அன்று நடந்ததை.
ஞானசம்பந்தர் மதுரைக்கு விஜயம் போகும்போது நாவுக்கரசர் தடுக்கிறார்.
நாளும் கோளும் சரியில்லை. சமணர்கள் சூது செய்வார்கள்.
நீங்கள் சிறுபிள்ளை. நானும் துணைக்கு வருகிறேன் என்கிறார்.
கோளறு பதிகத்தை உடனே பாடிவிட்டு,
சிவன் காலை பிடித்தவன் எவன் காலையும் பிடிக்கவேண்டாம் என்று அவரை தடுத்துவிட்டு தனியாக புறப்படுகிறார்.
அவர் தங்கியிருந்த மடத்துக்கு ஏவல் வைக்கிறார்கள் சமணர்கள். நெருப்பு பிடிக்கிறது.
தங்கியிருக்கும் இடத்துக்கு தீ வைப்பவர்களை,
சிசு கொலை செய்கிறவர்களை,
வேதமறிந்த அந்தணர்களை மற்றும் அப்பாவிகளை கொல்கிறவர்களை,
பெண்களை பலாத்காரம் செய்கிறவர்களை,
பசுக்கொலை செய்கிறவர்களை
என்று ஐந்து வகையான மஹாபாவங்களை புரிகிறவர்களுக்கு
மரணதண்டனை மட்டுமே என்று ராஜ்ய நீதி சொல்கிறது.
இவர்கள் அரசுக்கு வேண்டியவர்களாக இருந்ததால் மன்னன் தண்டிக்கவில்லை.
சமணமும் பவுத்தமும் அறிவால் நம்மை வென்றதில்லை.
ராஜாவை கைக்குள் போட்டுக்கொண்டுதான் இம்சித்தார்கள்.
இன்றும் அதே நிலைமை.
இஸ்லாமும்,
கிறிஸ்தவமும்,
நாத்தீகமும் அதை அப்படியே தொடர்கின்றன.
சம்பந்தர் பாடிய பாடல் அந்த தீயை அணைத்து,
ஏவல் சென்று மங்கையர்க்கரசியின் கணவன் உயிருக்கு ஆபத்தின்றி
'பையலே சென்று பாண்டியருக்கு ஆகுக' என்று சம்பந்தர் சொல்ல.
அவர்கள் வைத்த தீ வெப்பு நோயாக மாறி, மன்னனை தாக்கி கடும் காய்ச்சலில் விழுகிறான்.
மருந்துகள் குணப்படுத்தவில்லை.
சமணர்களின் மயிற்பீலியும், மந்திரித்த நீரும் அதிகமாக்கின வெப்பத்தை. துடித்தான் மன்னன்.
வழியின்றி சம்பந்தரை வர சொன்னான்.
தன் வியாதியை போக்க சொன்னான்.
சமணர்கள், மன்னனின் ஒரு பாதியை நீங்களும் மறுபாதியை நாங்களும் குணப்படுத்துகிறோம் என்று சவால் விட்டனர்.
நீர் கொண்டுவந்த திருநீற்றை நம்பமாட்டோம் என்று சமையற்கட்டிலிருந்து சாம்பலை எடுத்து தந்தனர்.
பதிகம் பாடி நீரை இட்டு, சுகம் உண்டாக்கினார். சம்பந்தர் வென்றார்.
மறுபகுதியையும் குணப்படுத்தும்படி மன்னன் கேட்க, அதையும் செய்தார்.
அப்போது கூன் இருந்த பாண்டியன், கூன் நிமிர்ந்து நின்ற சீர் நெடுமாறனானான்.
தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், அனல்வாதம் என்றார்கள்.
அனலில் தாங்கள் எழுதிய சுவடியை இடவேண்டும் என்றார்கள்.
சம்பந்தரின் சுவடி எரியவில்லை.
சமணர்களின் சுவடி எரிந்தது.
இந்த இடத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்.
செய்யவில்லை. புனல்வாதம் என்றார்கள். என்ன அபத்தம் இது?
வாதம் வாதம் என்றால் இதற்கு முடிவென்ன என்று மன்னனின் மனைவி மங்கையற்கரசி கேட்க,
சம்பந்தர் புனல்வாதத்தில் வென்றால் தாங்கள் கழுவேறுவதாக சவால் விட்டனர்.
சம்பந்தர் தோற்றால் அவர் ஏறவேண்டும் என்று சவால்.
ஓடும் ஆற்றில் இட்டனர். சம்பந்தரின் சுவடி திருவேடகத்தில் கரை ஒதுங்கியது.
அதனால்தான் அந்த பெயர் அந்த ஊருக்கு வந்தது.
சமணர்களின் சுவடி அடித்துக்கொண்டு போனது.
தோற்றார்கள் சமணர்கள்.
கழு ஏறினார்கள்.
இறந்தார்கள்.
சரி, அவர்களை மதம் மாற்றிவிட்டிருக்கலாமே என்று இன்றுள்ளவர்கள் கேட்டால்?
நமது பதில்: அதே கோரிக்கையை சமணர்கள் வைத்திருக்கலாமே?
நீங்கள் இந்த கேள்வியை சமணர்களிடம் கேட்டிருக்கலாமே?
போய் அவர்களிடம் கேட்பதை விட்டுவிட்டு
இங்கு வந்து கேட்கிறார்கள்.
வைதீக தர்மத்தை நிலைநாட்ட சங்கரரும் வாதம் செய்தார்.
சந்நியாசம்தான் வழங்கினார். அதுதான் சவால் அங்கு.
இங்கு இது சவால்.
இத்தனைக்கும் தான் தோற்றால் ஸந்யாஸத்தை விடுத்து சம்சாரியாகிறேன்
என்று பெரும் பாவத்தை முன்னிறுத்தி சவால் விட்டார் சங்கரர்.
சரி. இதை சம்பந்தர் தடுத்திருக்கலாமே?
மன்னனிடம் சென்று மன்னா, அவர்களை மன்னியுங்கள்.
உயிர் பிச்சை அளியுங்கள் என்று சொல்லியிருக்கலாமே?
சைவம்தான் சிவமயமாயிற்றே?
அன்புதானே சிவம்?
கேட்பார்களே, பதில் சொல்லவேண்டுமே?
ஒரு மடாதிபதி, மன்னனின் தீர்ப்பில் தலையிடக்கூடாது.
இதற்கு பெயர்தான் செக்யுலரிசம்.
ராமனை செருப்பால் அடிப்பதோ,
நாத்தீகம் பேசுவதோ,
மற்ற மதத்தை அவதூறாக பேசுவதோ அல்ல.
பல நூற்றாண்டுகள் முன் மன்னனின் தீர்ப்பில் சர்ச்சுகள் தலையிட்டு,
தண்டனைக்கு பாவமன்னிப்பு தந்து விடுவித்தன.
குற்றங்கள் அதிகரித்தன.
மன்னனால் எதுவும் செய்ய முடியவில்லை.
அப்போது சர்ச்சுகள் அரசாங்க நடவடிக்கையில் தலையிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டு,
அரசாங்கம் மத தலையீடு இல்லாமல் செக்யுலராக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
சட்டம் இயற்றப்பட்டது.
ஹிந்து மதத்தில் எந்த மன்னனின் தீர்ப்பில் எந்த மடாதிபதி என்று தலையிட்டார்?
அதனால் இந்த தீர்ப்பில் தலையிட முடியாது,
தனக்கு உரிமை இல்லை.
மீறி தலையிட்டால் எல்லை மீறியதாகும் என்று தர்மத்தின் கீழே விலகினார் சம்பந்தர்.
இவர்தான் கொன்றார்கள் என்கிறார்கள்.
அவரிடம் என்ன படையா இருந்தது தண்டனையை நிறைவேற்ற?
அவர் என்ன மன்னனா?
படை இருந்திருந்தால் நெருப்பு வைத்தவர்களை கொல்லாமல் பாட்டு ஏன் பாடினார்?
அன்று நம்மை இம்சித்த சமண பவுத்தம் இன்றும் இருக்கிறது. யாருக்கும் தொந்தரவில்லை அவர்களால்.
சமுதாயத்தில் பெரும் நன்மைகளை செய்துவருகிறார்கள்.
எத்தனையோ பவுத்த கோவில்கள் உள்ளன.
அவர்களாலும் யாருக்கும் தொந்தரவில்லை.
அடைக்கலம் கேட்டு வந்த தலாய் லாமாவுக்காக சைனாவுடன் போரிட்டு தோற்றோம்.
இப்போது இஸ்லாமும், கிருஸ்த்தவமும் நாத்தீகர்களும் செய்து வரும் அட்டூழியங்களை அவர்கள் அன்று செய்தார்கள்.
மன்னன் தண்டித்தான். இதில் சம்பந்தர் மீது என்ன குற்றம்?
Post from Anand Venkat (Edited)
Subscribe to:
Posts (Atom)