Saturday, 4 December 2021
காசிக்குச் செல்பவர்கள்
காசிக்கு செல்லும் தமிழர்களா நீங்கள் ?... இதோ உங்களுக்காக...
காசிக்குச் செல்பவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகள் இரண்டு.
ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?
இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்:-
காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!
அதன் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் என்ன?
கீழே கொடுத்துள்ளேன்.
அனைவரும் தங்கலாமா?
இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.
சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?
அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது.
முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:-
Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi - 221 001 (U.P)
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404
(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)
Naat Koat Satram
Location Godowlia, Tanga Stanad
Behind Sushil Cinema
Varanasi
கட்டணம் உண்டா?
உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.
உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.
ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்
அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.
மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.
எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள்.
இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்
டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்
குளியல் அறைகளில் Water Heater உண்டு
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு
சரி உணவு?
விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.
1
காலைச் சிற்றுண்டி:- நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு.
கட்டணம் ரூ.35:00 மட்டுமே
2.
மதிய உணவு: - நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40.00 கட்டணம்
ரூ.4,000.00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.
3. மாலை 4 மணி டீ உண்டு
4. இரவு 7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே
உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு.
- நண்பரின் முகநூல் பதிவு.
Monday, 29 November 2021
இந்தியாவின் வரலாறு
இந்தியாவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடங்களில் பிழை இருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? விரிவாக கூறவும்.
சுருக்கமாகவே கூறுகிறேன். இந்தியாவின் வரலாறு காங்கிரஸ் அரசால் உண்மைகள் மறைக்கப்பட்டு போலியாக எழுதப்பட்டது .
1.அலெக்சாண்டரை புருஷோத்தமன் போரில் வென்றதையும் பஞ்சாப் தாண்டி இந்தியாவினுள் நுழைய முடியாமல் திருப்பி அனுப்பியதையும் வரலாறு எழுதவில்லை. புருஷோத்தமன் போரில் தோற்றாலும் அலெக்சாண்டர் நாட்டை திருப்பி கொடுத்தாராம் . அப்படி எத்தனை நாட்டை அலெக்சாண்டர் அந்த அரசர்களுக்கே திருப்பி கொடுத்தார்? போகும் வழியில் கொல்லப்பட்ட அலக்சாண்டரை நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வரலாறில் எழுதியுள்ளனர்.
2. பிரித்திவி ராஜ் சவுகான் தரெய்ன் போரில் முகமது கோரியால் கொல்லப்பட்டதாக தான் பள்ளி வரலாற்றுப் புத்தகத்தில் படித்தேன். உண்மையில் பிரித்வி ராஜ் சவுகானை குருடாக்கி கோரி சிறைப்பிடித்து ஆப்கன் அழைத்து சென்றான். குருடானாலும் தன்னால் அம்பு விட முடியும் என்ற பிருத்வியை சோதனை செய்ய கோரி வில்லைக் கொடுத்ததான். உடனே கோரியை அம்பெய்தி கொன்றார் பிரித்வி ராஜ். அதன் பின்னரே ஆப்கான் வெறியர்களால் கொல்லப்பட்டார்.போன வருடம் பத்திரிக்கை செய்தியை படித்த பின் தான் எனக்கு உண்மை தெரிந்தது.
3.முகமது கஜினி 17முறை படையெடுத்து தோற்றான் என்றும் 18வது முறை தான் வென்று இந்தியாவை கொள்ளையடித்தான் என்றும் வரலாறு புத்தகம் சொல்கிறது. உண்மையில் 17 முறையும் போரில் வென்ற கஜினி ஒவ்வொரு .முறையும் நாட்டை கொள்ளையடித்தான். 18வது முறை சோமநாதர் ஆலயத்தில் பணிபுரிந்த 5000 பிராமணர்களை வெட்டிக் கொன்று விட்டு , கோவிலையும் இடித்துவிட்டு கோவிலில் இருந்த பல டன் தங்க நகைகளை நூற்றுக்கணக்கான யானைகளில் ஏற்றி திருடிச் சென்றான்.
4.அக்பர் தி கிரேட் என்கிறது வரலாறு. அக்பர் தி வொர்ஸ்ட் தான் உண்மை வரலாறு. ராணி துர்காவதியிடம் தோற்ற அக்பர் வரலாற்றை மறைத்தது பள்ளி வரலாறு.
5. திப்பு சுல்தான் விடுதலை வீரர் என்கிறது வரலாறு . மதம் மாற மறுத்த ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை அவன் படுகொலை செய்ததை மறைத்துவிட்டது.
6.முகலாயர்களை பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டு வீர சிவாஜியைப் பற்றி ஒரு பாராவும் , விஜய நகர பேரரசை தோற்றுவித்தவர் ஹரிஹரர் , புக்கர் என்ற இரு சகோதரர்கள் என்ற ஒற்றை வரியில் விஜய நகர வரலாற்றை முடித்து விட்டது.
7. நத்தம் கணவாய் போரில் 500 பிரிட்டிஷ் படைவீரர்களை கொன்று குவித்து அவர்கள் கொள்ளையடித்த அழகர் சிலைய மீட்ட தன்னரசு நாட்டு கள்ளர்கள் பற்றி ஒரு வரியும் இல்லை. ஆனால் பிரிட்டிஷ்காரன் எழுதிய வரலாற்றில் இச்சம்பவம் உள்ளது.
8.உப்பு பிரிட்டிஷ்காரன் தவிர மற்றவர்கள் விற்க தடை விதித்து பாரம்பரியமாக உப்பு விற்ற உப்புக் குறவர்கள் , லம்பாடிகள் , எருகுலர் ,பஞ்ஞாராக்கள் ஆகியோர்களை திருடர்கள் என்று பொய் குற்றம் சாட்டி குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்த்து அவர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் கொன்று குவித்ததை புத்தகத்தில் மறைத்தனர் . தக்கீ , லம்பாடி உள்ளிட்ட பல பழங்குடியினர்களை கொன்று முற்றிலும் அழித்துவிட்டனர் பிரிட்டிஷ் கொலைகாரர்கள்.
10.பிரிட்டிஷ் காரனின் வருகையால் இந்தியா வளர்ந்தாக புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது . அவன் 200 ஆண்டுகள் இந்தியாவில் கொள்ளையடித்த பொருட்களை திருப்பி கொடுத்தால் ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் 50 கோடி வரை இந்திய அரசு வழங்கலாம். அந்தளவு திருடியுள்ளது. இவர்கள் திருட்டின் ஆதாரம் இங்கிலாந்து ராணி கிரிடத்தில் இருக்கும் கோஹினூர் வைரம் தான் சாட்சி
11.மதமாற்றம் செய்ய வந்த கான்ஸ்டாண்டி ஜோசப் பெஸ்கி , கால்டுவெல் போன்றவர்களை தமிழுக்கு தொண்டு செய்ய வந்தவர்கள் என போலியாக எழுதியது வரலாறு.
12.கொலைக்காரன் டயரை சுட்ட உத்தம் சிங் வரலாற்றை பாடப்புத்தகத்தில் இருந்து மறைத்தது.
13.காந்தி தான் இந்தியாவிற்கு அஹிம்சை முறையில் விடுதலை வாங்கி தந்தார் என்று பொய் வரலாறை எழுதியது.
14.நேதாஜியின் தாக்குதலும் பம்பாய் கலகமும் விடுதலை போருக்கு இந்தியர்களை ஆயுதமேந்த வைத்ததையும் , பிரிட்டிஷ் தளபதிகளை அவர்கள் கீழ் பணிபுரிந்த இந்தியப் படையினர் அடித்து கொன்றதும் வெள்ளையர்களை காண்டாலே நாடு முழுக்க இந்தியர்கள் தாக்குதல் செய்ய தொடஙகிய பின்னரே விடுதலை கிடைத்தது என்பதை முற்றிலும் மறைத்தது.
15.பூலித்தேவர் , அம்மங்கா , கிட்டூர் ராணி , ராணி வேலு நாச்சியார் எல்லாம் வெள்ளையனை தோற்கடித்த வரலாற்றை மறைத்தது.மருதுபாண்டியர்கள் குடும்பத்தில் ஒருவரைக் கூட விடாமல் மொத்த குடும்பத்தையும் அவர்களுடன் 300 பேருக்கும் மேற்பட்டவர்களை ஒரே நாளில் தூக்கிலிட்டு கொன்றதையும் மறைத்துவிட்டனர்.
16.ஒரு நாள் கூட விடுதலைக்கு போராடாத பெரியாரை விடுதலை வீரர் பட்டியலில் சேர்த்தது.
17.சோழரும் பாண்டியரும் கம்போடியாவை தாண்டி இந்தோனேசியா வரை ஆட்சி செய்ததை மறைத்தது. பெரும் கொலைகாரன் அசோகனை புத்தர் போன்று சித்தரித்தது.
18.சேரனின் வரலாற்றை எழுதாமலே விட்டது.
19.முழு காஷ்மீரும் இந்தியா மீட்டதைப் போல் எழுதியது.
இன்னும் நிறைய பொய் வரலாறுகள் தான் நாம் பள்ளியில் படித்தது.
Courtesy: Saravanaprasad Balasubramanian.
Subscribe to:
Posts (Atom)