Monday, 19 October 2020

*கிருஸ்தவ ஆலயத்தில் #காவிகொடி🚩*

*"இந்து மதம்"* என்னும் தர்ம நெறி இன்னும் சில ஆண்டுகளில் புதைய போவது உறுதி..! அதற்கான வேலைகளை கடந்த 270 ஆண்டுகளில் கிறித்தவ மிஷினரிகள் ஏற்கனவே 50% முடித்துவிட்டன..! (200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களாலும் 70 ஆண்டுகள் காங்கிரஸ் குடும்பத்தாலும்) இன்னும் சில ஆண்டுகளில் தன் இலக்கை அடையபோகிறது..! ஆம்... இந்துக்கள் அனைவரும் மதம் மாறினால் தான் இந்து மதம் அழியும் என்றில்லை... இந்து தர்மத்தின் அடையாளங்களையும், வரலாறுகளையும் சடங்குகளையும் திரித்து கூறினாலே போதும் அது அழிந்து விடும்..! அந்த அடையாளங்களை அழிக்கும் வேலைகளை தான் செய்து வருகின்றன இந்த கிறிஸ்தவ மிஷினரிகள்... இந்த மிஷினரிகள் இந்தியாவில் காலூன்றி 270 வருடங்களாய் மதம்மாற்றும் தொழிலை செய்து வந்தாலும் இந்தியாவை கிறித்தவ நாடாக இன்னும் இவர்களால் மாற்ற முடியவில்லை... காரணம் பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு நாம் கடைபிடிக்கும் வழிபாடு முறைகளும் சடங்குகளும் தான்.... இதை நன்கு புரிந்து கொண்ட மிஷினரிகள் இந்த வழிபாடுகளை தங்கள் வசமாக்கி அது காலம் காலமாக கிறித்தவத்திற்கு சொந்தம் என பொய் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டன..! சரி, இந்த மிஷினரிகள் அப்படி என்ன தான் செய்கின்றன... பார்ப்போம்.... 1.திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கிறித்தவராம்... பைபிளில் வரும் தாமஸ் என்பவர் பரங்கி மலையில் அமர்ந்து சொல்ல சொல்ல தான் திருவள்ளுவர் திருக்குறளே எழுதினாராம்.... இதற்காக பல போலியான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்களாம்... இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவை தான் உண்மை என வரலாறு மாற்றி எழுதப்பட போகிறது... நாமும் எது எப்படி போனால் என்ன என்று விரல் சூப்பி சென்று விடுவோம்..! 2.பகவத்கீதையில் கிருஷ்ணரும் அர்ஜீனரும் பேசியவற்றை, இயேசுவும் தாமசும் பேசியதாக ஸ்லோகங்களில் பெயர்களை மாற்றி சர்ச்சுகளில் படிக்கின்றனர் இந்த *கேவலவாதிகள்...* 3.யானைக்கு யர்ரம் னா குதிரைக்கும் குர்ரம் என்பதை போல், இந்து வேதங்களில் உள்ள வாக்கியங்களை திருடி எதுகை மோனை அமைத்து அதற்கு அவர்களே ஒரு அர்த்தமும் கொடுத்து அதில் இயேசுவை பற்றி தான் சொல்லியிருக்கிறது என்று பிரச்சாரம் செய்கின்றனர் இந்த மிஷினரிகள்... *'சமஸ்கிருதம்'* என்றால் என்ன என்றே தெரியாத நம்மாளும் இந்த விஷபூச்சிகளின் பேச்சை நம்பி விடுகிறான் என்பதே கொடுமை..! 4.இந்துக்கள் கந்த சஷ்டி கவசம் பாடுகின்றனர்... அதற்கு இணையாக இவர்கள் அந்தோனியார் சஷ்டி கவசத்தை தயார் செய்துவிட்டனர்..! 5.இந்துக்கள் காமாட்சி அம்மன் விளக்கு வீட்டில் வைத்துள்ளனர்... அதற்கு இணையாக காமாட்சியை தூக்கிவிட்டு மேரிமாதா விளக்கும் தயார் ஆகிவிட்டது..! 6.கோவில்களின் கொடிமரம், சிலைகள் வடிவமைப்பு, தேர்பவனி, முடி காணிக்கை என அனைத்தும எடிட், காப்பி & பேஸ்ட் செய்யப்பட்டுவிட்டது கிறித்தவத்தில்..! 7.விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கு இணையாக இயேசு சகஸ்ரநாமம் தயார் ஆகிவிட்டது..! 8.இந்தியா உலகிற்கு அளித்த கொடையான யோகாவையும் இந்த ஜென்மங்கள் விட்டுவைக்கவில்லை..! *"இயேசு யோகா"* என்ற பெயரில் வகுப்புகளையே நடத்த ஆரம்பித்துவிட்டனர்..! 9.அகத்தியர் மலை *அகஸ்டின்* மலையாக மாற்றப்பட்டு வருகிறது..! சில நடுநிலை நக்கிகளும் இதை *மதசார்பின்மை* என்ற பெயரில் இந்த அநியாயங்களை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர்... உண்மையில் இது மதசார்பின்மை அல்ல... மிஷினரிகள் செய்யும் கலாச்சார கற்பழிப்புகளை எதிர்க்க தெரியாத *கோழைத்தனம்..!* இன்னும் ஏராளம் இருக்கின்றன..! *"சரிப்பா இப்படிலாம் அவங்க பண்ணா உன் இந்து தர்மம் அழிஞ்சுடுமா..? அது என்ன அவ்ளோ வீக்கா..?"* என்று கேட்கும் அதிமேதாவிகளே, முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இவர்களின் வரலாற்று திணிப்புகளாலும், வழிபாடுகளை காப்பி அடிப்பதாலும் இந்து தர்மம் அழியாது... ஆனால், மறையும்..! தனித்தன்மைகளை இழக்கும்... இரண்டும் ஏறத்தாழ ஒன்று தான்..! *"ஆணிவேரை இழந்த மரமும், அடையாளத்தை இழந்த இனமும்"* நிலைத்து வாழ வாய்ப்புகள் இல்லை என்பதை உங்கள் மரமண்டையில் முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள்..! இந்த மதமாற்றும் வேலையும் மரபுமாற்றும் வேலையும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் தான் நடக்கிறது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்..!ஆனால், அது நம் வீட்டின் அருகாமையில் எப்போதோ வந்துவிட்டது...பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடற்கரை, பூங்காக்கள் என எங்கும் பரப்பபடுகின்றன இந்த திணிப்பு வேலைகள்..! இவர்களின் ஏமாற்று வேலைகளை ஒடுக்க அனைவரிடமும் ஒரே மனபாங்கான ஒற்றுமை இல்லை..! இதுவே நம் பலவீனம்..! *இதுவே மிஷினரிகளின் பலம்..!* சரி... இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்..? இந்த மிசினரிகளின் போலித்தனத்தை நம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு கொடுப்பதே இவர்களின் திணிப்புகளை தடுக்கும் ஒரே வழி..! (சில) கிறித்தவ பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்துங்கள்... நடுநிலைகளே, இந்து-கிறிஸ்டின் என்று ஒருவன் பேச ஆரம்பித்துவிட்டால் அவனை இந்து மத வெறியனாக பார்க்கும் உங்கள் எண்ணத்தை முதலில் கைவிடுங்கள்... நமது அடையாளங்களையும் மரபுகளையும் காப்பாற்றிக் கொள்ளவும், நம் மக்களுக்கு அதற்கான விழிப்புணர்வை கொடுக்கவும், எங்களுக்கு வேறு வழி தெரிவதில்லை. இது யாரையும் புண்படுத்தவும் அல்ல... அனைத்து மதங்களையும் மதிப்பது நம் பெருமை... நம் அடையாளங்களை அந்நிய மதவெறியவர்களிடம், மதம் பரப்பி நாடுபிடிக்க துடிக்கும் அயல்நாட்டு தீயசக்திகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை... --Rathnam Murugesan

பிறப்பால் வர்ணங்கள் இல்லை

பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! - இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத திராவிடக் குஞ்சுகள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டி எலும்புகளைக் கவ்விக் கொண்டிருக்கிறது: ----------------------------------------------------------------------------------- உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது. சமஸ்கிருதம் தெரியாமலேயே நீங்கள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் இட்டுக்கட்டி விடும் போது சமஸ்கிருதம் அறிந்த என்னால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லிவிட முடியும். புருஷ சூக்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்: --------------------------------------------------------------------------- ”பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” (ரிக் வேதம் 10-90-12) வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்: ----------------------------------------------------- பிராமணஸ்ய - பிராமணன் உடைய; முகமாஸீத் - முகமானது பிரகாசமாய் இருத்தல்; பாஹீ - தோள்கள் வலிமையாக ராஜான்ய - சத்திரியர்கள் க்ருத - மத்திய ஊரு - தொடை ததஸ்ய - தத்துவம் நிறைந்த யத் வைஷிய - இந்த வைஷியர்கள் பத்ப்யாகும் - பாதமாக சூத்திரோ - சூத்திரன் அஜாயத் - வலிமைமிகுந்தவனாக (ஆஜானபாகு). ஸ்லோகத்தின் பொருள்: -------------------------------------- வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும், அதாவது பார்வையில் நேர்மை, எண்ணத்தில் தூய்மை, வாயில் வாய்மை பொருந்தியவனாக இருத்தல் வேண்டும். பிரம்ம தேவரின் முகத்தை ஒத்திருத்தல் வேண்டும். இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவனால் போர்கலையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும். வைசியனாவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும். சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த உலக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும் அதற்கு அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும். இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது? ------------------------------------------------------------------ மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது? வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன். பிறப்பால் வர்ணங்கள் இல்லை - மனு தர்மம்: -------------------------------------------------------------------- பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம், “ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே” அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது. இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது: -------------------------------------------------------------------- ஜன்மனா - பிறப்பால்; ஜாயதே - பிறந்த அனைவரும்; சூத்ர - சூத்திரரே; கர்மணா - தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ - இருபிறப்பாளனாக; ஜாயதே - பிறப்பாளன் ஆகிறான். மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்த்தத்தில் ஜ, ஜா என்னும் வார்த்தைகள் எங்காவது காண முடிகிறதா? ------------------------------------------------------------------------- --Saravanaprasad Balasubramanian