Thursday, 8 October 2020

அழிவு நிலையில் இந்துக்களும் , இந்துக்கோவில்களும்

 தாய் மதத்தை தவிக்க விட்டு விட்டு...

தரம் தாழ்ந்து...
'#பகுத்தறிவு' இல்லாத பைத்தியகாரர்களாகி விட்ட #இந்துக்களே!
ஒரு அமெரிக்க கிறிஸ்தவரின் "பகுப்பாய்வை'' பாருங்கள்.
இதற்கு துணையாக இருப்பது வேறுயாருமில்லை !!
#இந்துக்களே!" என்கிறார்.
ஸ்டீஃபன் நேப்,
'Crime Against India and Need to Protect Ancient Vedic Traditions'
அதாவது,
'இந்தியாவுக்கு எதிரான குற்றமும், பழம்பெரும் வேதக் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியமும்'
என்னும் ஓர் ஆராய்ச்சிப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் வெளிடப்பட்டுள்ள இப்புத்தகம், இப்போது வசூலை வாரிக் குவித்து வருகிறது.
அவர் தென் இந்தியாவில் உள்ள, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்கள் எப்படி,
மக்களாட்சியில்...
மிகவும் நலிவடைந்து விட்டன. என்பதைப் “புட்டு புட்டு” வைக்கிறார்.
இப்போது,
'மதச் சார்பற்ற நாடு' என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவில்...
இஸ்லாமுக்கும், கிறித்தவத்துக்கும் உள்ள சலுகைகள்...
இந்து மதத்துக்கு இல்லாமல் போனது எப்படி?
என்னும் துயரத்தை நன்றாக விளக்குகிறார்.
இன்று,
சில பல சுயநல காரணங்களுக்காக மாற்று மதத்தினரிடம்...
அரசியல்வாதிகள் அடங்கி போகிறார்கள்.
இன்றைய நிலையில் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் அந்தந்த மதத்தினரால் பராமரிக்கப் படுகின்றன.
ஆனால்,
புராதன இந்துக் கோவில்களோ, 1951-ம் ஆண்டில் கொண்டு வரப் பட்ட, “இந்து மதம் மற்றும் தர்மஸ்தாபனங்கள் சட்டப்படி” (Hindu religious and charitable endownments Act) அரசால் எடுத்துக் கொள்ளப் பட்டு விட்டன.
மதச் சாற்பற்ற அரசின் அதிகாரிகள்,
ஒவ்வொருக் கோவிலின் நிர்வாகத்திலும்,
ஆகம விஷயங்களிலும்,
அவற்றின் சொத்துக்களைக் கையாள்வதிலும்,
தங்கள் “மூக்கை நுழைக்க” ஆரம்பித்து விட்டனர்.
இந்த இடையூறு, மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்குக் கிடையாது."
இவ்வாறு
தெளிவாக சொல்கிறார் ஸ்டீஃபன் நேப்.
மேலும் அவர்,
“ ஹிந்துக் கோவில்கள் எல்லாமே, பழங்காலத்தில் இருந்த அரசர்களால் கட்டப் பட்டதாகும்.
அவைகளுக்கு சொத்துக்களையும், ஆபரணங்களையும், அவர்கள் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அவர்கள் பரம்பரையினர், தங்களுக்கு, இக்கோவில்களில் உரிமை ஏதும் இருப்பதாகக் கோர வில்லை.
இப்போது உள்ள ஜனநாயகத்தில்...
இத்தகையக் கோவில்கள் ஒன்று கூடக் கட்டப் படவில்லை.
அப்படி இருக்கும் போது, தங்களுக்குக் கொஞ்சமும் உரிமை இல்லாத் இவ்விஷயத்தில்...அரசு எப்படி நுழைந்து.?
எப்படி இந்து மத வழிபாட்டுத் தலங்களில் தலையிட முடியும்?என்றும் கேட்கிறார்.
ஆந்திராவில் உள்ள 43,000 இந்து கோவில்களின் ஆண்டு வருமானத்தில், 18 % தான், இக்கோவில்களுக்கு செலவழிக்கப் படுகிறது.
மிச்சமுள்ள 82%, அரசின் மற்ற நிர்வாகச் செலவுகளுக்குத் தாரை வார்க்கப் படுகிறது.
திருப்பதி ஸ்ரீ வேங்கடாசலபதியின் ஆண்டு வருமானம் 3,100 கோடி ரூபாய்.
இதில், 83% அரசு எடுத்துக் கொள்கிறது.
ஆந்திர அரசு, 10 புராதனக் கோவில்களை இடித்து...
ஒரு “கால்ஃப்” மைதானம் கட்டுகிறது.
இதைப் போல,
10 மசூதிகளையோ, மாதாகோவில்களையோ இடிக்க எண்ணியிருந்தால் என்ன ஆகி இருக்கும்?" என்று
கேட்கிறார் ஸ்டீஃபன் நேப்.
சிந்திக்க வேண்டிய கேள்வி!!.
கர்நாடகாவில், இந்துக் கோவில்கள் மூலம் ஆண்டுக்கு வரும் 79 கோடி வருமானத்தில்...
7 கோடியைத் தாராளமாக இக்கோவில்களின் பராமரிப்புகளுக்கு அரசு செலவிடுகிறது.
இதில் வயிற்றெரிச்சல் என்னவென்றால்...
59 கோடியை, ஹஜ் யாத்திரைக்குத் திருப்பி விடப் படுகிறது என்பது தான்.
மேலும் இதில், 13 கோடி ரூபாயை சர்ச்கள் பராமரிப்புக்காக அளிக்கிறது கர்நாடகஅரசு.
“ஊரான் வீட்டு நெய்யே: என் பெண்டாட்டி கையே” என்பது இது தான்.
இதுவும்,
ஸ்டீஃபன் நேப்பின் “கூர்நோக்கு பார்வை” தான்.
கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் வருமானத்தை...
அங்குள்ள ஆலய ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட நிதி இல்லாமல்,
அனைத்தையும் சுரண்டிக் கொண்டு போய் விடுகிறார்கள் அரசு தரப்பு.
மேலும்,
இப்போது 'உள் நுழைவு டிக்கெட்டின்' இமாலய விலை பற்றி எவரும் எதிர்த்து பேசாதது கூட வருத்தமளிக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலைச் சுற்றியிருக்கும் வனத் துறைக்கு சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் கொண்டக் காடுகளை...
கிறித்தவர்களுக்குக் கொடுத்து, காட்டை அழித்து வருகிறார்கள்.
இப்போதுள்ள,
“திருவாங்கூர்-கொச்சி சுயாட்சி தேவஸ்வம் போர்டை”
ஓர் அவசரச் சட்டத்தின் மூலம்,
'கலைத்து விடலாமா?' என்று கூட அரசு எண்ணி வருகிறது.
இதுவும் ஒரு அமெரிக்கப் கிறிஸ்தவரின் பகுப்பாய்வு தான்.
நிச்சயமாக, ஸ்டீஃபன் நேப் ஒரு ஹிந்து அல்ல.
இது போல, ஒரிஸ்ஸாவில் உள்ள மிகப் புகழ் பெற்றத் தலமான, பூரி ஜகந்நாதருக்குச் சொந்தமான 70,000 ஏக்கர் நிலத்தை அரசு “ஸ்வாஹா” செய்து விட்டது... என்றும்,
மஹாராஷ்ட்ராவிலும் சுமார் 4 லட்சம் கோவில்கள் நலிவு அடைந்து விட்டதாகவும் வருத்தத்துடன் விவரிக்கிறார்.
நமது தமிழகத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
இந்து அறநிலைய சொத்துக்கள் எப்படியெல்லாம் அழிந்து வருகின்றன...
என்றும்,
கோவில்களுக்கு வர வேண்டிய வருமானம் வசூலிக்கப் படுவதே இல்லை...
என்றும்,
மண்டபபங்களோ, மதில்சுவர்களோ, திருக்குளங்களோ, கொஞ்சம் கூடப் பராமரிக்கப் படுவதில்லை...
என்றும்,
ஆலய ஊழியர்களுக்கு சம்பளம் முறைப்படி வழங்கப்படுவதில்லை...
என்றும்,
அரசு அதிகாரிகள்,
கோவில் சொத்துக்களை தங்கள் இஷ்டம் போல விற்று, வேறு காரியங்களுக்குச் செலவலிப்பது பற்றியும்...
புள்ளி விவரங்களுடன் ஸ்டீஃபன் நேப் விளக்குகறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ஏற்பட்டுள்ள ஜனநாயக ஆட்சியில்...
இந்து மத ஆலயங்களுக்கு நிகழ்ந்துள்ள இந்தக் கதிக்கு காரணம்...
முக்கியக் காரணங்களாகக் கூறுகிறார் இவ்வாசிரியர்.
இந்துக்களே!
இனியாவது விழிப்படையுங்கள்.
நம் ஆலயங்களில்,
அரசின் குறுக்கீடுகளைக் களைத்தெறியப் பாடுபடுங்கள்.🙏
ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யும் பிரிவினைவாதிகள் பேச்சைக் கொஞ்சம் கூடக் கேட்காதீர்கள்.
ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் இந்துக் கோவில்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளை அம்பலப் படுத்துங்கள்.
கட்சி பாகுபாடு இன்றி ஒற்றுமையுடன் தட்டிக் கேளுங்கள்.
இனிவரும் காலத்திவாவது...
நமது இந்து மதத்தை காப்பாற்ற முன் வாருங்கள்.
பகிர்ந்து வந்த தகவல்
MC முருகேசன்.பருகூர்

Wednesday, 7 October 2020

தஞ்சை நிசும்பசூதனி

 முன்பொருமுறை எழுதிய நிசும்பசூதனி கட்டுரையை இப்போது இங்கு பதிவிடுகிறேன். நன்றி. 

                   தஞ்சை நிசும்பசூதனி 

  மகா சரஸ்வதி எழில் வடிவினள். வெண் பனியின் மலைச் சிகரத்தில் கருணைச் சிகரமாக அமர்ந்தாள். சிம்மத்தின் மீது அமைதியாக அமர்ந்து வீணாகானத்தில் லயித்திருந்தாலும், அம்பு, உலக்கை, சூலம், சக்கரம், சங்கம், மணி, கலப்பை, வில் ஏந்தி சந்திர ஒளியில் பிரகாசித்திருப்பாள். இமயக்கிரியில் அமைதிக் கோலம் பூண்டவள் வெகு விரைவிலேயே கோரக் கோலமாக சாமுண்டியாகவும், சும்ப, நிசும்பர்களை வதம் செய்யப்போகும் நிசும்பசூதனியாக வெகுண்டெழும் காலம் நெருங்கியது. 

சத்தியத்தின் நேர் துருவங்களாக, கொடுங்கோன்மையின் முழு உருவாக இருந்த சும்ப& நிசும்ப சகோத ரர்களின் அணுக்கத் தொண்டர்களான சண்டனும், முண்டனும் இமயக்கிரியில் திரிந்திருந்தபோது கௌசீகியை கண்டனர். சிம்மத்தின் மீது அமர்ந்த அழகுச் சிகரத்தைப் பார்த்து திகைத்துப் போயினர். தம் அசுரத் தலைவர்களுக்கு இவளை அர்ப்பணித்தால் என்ன என்று குரூரமாக யோசித்தனர். சும்பனிடம் தாம் கண்ட பேரழகுப் பெண்ணைப் பற்றிச் சொல்ல காமம் தலைக்கேறியது, இவளே மாதேவி என அறியாத அற்பன் அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ள யோசித்தான். அவனின் அழிவு ஒரு விதையாக போக வடிவெடுத்து வந்தது. 

 அசுரனின் அரசவையில் அழகிய குரலையுடையோனான சுக்ரீவன் என்பானை அழைத்தான். 'எப்படியாயினும் இனிய மொழி பேசி அரசவைக்கு அழைத்துவா' என்றான். மன்னனின் கட்டளையை மாதேவ னின் வாக்காக ஏற்று அதிவிரைவாக இமயக் கிரியை அடைந்தான். கிரி கன்னிகையாக அமர்ந்திருந்த கௌசிகீயை பார்த்து, ''சும்பனின் அரசவையை ஒளிரூட்டும் பேரழகு படைத்தவளே...'' என்று தொடங்கி அமிர்த வாக்காலும், மயக்கு வார்த்தைகள் பேசி சம்மதமா என்று முடித்தான். இவள் சம்மதித்து விடுவாள் என்றே முகத்தைப் பார்த்தாள். அதேபோல அவளும் சம்மதம் என்றாள். ஆனால், ''யார் என்னுடன் போரிட்டு வெற்றி பெறுகிறார்களோ அவர்களையே மணப்பேன். அதையே நான் வரமாகப் பெற்றிருக்கிறேன்'' என்றாள். ஒரு வஞ்சகப் பேச்சுக்கு மறு வார்த்தையாக இன்னொரு விஷத்தை வார்த்தைகளில் தோய்த்துப் பேசினாள்.

கடுங்கோபத்தோடு நுழைந்தவன் விவரம் சொல்ல சும்பன் தூம்ரலோசனனை அழைத்தான். 'தூம்ரம்' என்றால் 'புகை' என்று பொருள். பொங்கும் புகையோடு பெரும் படையோடு கிளம்பியவன் கௌசிகீயின் எதிரே கர்ஜிக்க, அவள் வாகனமாக இருந்த சிம்மத்தின் ஹூங்காரத்திலேயே கரைந்து வீழ்ந்தான். தூம்ரலோசனன் மாண்டான் என்பதை கேள்வியுற்ற சும்ப&நிசும்பரின் படைத் தலைவர்களாக விளங்கிய சண்டனும், புத்தியற்ற வெறும் உடற் கொழுப்பு கொண்ட முண்டனும் எங்களுக்கு நிகர்த்தவள் யாரவள் என்று திமிறிக் கிளம்பினர். மாபெரும் படையோடு வந்தவர்கள் கௌசிகீயை பார்த்து, 'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அப்படியே எங்களோடு வந்துவிடு' என ஒரு அம்பை சிம்மத்தின் பிடரி பார்த்துச் செலுத்தினான். 

கௌசிகீயின் கண்கள் சிவந்தது. அசுரப் படையின் ஒரு பகுதியை தம் கதையாலே ஏவித் தாக்கியபோதுதான் முதன் முறையாக சிம்மவாஹினி சாதாரணவள் இல்லை. இவளே சாமுண்டி என்பதை சண்ட, முண்டர்கள் உணர்ந்தார்கள். இதற்குப் பின்னால் தேவர்களின் சூழ்ச்சியே நிறைந்துள்ளது என்று எண்ணியவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர். அதுவரை சாந்தமாக இருந்தவளின் நெற்றிப் பொட்டிலிருந்து மாகோரமிக்க அதிபயங்கர உருவோடு காளி வெளிப்பட்டாள்.

தெற்றுப் பற்களோடு கூடிய அதிகோர முகமும், செம்பட்டைச் சடையும், கன்னங்கரியவளாக இருந்தாள். கத்தியும், கழுத்தைச் சுருக்கிட்டு இழுத்துப் போடும் பாசமும், கபாலம் சொருகிய கட்வாங்கம் என்ற குண்டாந்தடியும், அனேக கபாலத்தை மாலையாக பிணைத்து கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டாள். தலையில்லா உடலை இடையில் கட்டி முடிந்திருந்தாள். வரிப்புலியின் தோலை உரித்து சேலையாக்கி போர்த்திக் கொண்டிருந்தாள். உடல் முழுதும் ரத்தக் குழம்பை கஸ்தூரி சந்தனமாகப் பூசிக்கொண்டாள். உலகம் முழுதும் துழாவிப் புசிப்பது போல் நாவைச் சுழற்றியபடி இருப்பவளின் கண்கள் செந்தனல் துண்டங்களை எரிமலையாகப் பொழிந்தது. அவள் கர்ஜிப்பு தாங்காது அசுரர்களின் ரத்தமே உறைந்து போயிற்று.

எங்கேயோ மறைந்திருந்த தேவர்களும், கந்தவர்களும், ஏன் மகேசனும், பிரம்மா, விஷ்ணு போன்றோரும் அங்கு பிரசன்னமாயினர். காணுதற்கு அரியவளாதலால் வானுலகமே விழாக் கோலம் பூண்டது. சும்பனும்  நிசும்பனும் பதவியிழந்து பரலோகம் செல்வோமோ என்று அஞ்சினர். ஆனாலும், அசுர ரத்தமாயிற்றே... 'பராசக்தியே ஆயினும் பாதியாக வகிர்ந்து போடுவோம்' எனப் போர்க்களம் ஓடினர். 

ஒரு கணம் சூரியனை மறைத்து பூமியையே பிளக்கும் பேரதிர்வோடு நின்றிருக்கும் கௌசிகீயிலிருந்து வெளிப்பட்டிருக்கும் சாமுண்டியைப் பார்த்தார்கள். என் படைக்கு எம்மாத்திரம் இவள் என்று கால் உதைத்து நின்றார்கள். மகா யுத்தம் தொடங்கியது. பலப் படைக்கலன்களை அப்படியே விழுங்கி ஜீரணித் தாள். ரத்த ஆறு பெருக்கெடுக்க சும்பனும் அவள் போலவே இன்னொரு கோரவுரு எடுக்க, நிசும்பன்   அம்பைப் பொழிய தேவி அநாயாசமாக அழித்தாள். ஒட்டு மொத்த படைக் கலன்களையும் சிம்மமும்,     சாமுண்டியும் சம்கரிக்க சும்ப நிசும்பர்கள் பலம் மொத்தமும் சேர்த்துக் கொண்டு அருகே வர, தேவியின் வாள் நிசும்பனின் தலையை வெட்டியது. சும்பனை சூலத்தால் மார்பினில் பாய்ச்சினாள். சண்ட, முண்டர்களை அழுத்திக் கொன்றாள். தேவர்களும், வானவரும் கண்களில் நீர் பெருக இருகைகூப்பி துதித்தனர். 'ஜெய் நிசும்பசூதனி' என்று ஜெயகோஷம் எழுப்பினர். இதுவே மகா சரஸ்வதியான சத்தியம், தர்மத்தை நிலைத்துச் செய்ய வந்த நிசும்பசூதனி.

அது சோழர்களின் தொடக்கக் காலம். நிசும்பசூதனியே வெற்றித் தெய்வம். சத்ரு நாசம் செய்யும் மாகாளி என எண்ணிய சோழகுலச் சக்ரவர்த்தியான விஜயாலயச் சோழன் எண்ணூற்று ஐம்பவதாவது வருடம் தஞ்சையில் நிறுவினான். போருக்குச் செல்லும் போதேல்லாம் 'தஞ்சையை காப்பாய் தேவி' என்று அவள் பாதம் பணிந்துவிட்டுத்தான் யுத்த களத்திற்குச் செல்வானாம். மிகவும் ஆதாரப்பூர்வமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் ‘‘தஞ்சாபுரீம் சௌத சுதாங்கராகாம.... என்று தொடங்கும் வடமொழி வரிகளில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற காளி தேவியை அங்கு பிரதிஷ்டை செய்தான். தேவியின் அருளால் நான்கு கடல்கள் ஆகிய ஆடையை அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையை அணிவது போலச் சுலபமாக ஆண்டு வந்தான் என்று முடிக்கிறது. 

மாமன்னன் பரம்பரையை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் அவள் திருவடி பணிந்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவானாம். போருக்கு முன்பு லட்சம் படை வீரர்களாயினும் சரி இவள் சந்நதியில் வீழ்ந்து வெற்றி வரம் கோரி யுத்தகளம் ஓடுவார்களாம். இவளே தஞ்சையின் காவல் தெய்வம். தஞ்சையின் புகழை தரணியெங்கும் ஒலிக்க விட்ட காருண்ய சூலினி. செல்வம் பெருக்கித் தந்த அட்சய மாகாளி இவளே. அன்றிலிருந்து இன்றுவரை அதேப் பொலிவோடும், அதேசக்தியோடும் விளங்குகிறாள் நிசும்பசூதனி. 

தேவிமகாத்மியம் உரைக்கும் உருவத் தோற்றத்தை சிற்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள் சோழர்கள். மிக கோரமான உருவம். மூக்கு அழுந்தி அதற்குக் கீழே தெற்றுப்பற்கள் துருத்தியிருக்க ஒரு ஓரமாய் தலை சாய்த்து அரை பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் நிசும்பசூதனி. தீச்சுடர் போன்ற கேசம். வற்றிய தோலும், விலா எலும்புகளோடு கூடிய பதினாறு கைகள். அதில் விதம்விதமான ஆயுதங்கள். பாம்பை கச்சமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். கால்கள் மெல்லியனவாக இருந்தாலும் காலுக்குக் கீழே நான்கு  அசுரர்களை வதைத்து அழுத்தும் கோபத்தை சிற்பத்தில் வடித்திருப்பது பார்க்கப் பிரமிப்பூட்டும். இவர்களே சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன். யுத்த களத்தில் உக்கிரமாக போர் புரியும்போது நெஞ்சு நிமிர்த்தி எதிரியை நோக்கி பாயும் வன்மத்தையும், அதனால் முதுகுப் புறம் சற்று வளைந்து குழிவாக இருப்பதையும், எதிர்காற்றில் கபால மாலைகள் இடப்புறம் பறக்கும் வேகத்தையும் சிற்பமாக்கி கலையின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். பெண் எனும் சக்தி பொங்கியெழுந்தால் இப்படித்தான் வீருகொண்டெழும் என்பதே நிசும்பசூதனி சொல்லும் விஷயம். அதேசமயம் தர்மத்தின் பக்கம் நிற்கும் நீதி தேவதை.  

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியிலுள்ள  பூமால் ராவுத்தர் தெருவில் வடபத்ரகாளியம்மன் கோயிலென்று இதை அழைப்பார்கள். இக்கோயில் அமைந்துள்ளது.